Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பக்கீர்களின் வாழ்வியல்

சு. சத்யா
முனைவர் பட்ட ஆய்வாளர்,
காந்திகிராமக் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்.


முன்னுரை

இஸ்லாமியர்கள் வணிகத்தின் பொருட்டு தமிழகத்தில் தொடர்பு கொண்டிருந்தனர். இஸ்லாமியர்கள் தமிழ் மக்களுடன் திருமண உறவு கொண்டு நிலைத்தனர். பின்னர் மரைக்காயர், லெப்பை, ராவுத்தர், பட்டாணி போன்ற வர்க்கங்களாகப் பிரிந்தனர். இவர்களில் ஒரு பிரிவினரான பக்கிர்களும் உள்ளனர். இந்த பக்கீர் என்னும் பாரசீகச்சொல் பகீர் என்ற மூலச்சொல்லிருந்து வந்திருக்கலாம் என்று கருதமுடிகிறது. பக்கீர் என்ற சொல் குறித்து அப்துற்றஹீம் ‘பகீர்’ என்றால் எல்லாத் தேவைகளுக்கும் இறைவனை எதிர்பார்க்கும் தன்மை என்றும், இந்தத் தேவை ஆன்மீகத் தேவையையும், உலகாயுதத் தேவையையும் குறிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். இவர்கள் இஸ்லாம் சமயத்தில் இரவலர்களாக யாசித்தல் தொழில் செய்து வருகின்றனர். பக்கீர்கள், சமயப்பாடல்கள் பாடி யாசகம் பெறுவர். இதனை, தமது குடும்ப பொருளாதாரத்திற்காகச் செய்து வருகின்றனர். பக்கீர்கள் இஸ்லாமியச் சமயத்தில் உள்ள சமயப் பெரியோர்களின் கருத்துக்களையும் அவர்களின் புகழையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் முகமது நபியின் வாழ்க்கை வரலாறுகளைப் பாடி மக்களிடம் எடுத்துச் செல்வர். பக்கீர்கள் இவ்வாறு பாடி மதப்பரவலுக்கு ஒரு முக்கியக் காரணமாக விளங்குகின்றனர். இவர்களின் வாழ்வியலைக் கீழ்வருமாறு காணலாம்.

பக்கீர்களின் பிரிவுகள்

தமிழகத்தில் மரைக்காயர், லெப்பை, ராவுத்தர், பட்டாணி போன்ற பிரிவினர்களைத் தவிர ‘பக்கீர்’ எனும் பிவினரும் வாழ்கின்றனர். பக்கீர்கள் தார்வேஷ் (darvesh), பாபா(baba) பாவா (baba), சாய் (sai), பீர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். எனினும், பக்கீர் என்பதே பரவலான வழக்குச் சொல்லாகும். பக்கீர்களில் இரு பிரிவினர் உள்ளனர்.

1. ஆன்மீக வழியில் செல்லுபவர்கள்

2. இரவல் பெற்று வாழ்பவாகள்.

இரவல் பெற்று வாழும் இரண்டாம் பிரிவினரை ‘மிஸ்கீன்கள்’ என்றும் அழைப்பர். இந்த இரு பிரிவினரும் பிற இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளனர்.

பக்கீர்கள் என்பதற்கு இஸ்லாமிய நாடோடிகள் இஸ்லாமிய யாசகர், பிச்சைக்காரர் என்று தமிழ் அகராதிகளில் பொருள் கூறப்பட்டுள்ளன. ‘பக்கு’ என்றும் அரபுச்சொல்லுக்கு வறுமை, தின்மை என்று பொருள். அதாவது வாழ்க்கையில் எவ்வித வசதியும் இல்லாதவர்கள் என்பது இதன் பொருளாகும். பக்கீர்கள் ஊர் ஊராகச் செல்லும் நாடோடிகள் ஆவர். பக்கீர்கள் ஆன்மீக வழியில் செல்பவர்கள். இறைநேசரின் வாழ்க்கை வரலாறுகளை மக்களுக்குப் பாடலாகப் பாடிச் சமயத்தைப் பரப்பும் வேலையைச் செய்வார்கள். பக்கீர்கள் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் மிகுதியாக வாழ்கின்றனர். இதனை,


