ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!
முனைவர் தி. கல்பனாதேவி
6. கோட்சார, மாந்தி பலன்கள்
சந்திரன் முறை
பிறந்த நட்சத்திரம் உள்ள சந்திரன் சாதகத்தில் நிற்கும் இடம் சென்ம ராசி. சென்ம ராசி முதல் நவக்கிரகங்கள் தினசரி, வாரத்தில், மாதத்தில், வருடத்தில் உள்ள கோட்சார நிலைகளைக் கொண்டு கணக்கிடப்படுவது. இவை பொதுப்பலன். பாதி சரியாக அமையும்.
கோட்சார பலன் விவரம்
சந்திரன் வீட்டிலிருந்து எண்ணிப் பலனறியவும் 1 முதல் 12 வரை கீழேயிருக்கிற பலன்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது. திரு. ஆற்காடு வாக்ய பஞ்சாங்கம் இதனைக் கூறுகிறது. சரியா? என ஆராய வேண்டியது.
சூரியன்
1. நோய், அலைச்சல்
2. துன்பம், மனக்கவலை
3. நன்மை, பொருள்வரவு
4. விரோதம், அச்சம்
5. நோய், சண்டை
6. நன்மை, பொருள்சேரும்
7. பகை, அலைச்சல்
8. கவலை தரும், பீடை
9. அச்சம், சரீரபீடை
10. காரியசித்தி, சுகம்
11. சந்தோஷம், லாபம்
12. சோரபீடை, சத்ரு
சந்திரன்
1. உடல் ஆரோக்கியம், கவலை
2. தனவிரயம், செலவு
3. திரவியலாபம், சுகம்
4. விரோதம், வியாதி
5. காரியக் கேடு, நஷ்டம்
6. மகிழ்ச்சி, தனலாபம்
7. சுகவிருத்தி, சங்கடம்
8. பிராணபயம், சோரம்
9. காரியதாமதம், வியாதி
10. சந்தோஷம், சுகம்
11. லாபம், வருமானம்
12. தன்விரயம், துன்பம்
செவ்வாய், சனி, ராகு, கேது
1. சோகம், புத்திரக்குறைவு
2. தேகபீடை, விரோதம்
3. ஜெயம், லாபம்
4. வியாதி, பந்துவிரோதம்
5. பல சேதம், செலவு
6. லட்சுமிகரம் தனலாபம்
7. சிறைபயம், செலவு
8. மரணபயம், துன்பம்
9. காரிய நஷ்டம், பீடை
10. பணவிரயம், பகை
11. தனலாபம், வரவு
12. வியாதி செலவு
புதன்
1. பிரயாணம், சோகம்
2. நன்மை, நற்குணம்
3. புத்தக்குறை, பகை
4. சம்பத்து, சௌக்கியம்
5. கலகம், அவமானம்
6. தானியலாபம், பீடை
7. வாகனலாபம், கஷ்டம்
8. அனுகூலம், சுகம்
9. அவமதிப்பு, மறதி
10. லஷ்மீகரம், புகழ்
11. சந்தோஷம். சுகம்
12. பலநஷ்டம், விரோதம்
குரு
1. பொருளழிவு, செலவு
2. வருமானம், லாபம்
3. பிணி, வீண் நஷ்டம்
4. சிநேக விரோதம்
5. திரவியலாபம்
6. துயரம், விரோதம்
7. ஆரோக்கியம், விருத்தி
8. சோரம், தனவிரயம்
9. வஸ்திரலாபம், நலம்
10. அலைச்சல், பிரயாணம்
11. சுவா்ணலாபம், காரியசித்தி
12. கலகம், வியாதி
சுக்கிரன்
1. தனலாபம், சுகம்
2. லட்சுமிகரம், சுபம்
3. சௌபாக்கியம், செல்வம்
4. பந்துக்கூட்டம், நிம்மதி
5. திரவியலாபம், ரோகம்
6. மனக்கவலை, நஷ்டம்
7. ஸ்தீரிபீடை, பகை
8. பிரியம், உடல் சுகம்
9. அனுகூலம், ஆரோக்கியம்
10. பந்துவிரோதம், செலவு
11. கீர்த்தி, காரிய சித்தி
12. லாபம், சுகம், யோகம்
வீட்டு ஆதிபத்திய, கிரக காரகத்துவ வழிகளில் யோக தீய பலன்கள் ஏற்படும்.
