இராமானுஜர் திருவரங்கத்தில் இருக்கும் போது, நாள்தோறும் மாலையில் ஆழ்வாரின் தமிழ்ப் பாசுரங்களுக்கு விளக்கவுரை ஆற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள்;
"தெட்டப்பழம் சிதைந்து மதுரச்சொறியும்
காழ்ச்சீராம விண்ணகரே சேர்மினரே"
எனும் திருமங்கை யாழ்வாரின் பாடலுக்கு விளக்கவுரை ஆற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பாசுரத்தில் "தெட்ட" என்ற சொல்லுக்கு இடமறிந்து பொருள் கூறி விளக்கிவிட்டார். எனினும், அது வழக்கத்தில் இல்லாத சொல்லாக இருப்பதாக உணர்ந்தார்.
திருமங்கையாழ்வார் பாடிய ஸ்ரீ சீர்காழிக்கு திவ்ய யாத்திரை மேற்கொண்டு, அருஞ்சொற்பொருளைத் தேட முற்பட்டார்.
"கனிந்த" அல்லது "பக்குவப்பட்ட" என்ற சொல்லின் வட்டார வழக்காற்றுச் சொல்தான் "தெட்ட" என்பதாகும் என அறிந்து அனைவருக்கும் அதனைத் தெளிவுபடுத்தினார்.
ஒரு சொல் புழக்கத்தில் உள்ளதா என்ற தேடலின் பின்னரே அச்சொல்லை ஏற்கின்ற அவரின் மொழிச்செறிவு அவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று பகர்கிறது.