“பக்கீர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்த காலகட்டம் கி. பி 11-ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இதற்குச் சான்றாக அமைவது திருச்சியில் அடக்கமாகியிருக்கும் நத்ஹர் வலி என்ற இறைநேசர் ஆவார். இவர் தமிழகத்திற்கு வந்த முதல் இறைநேசர் என்ற பெருமைக்குரியவர். இவர் தமக்குக் கீழ் 900 சீடர்களைக் கொண்டிருந்தவர். இவரின் சீடர்கள் ‘கலந்தார்கள்’என்றும் பக்கீர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். இவரைப் போன்று கி.பி 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாகூர் சாகுல் ஹமீது வலி என்ற இறைநேசரும் தமக்குக் கீழ் 400-க்கும் மேற்பட்ட பக்கீர்களைச் சீடர்களாக வைத்திருந்தார். இப்பக்கீர்கள் சமயக் கருத்துகளைப் பரப்புவதற்கு ஊர் ஊராக அனுப்பப்பட்டனர்” (தமிழகத்தில் நாடோடிகள் (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) நூலில் அ. வசந்தா எழுதிய ‘பக்கீர்’ கட்டுரை, ப. 292)

என்று அ. வசந்தா குறிப்பிடுகிறார். இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் சென்று அல்லாவின் புகழ் மொழிகளைப் பாடுவர். பெருநாட்களில் பாடல்கள் பாடி ஒவ்வொரு வீடாகச் சென்று யாசகம் பெற்று வாழ்கின்றனர். பக்கீர்கள் தொடக்கத்தில் எவ்விதப் பலனையும் எதிர்பார்க்காமல் கடவுளின் பணியை மட்டும் செய்தனர். பின்பு காலப்போக்கில் தமது வாழ்வாதாரத்திற்காக யாசகம் பெற்று வாழ்ந்தனர். இது இனக்குழு சமூக மரபின் எச்சமாகும். பக்கீர்கள் யாசகம் பெறும் நிலையைக் கீரனூர் ஜாகிர்ராஜா, “ரமலான் நோன்பின் இருபத்தி ஏழாம் நாளில் ஜக்காத்து கோரியவாறு தெருவெங்கும் அலைகிற ஏழைப்பெண்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பும் நியாய விலைக் கடையைப் போன்ற நீணடவரிசை யாசகத்தின் அவலம் மிக்க குரல்கள், அடிதடிகள் ஒன்றை ஒன்று முந்திச் செல்லும் வறுமையின் பரணி” (மீன் குகைவாசிகள், ப.112)

என்று மீன் குகைவாசிகள் நாவலில் பக்கீர்களைப் பற்றிப் பதிவு செய்கிறார், யாசகம் பெறுவதற்காக ஒவ்வொரு வீட்டின் முன்பும் நீண்டவரிசையில் பக்கீர்கள் நின்றனர். வறுமை அவர்களை யாசகம் பெறவேண்டிய சூழலை ஏற்படுத்துகிறது.

பக்கீர்களுக்கென்று ஒரு குறிப்பிட்டத் தொழில் என்று எதுவும் கிடையாது. பக்கீர்கள் சமயக்கருத்துக்களைப் பரப்புவதையே முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். பக்கீர்கள் நம்பிக்கை சார்ந்த சிலவற்றைச் செய்கின்றனர். தாயத்து, தண்ணீர், எலுமிச்சைப்பழம் ஆகியவற்றை மந்திரத்தால் ஓதிக் கொடுக்கின்றனர். ஓதிக் கொடுத்தவற்றைப் பெற்ற குழந்தைகளுக்கு நோய் இருந்தால் சரியாகும் எனும் நம்பிக்கை இருக்கிறது. பக்கீர்கள் மொஹரம், ரமலான் ஆகிய மாதங்களில், இஸ்லாமியர் வீடுகளுக்குச் சென்று ஜக்காத் (தானதர்மம்) பெறுவர். இவற்றின் மூலம் பக்கீர்களுக்கு குறைந்த அளவு வருமானம் கிடைக்கிறது. எனினும் இவ்வருமானம் போதியதாக இல்லை. இதனால் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக உள்ளனர். பக்கீர்களின் பொருளாதார நிலையை,