சகல நவகிரகங்களும் 11ம் வீட்டிலும் செவ்வாய், சனி, ராகு, குரு, கேது, தவிர ஐவர்கள் 10லும் யோக பலனைக் கோட்சாரத்தில் செய்கின்றனா்.
எட்டுக் கிரகங்களும் சந்திரன் நின்ற இராசியிலும், பன்னிரண்டிலும் (1,12) தீமை செய்தாலும், சுக்கிரன் மட்டும் 1, 12 ல் யோகத்தை செய்யும்.
குரு, சுக்கிரன் தவிர ஏனைய எழுவரும் 9ல் தீமை செய்கின்றனர்.
புதன், சுக்கிரன் தவிர ஏனையோர் 8 ல் தீமை செய்கின்றனர்.
புதன், குரு தவிர ஏழு கிரகங்களும் ஏழில் நின்றால் தீமை செய்கின்றனா்.
திசாபுக்தி நடத்தும் கிரகம் சந்திரனுக்கு கோட்சாரத்தில் யோகமுடன், நிற்பது மேலும் யோகமே.
மாந்தி பலன்கள்
மாந்தி நின்ற ராசிநாதனும் மாந்தியுடன் கூடிய கிரகங்களும் சனி போல் கெடுப்பா் இலக்னத்தில் நிற்க நோய் தரும். ஊனம் வரும்.
* 2ல் நிற்க விஷ வார்த்தைகள் பேசுவர்.
* 3ல் நிற்க பின் சகோதரரைப் பகைத்தல்.
* 4ல் நிற்க மன துக்கம், சுகமின்மை, நிம்மதியின்மை.
* 5ல் நிற்க குருத்துரோகி, புத்திரதோஷம்.
* 6ல் நிற்க சுற்றமும் நட்பும் பகையாதல், பிரிதல்.
* 7ல் நிற்க களத்திர தோஷம்.
* 8ல் நிற்க விஷ ஆயுத பயம், தரித்திரம்.
* 9ல் நிற்க குதா்க்கவாதி.
* 10ல் நிற்க தொழில் மேன்மை, புகழ், பதவி கிட்டும்.
* 11ல் நிற்க திடீர் லாபம்.
* 12ல் நிற்க துாக்கமின்மை தீய கனவுகள்.
(10,11ல் மட்டுமே யோகம்தரும்) மேலும் மாந்தி சந்திரனுடன் கூடி 4,10 ல் அமர தாய்க்கு பீடை, சூரியனுடன் கூடி 3,9 ல் அமர பிதாவுக்கு பீடை.
சேர்க்கை
* இலக்னத்தில் மாந்தியுடன் இராகு, இலக்னாதிபதியும் கூடிட, 5, 8 அல்லது 9 ல் மாந்தி அமர செவ்வாய் மாந்தியுடன் நாலபதிபதி கூடிடி அண்டவாத நோய் ஏற்படும்.
* இலக்னத்தில் சனி, மாந்தி, ராகு ஆகிய மூவரும் கூடிட இலக்னாதிபதியும், எட்டாதிபதியும் 12 ல் மறைய தீரா நோயாளியாவான்.
* பகலில் பிறந்த சாதகருக்கு மாந்தி நின்ற வீட்டுக்கு 1, 5, 9 ல் கோட்சார முறையில் சனி வர பீடை.
