அறிஞர் அண்ணாவுக்கு சிலை ஒன்றை நிறுவ விரும்பிய எம்ஜிஆர், அண்ணாவை ஒளிப்படம் எடுத்து வர ஒரு ஒளிப்படக்காரரை அனுப்பி வைத்தார்.
அண்ணா தனது ஐந்து கை விரல்களையும் சூரியனைப் போல் வைத்துப் படமெடுக்கச் சொன்னார்.
ஆனால், ஒளிப்படக்காரர், “எம்ஜிஆர், உங்களது ஒரு விரலை மட்டும் காண்பித்து ஒளிப்படம் எடுக்கச் சொனனார்” என்றார்.
அதன் பிறகு, அண்ணாவும் மறுப்பேதும் சொல்லாமல் ஒரு விரலை மட்டும் காண்பித்து படமெடுத்துக் கொள்ளச் சொன்னார்.
அடுத்து ஒருநாள் அண்ணா எம்ஜிஆரைச் சந்தித்த போது, ”என்னை ஒரு விரல் மட்டும் காண்பித்து ஒளிப்படம் எடுக்கச் சொன்னது ஏன்?” என்று கேட்டார்.
அதற்கு எம்ஜிஆர், “ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற தங்கள் பொன்மொழியை மக்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்பதால்தான்...” என்றார்.
அதனைக் கேட்ட அண்ணா எம்ஜிஆரைப் பாராட்டினார்.