“பக்கீர் என்பவர் தன்னிடத்தில் யாதொரு சொத்தில்லாமலும், யாதொரு தொழில் செய்யக் கூட்டாமலிருப்பவனாம். அவனிடத்தில் ஒரு நாளுக்குப் போதுமான உணவும் முழு உடுப்பும் இருந்தால் அவன் பக்கீரல்ல” என்பது பொது வழக்கு. பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்கள் பக்கீரல்லர் என்பதையும், எவ்வித வருமானமும் இல்லாமல் வாழ்பவர்களே பக்கீர் என்பதையும் இதன்வழி அறியலாம்” (தமிழகத்தில் நாடோடிகள் (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) நூலில் அ. வசந்தா எழுதிய ‘பக்கீர்’ கட்டுரை, , 2006, ப.297)

என்று அ.வசந்தா பக்கீர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பக்கீர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்களுக்குகென்று தனித்தொழிலோ, சொந்தக் குடியிருப்போ கிடையாது. பெருநாட்களிலும் ரமலான் மாதங்களிலும் இரவல் பெற்று வாழ்பவர். தர்காக்களில் தினந்தோறும் சிறு வேலைகளைச் செய்து தமது பிழைப்பை நடத்துகின்றனர். பக்கீர்கள் உருவ வழிபாட்டை ஆதரிப்பதை,

“இசுலாமிய சமயம் உருவ வழிபாட்டிற்கு எதிரானது. ஆனால் தர்காவில் அவுலியாக்களின் சமாதி முக்கிய இடத்தினை வகிக்கிறது. இதனடிப்படையில் உருவமற்ற இறைவனை வணங்கும் இசுலாத்தை உருவ வழிபாட்டை நோக்கி தர்கா வழிபாடு இழுத்துச் செல்கிறது” (தர்காக்களும் இந்து - இசுலாமிய ஒற்றுமையும், ப.28)

என்று ஆ. சிவசுப்பரமணியன் எடுத்துக் காட்டுகிறார். பக்கீர்கள் நாட்டார் வழிப்பாட்டு மரபை இஸ்லாத்தில் முன்னெடுக்கின்றனர். பக்கீர்கள் அடக்கமான இறையடியார்களின் வழி இறைவனைத் தேடுகின்றனர். இதன் மூலம் பக்கீர்கள் பூவப்பண்பாட்டை விடவில்லை என்பது தெரிகிறது.


பக்கீர்கள் யாசகம் பெறுபவர் மட்டுமல்ல. அவர்களுக்கென்று பாரம்பரியப் பெருமிதங்கள் உண்டு. கீரனூர் ஜாகிர்ராஜா பக்கீர்களைப் பற்றி,

“பக்கிரிஷாக்கள் நல்ல குரல்வளம் மிக்கவர்கள். இஸ்லாமிய ஞான இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், பரிச்சியமும் கொண்டவர்கள். தொன்மையான இசைக்கருவிகளை இசைக்கக் கற்றிருப்பார்கள். பார்வையில், பேச்சில், கனிவு, நன்னடத்தை, பற்றற்றத் தன்மை, இசையில், இறைப்புகழில் தோய்ந்து விடுதல் நாடோடிக்குணம் அவர்களின் இயல்பு” (ஜின்னாவின் டைரி, ப.72)

குறிப்பிடுகிறார். பக்கீர்களின் சிறப்புத் தகுதிகளைக் எடுத்துரைக்கிறார். மேலும் பக்கீர்கள் இறைநேசர்களின் ஆன்மப்பலத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். வாழ்நாள் முழுவதும் தர்காக்களுக்குச் செல்வதை மரபாகக் கொண்டுள்ளனர். தர்காவில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே தமது வாழ்க்கையை நடத்துபவர்களாக உள்ளனர். கல்வியிலும் பின்தங்கியுள்ளனர். வாழ்க்கை முழுவதும் தமது வயிற்றுப் பிழைப்புக்காக நாடோடி வாழ்க்கையை மேற்கொள்பவர்களாக பக்கீர்கள் விளங்குகின்றனர்.