* இரவில் பிறந்த சாதகருக்கு மாந்தி நின்ற வீட்டுக்கு 1, 3,11 ல் கோட்சார முறையில் சனி வர தரித்திரம் வரும்.
* இரண்டில் மாந்தியுடன் செவ்வாய் முதலான பாபிகளும் கூடிட, கூடியவர் திசா புக்தியில் நோய் வரும். புத்திரதோஷம் உண்டாகும்.
* இலக்னாதிபதியுடன் சனியும், மாந்தியும் சேர்ந்து சுபர் பார்வையின்றி இலக்னாதிபதி கெட, மரண கண்டம் ஏற்படும்.
யோகபலன்
* சூரிய, சந்திர, சனி, புதன், சுக்கிர, குரு திசா காலங்களில் யோக அவயோகப் பலன்களை கூடுதலாக்கும்.
* 10 ல் யோக நிலையில் உள்ள சனி, புதன், சுக்கிரன் தொடர்பு பெற, மாந்தி மூவரின் திசாபுத்தியில் யோகபலனைக் கூட்டிடுவார்.
* சூரிய, சந்திர, குருவுடன் 10 ல் கூடினும், யோக சனி, புதன், சுக்கிர திசாபுத்தியில் நற்பலன் கூடிடும்.
* இலக்னத்துக்கும், சந்திர ராசிக்கும் 11 ல் மாந்தி யோகமான சனி, புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன், குரு ஆகிய யாருடனாவது கூடிய ஆறு திசா புத்திகளும் இரட்டிப்பு யோக பலன் செய்ய வைக்கும்.
நவக்கிரக்காரகத்துவம்
(குறிப்பு நவக்கிரக காரத்துவம் என்றால் நவக்ரஹங்கள் தரும் பலன் என்று பொருள். அதாவது, கீழ்க்கண்ட பலனை அளிப்பது. அந்தக் கிரகத்தின் இயற்கையான குணம், ஆகவே, அவருடைய திசா காலங்களிலும் கிரகங்கள் அளிக்கும் அந்தப் பலன்கள் அந்தப்பொருள்கள் தொடர்பான வியாபாரங்கள், இலாப நஷ்டங்கள் இவைகளையெல்லாம் அவரவா் நிலைக்கேற்றபடி ஊகித்துக் கொள்வதற்கு இந்தப்பகுதி மிகவும் உதவும், கருவிலே கலந்து இது உருவாகும். பிறந்த பின்னே, இலக்னப்படி கிரக ஆதிபத்யம் மாறுபடும்)
சூரியன் - பித்ருகாரகன்
பிதா, ஆத்மா, சிரசு. தந்தம். வலது நேத்திரம, சிலும்பிய மயிர், பித்தம், சரீரம், வைத்தியம், ஒருதலைநோவு முதலிய சரசு ரோகம், சுரம், வியாதி ஸ்திரீ அல்லது சித்த சுவாதீனமில்லாத ஸ்திரியோகம், சைவானுஷ்டானம், தபசு, சதாசிவன், பஞ்சலோகம், வச்சிர ரத்தினம், இரசவாதம், யானை, கோதுமை, மிளகு, யாத்திரை பகற்பொழுது, ஒளி, மலை, காடு கிராம சஞ்சாரம் இவைகட்கெல்லாம் சூரியனே காரகன்.
சந்திரன் மாத்ருகாரகன்
மாதா, பராசக்தி, கணபதி, சுகபோசனம், வஸ்திரம், குதிரை, நித்திரை, சிறிதுநாள், பருத்தும் இளைத்துமிருக்கும் சரீரம், சித்த சுவாதீனமின்மை, ஷயரோகம், சிலேஷ்ம சீதள நோய்கள், இடக்கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி, முத்து, ஸ்திரமின்மை, முத்தாபரணம், வெண்கலம், வெண்ணெய், அரிசி, பனிப்பயறு, உப்பு, மச்சம், உழவன், உப்பளவா், வண்ணார், சத்திரம், கந்த புஷ்பம், சாமரம், பலம், ஸ்நானாதிகம் இவைகட்கெல்லாம் சந்திரனே காரகன்.
