எளிமையைக் கடைப்பிடிப்பதன் மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக் கர்மவீரர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். காமராஜர் முதலமைச்சராக இருந்த போது ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க வேண்டியிருந்தது.
மின்சாரக் கோளாறு காரணமாக விருந்தினர் மாளிகையில் அப்போது மின்விளக்குகள் எரியவில்லை. அந்தக்குறையைச் சரி செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் “நான் படுக்க வேண்டும். எனவே என் அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்” என்றார்.
வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டு வந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக் கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் வந்து நின்றார். அந்தப் போலீஸ்காரரைப் பார்த்த காமராஜர் “நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்” என்று கூறி அவரை அனுப்பி வைத்து விட்டார்.
தனது காவலுக்கு பல்வேறு இன்று படைகளோடு உலா வரும் இன்றைய அரசியல்வாதிகளையும் காமராஜரையும் ஒப்பிட்டுப் பார்த்தால்...?