பக்கீர்களின் மரபு

பக்கீர்கள் இறைவனின் ஏகத்துவக் கொள்கையை ஏற்பதோடு தர்காக்களுக்கும் செல்கின்றனர். பக்கீர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் தர்காக்களுக்குச் செல்வதைக் கடமையாகக் கொண்டுள்ளனர். இச்சூழலை,

“பிற இசுலாமியர்களைப் போலவே பக்கீர்களும் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுதல், நோன்பிருத்தல், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்புத் தொழுகையில் (ஜிம்ஆ) கலந்து கொள்ளுதல் போன்ற வழிபாட்டு முறைகளையும் கடைபிடிக்கின்றனர். தங்கள் வீடுகளில் பாத்திஹா ஓதுதல், இசுலாமியப் பண்டிகைகளைக் கொண்டாடுதல் போன்ற சமயம் சார்ந்த விழாக்களையும் இவர்கள் பின்பற்றுகின்றனர்” (தமிழகத்தில் நாடோடிகள் (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) நூலில் அ. வசந்தா எழுதிய ‘பக்கீர்’ கட்டுரை, ப.297) என்று அ. வசந்தா குறிப்பிடுகிறார். பக்கீர்களும் தமது கலாச்சாரத்திலிருந்து மாறாமல் வாழ்வது குறிப்பிடத்தக்கது. பக்கீர்கள் மரபு சார்ந்த வழிபாட்டுக் கொள்கைகளையும், சமயம் சார்ந்த விழாக்களையும் பக்கீர்கள் கடைபிடிக்கின்றனர். பக்கீர்கள் பிற இஸ்லாமியர்களைப் போலவே நோன்புக் காலங்களில் பங்கு கொள்கின்றனர். காலை முதல் மாலை வரை நோன்பு கடைபிடிப்பர். மாலையில் பள்ளிவாசல்களில் கூட்டுத்தொழுகை நிகழ்த்திவிட்டு அனைவருக்கும் நோன்புக் கஞ்சியை பகிர்ந்து வழங்குவர். இதோடு கூட அரபு நாட்டுக்கனியான பேரிச்சையும் வழங்கப்படுகிறது. இந்த மரபானது இஸ்லாமியர்களின் கலாச்சாரமாகும். இந்நிலையை, “அன்றாடம் தெருவில் கிடைக்கிற வடிகஞ்சிக்கும், இந்த நோன்புக் கஞ்சிக்கும் தான் எத்தனை வித்தியாசம். மனசார ஊற்றினார்கள். கஞ்சியை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் சுடசுடப்போனது. நோன்புக்கஞ்சி, நோன்பாளிகள் பள்ளிவாசலில் நோன்பு முடித்து, கஞ்சி அருந்தினார்கள், பார்க்க வியப்பாக இருந்தது. வரிசையாக அமர்ந்து ஓதினார்கள். பேரிச்சையைக் கடித்தார்கள்” (தேய்பிறை இரவுகளின் கதைகள், ப.63)

என்று கீரனூர் ஜாகிர்ராஜா எடுத்துக் காட்டியுள்ளார். இஸ்லாமியர்களின் சமூக வாழ்வில் நோன்புக்கஞ்சி பிரதானமானது. இக்கஞ்சியை அவர்கள் மட்டும் அருந்தாமல் மற்ற சமூகத்தவரும் அருந்தினர். ஏழைகளின் பசியைப் போக்கும் உணவாக ரம்ஜான் காலமான முப்பது நாட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பக்கீர்கள் யாசகம் பெறச் செல்லும் போது தமது பாரம்பரிய ஆடை அணிகலன்களை அணிந்து செல்வது வழக்கம். இது பக்கீர்களின் தனித்துவமாகும். பக்கீர்கள் சக மனிதர்களுடன் இயல்பாக பழகக்கூடியவர்கள். இவர்களின் அணிகலன்கள் சடங்குப் பொருட்களாகக் காணப்படுகின்றன. பக்கீர்கள் யாசகம் பெறச் செல்லும் போது தமது மகன்களைக் கூட்டிச் செல்வது வழக்கம்.


இறைவனைப் பற்றிப் பாடி பக்கீர்கள் யாசகம் பெறுவார். பக்கீர்களின் பாடல்கள் கல்வியறிவு இல்லாத பாமரமக்களுக்கும் சென்று சேரக்கூடியவை. பக்கீர்கள் தர்காக்களுக்குச் செல்லும்போது,

“ஃபக்கீர்கள் தலையில் பச்சை அல்லது வெள்ளை நிறத்திலான தலைப்பாகையும், கழுத்தில் ‘கண்டமாலை’ எனப்படும் பல வண்ணத்திலான பாசிமணி மாலைகளுள் ஒன்று அல்லது இரண்டும் அணிந்தும் ‘ஜிப்பா’ என்ற முழுக்கை சட்டையும் அணிந்தவராகக் காணப்படுவர். மற்றும் ஃபக்கீர்களை மற்ற இரவல்களிடமிருந்து பெரிதும் வேறுபடுத்திக் காட்டுவது அவர்கள் கையில் வைத்திருக்கின்ற ‘தாயிரா’ என்ற இசைக்கருவியாகும்” (இஸ்லாமிய ஃபக்கீர்கள், ப.22)