செவ்வாய் சகோதரகாரகன்
சகோதரம், பூமி, சுப்பிரமணியா், பத்திரகாளி, கோபவான், குயவன், அக்கினி முகமாகச் செய்யுந் தொழிலினர், யுத்தம், இரத்தம், காயம், சாகசம், செம்பு, சிவந்த இரத்தினம் முதலானவை, பவளம், துவரை, அக்கினிபயம், விரணம், துவேஷம், கடன், சோரம், சுயம்பாகம், வீரியம், உற்சாகம், ஆட்டுவர்க்கம், சேனைத்தலைமை, சர்ஜன் அதிகாரம், விதவை, ஸ்திரீபோகம், வைகல்யம், சும்பனம், பிளவை, சடுதி மரணம் இவைகட்கெல்லாம் செவ்வாயே காரகன்.
புதன் - வித்தியா மாதுலகாரகன்
அம்மான், கல்வி, ஞானம், விஷ்ணு, வைசியன், கணக்கன், தானாதிபதி, துாதுவன், தோ்ப்பாகன், வாக்கு சாதுர்யம், கதை, சங்கீதம். சோதிடம், பிரசங்கம், காவியம், உபாசனை, யுக்தி, சத்திய வசனம், வைஷ்ணவகர்மம், வியாபாரங்கள், லிகிதத் தொழில், சிற்பத்தொழில், அலி, தோ், தாதன், பரத நாட்டியம் முதலானவை, அண்டரோகம், வாத நோய், விஷரோகம், தாசிபரன், சகல பிரபஞ்சமுமறிந்தவன், நிலையான பேச்சு, புத்திரக்குறைவு, பச்சை இரத்தினம் முதலானவை சேங்கன்று வர்க்கம், இலை முதலியவை, பாசிப்பயிறு, தாரா, வெந்தயம் இவைகட்கெல்லாம் புதனே காரகன்.
வியாழன் - புத்ரகாரகன்
புத்திரர் பிரம்மா, ஞானம், யோகப்பியாசம், ஆசாரியத்துவம், அஷ்டமா சித்துகள். உபதேசம், புக்தியுத்தி, விவகார ஆலோசனை முதலானவை, இராச்சியாதிபத்தியம், குடும்பம் அரச சேவை, தனம், ஒழுக்கம், பிரபல்யம், இராச சன்மானம், பட்டப்பேர், சுருதி ஸ்மிருதி, ஸ்த்விஷயம், சாந்தம், சொர்ணம், வைடூரியம், பஷ்பராகம், கோமேதகம், புஷ்பம், தித்திப்பு, நேத்திரங்கள், விப்பரவர்க்கம், ஆண்டிவர்க்கம், ரிஷிவர்க்கம், தேன், கடலை, சீரகம், இவைகட்கெல்லாம் வியாழன் காரகன்.
சுக்ரன் - களத்திரகாரன்
களத்திரம், கிருகம், பட்டப்பேர் பகற்கால மாதுரு, வெகுஸ்திரீ சங்கம், தாசிதாசன் முதலானவர். சங்கீத வாத்தியம், பரத நாட்டியமும், முதலானவைகளில் பிரியம், கந்தபுஷ்பம், புணுகு, கஸ்துாரி முதலாகிய நானாவித பரிமள வாசாதிகள், கட்டில் மெத்தை, சப்பிரமஞ்சம், முதலானவை, வெண்சாமரை, இராஜஸ்திரீ, ரூபவதி, போக பாக்கியம், அழகு, இளமை, கருவிழி, சம்பத்து, வாகனம், மாலை, கொடி, டால் முதலானவை, ரத்னம், வெள்ளி கப்பல் வியாபாரம், எப்போதும் விகட விநோத பரிகாசப் பிரசங்கப் பிரியம், ஆசை, ஸ்ரீதேவதை, உபாசனை ஜனரஷணம், மித்திரம், பசு, பால், தயிர் அன்னம், மொச்சை, புளி, ஈயம் தேவப்பெண்கள், இலட்சுமிகடாஷம் ஆகாய சமுத்திர யாத்திரை இவைகட்கெல்லாம் சுக்கிரனே காரகன்.
சனி - ஆயுள்காரகன்
தீர்க்காயுசு, நிசிகாலத்துப்பிதா - சாத்தான் (ஐயனார்) உபாயம், ஜீவனம், எருமை விருத்தி இரும்பு, ஆளடிமை, சேவக விர்த்தி, வயற்களம், கிருஷித் தொழில், நீலரத்னம் முதலானவை, மரவேலை, களவு ஆத்ம இம்சை, சிறைப்படல், இராஜ தண்டனை, வீண் வார்த்தை, வெட்கமில்லாமை, துன்பம், வாயடித்தல், கடன், அசுப கர்மம், மயக்கம், போசனம், நீசஸ்திரீ, விதவைஸ்திரீ, தீவாந்தர பிரவேசம் ஸ்திரீ அல்லது ஊனமான ஸ்திரீ போகம், அலி அவயக்குறைவு, சித்தப்பிரமை, மேக நீர் உபத்திரவம், பித்தரோகம், கடுகு, உளுந்து, எள்ளு எண்ணெய் இவைகட்கெல்லாம் சனியே காரகன்.
ராகு - பிதாமஹகாரகன்
விஞ்ஞானம், பிதாமகன், (பிதுா் பாட்டன் வம்சம்) இரசாயணம், பௌதிகம், பிரதாபச் செப்பிடு வித்தை, களவு, நானாவித வேடத்தொழில், சினிமா, சேவகத்தொழில், பரதேசவாசம், சாதிக்கு விரோதமாய் செய்யத் தகாத தொழில்கள் செய்தல், விகட விநோத வித்தைகள், வியாதி ஸ்திரிபோகம், குஷ்டம், ராணுவகுண்டு, வீக்கம், நாட்பட்டரோகம், விஷபயம், ஜலகண்டம், அங்கவீனம், வெகு பேச்சு, வாய்வு, வலிப்பு, பித்தம், குன்மம், வெட்டுக்காயம், பிளவை முதலியரோகங்கள், விலங்கு சிறைப்படல் இவைகட்கெல்லாம் ராகுவே காரகன்.
கேது - மாதாகாரகன்
ஞானம், ஆன்மீகம், மாதாமகன், (மாதுர் வழி) பாட்டன் வம்சம்) கதிர் இயக்க கருவி சட்டத்தொழில், சும்பனம், கீழ்குலத்தொழில், விபசாரம், பாபத்தொழில், பரதேச ஜீவனம், விரணம், விஷபாண்டு, குஷ்டம், வயிற்று வலி முதலிய ரோகங்கள் அக்கினி கண்டம், அகங்காரம், அசுகம், சிறைபடல் இவைகட்கெல்லாம் கேதுவே காரகன், மாதாமஹிக்கு கேது காரகனென்றும் கூறுவர்.
இலக்னம் 0 என்றால் நவக்கிரக எண்கள் 1முதல் 9 இந்த 10 எண்களும் ஒரு சில சேர்க்கையில் லாட்டரி பரிசு தருகிறது. பல சோ்க்கைகள் பரிசற்றுப் போகிறது அது போல சாதகத்தில் கெட்டால் தான் இதில் கெட்டதை நவகிரகங்கள் செய்யும். வளம் பெற்றால் மேலே உள்ள நல்லவைகளைச் செய்யும்.
(கற்பித்தல் தொடரும்...)
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|