என்று வ.ரஹமத்துல்லா குறிப்பிடுகிறார். பக்கீர்கள் பாசிமணி, ஜிப்பா, தலைப்பாகை போன்ற அணிகலன்களை தமது பாரம்பரிய அடையாளமாகக் கடைபிடிக்கின்றனர். இன்னும் சிலர் கைகளில் ‘மயில்தோகை’ வைத்திருப்பர். இவ்வாறு இஸ்லாமிய சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் தமது பண்பாட்டில் ஒழுகி வருகின்றனர்.

பக்கீர்களுக்கு எதிரான இஸ்லாமிய ஒடுக்குமுறை

இஸ்லாம் சமயம் தமிழ்ச் சமூகத்திலிருந்து வேறுபட்டப் பண்பாட்டைக் கொண்டுள்ளது. இஸ்லாமியர்கள் இறுதி மறையாகிய திருக்குரானையும், நபிமொழியான ஹதீஸையும் பின்பற்றுகின்றனர். ஓரிறைக் கொள்கையை மையப்படுத்தி செயல்பட்டு வருகின்றனர். ஆனால் இந்நெறிமுறைகளிலிருந்து இஸ்லாமியரின் ஒரு பிரிவினரான பக்கீர்கள் வேறுபடுகின்றனர். இதனை,

“தமிழ்நாட்டுச் சித்தர்கள் இறைவழிக் கொள்கையான ‘சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளை மேற்கொண்டது போன்று சூஃபிகளும் ‘ஷரிஅத், தரிகத், மஃரிபத், ஹகீகத்’ என்ற நான்கு பயிற்சி நிலைகளை மேற்கொண்டதாக ஸையித் இப்ராஹிம் கூறுகிறார். இத்தகைய சூஃபிகளின் வழிமுறையைப் பின்பற்றுபவர்களாகவும் மஃர்பத் எனும் உள்வணக்க வழியைக் கடைப்பிடிப்பதாகவும் ஃபக்கீர்கள் விளங்குகின்றனர். (இஸ்லாமிய ஃபக்கீர்கள், 2007, ப.25)

என்று வ. ரஹ்மத்துல்லா சித்தர்களின் இறைவழிக் கொள்கையை எடுத்துக் காட்டுகிறார். இறைவனால் படைக்கப்பட்ட மனிதன் அல்லாவை அடிபணிந்து வணங்க வேண்டும் என்பது இஸ்லாமிய நெறிமுறையாகும். ஆனால் பக்கீர்கள் வேறுபட்ட நிலையில் காணப்படுகின்றனர். இவர்கள் அடிப்படை நெறியிலிருந்து விலகியவர்களாக, இறைவனை அன்பாலும் அடைய முடியும் என்ற புதிய சீர்திருத்த வழிப்பாட்டு முறையைக் கடைப்பிடிக்கின்றனர். இவ்வாறான நெறிமுறையை,

“சூபிமார்க்கம் ஒருபுறம் இறைநேசத்தையும் மறுபுறம் மனிதகுல நேசத்தையும் அடிப்படையாகக் கொண்டு வெளிப்பட்டுள்ளது. எளிமை, சுயஅடக்கம், பரந்த நோக்கு, சமயசமரச உணர்வு உட்பட்ட லட்சியங்களை இந்தியப் பண்பாட்டுச் சூழலில் உள்வாங்கிக் கொண்டது” (சூபி விளிம்பின் குரல், ப.4)

என்று ஹெச்.ஜி.ரசூல் சூபிமார்க்க நெறிமுறையைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் இஸ்லாமிய மார்க்கவாதிகள் இந்நெறிமுறையை ஏற்பதில்லை. இவர்கள் இறைக்கொள்கைளை மறுப்பவர்கள், யாசகம் பெறுபவர்கள் என்று கருதி மத அடிப்படைவாதிகள் விலக்கம் செய்கின்றனர். அல்லாவை அவமதிப்புக்கு உள்ளாக்குபவர்கள் என்று கூறுகின்றனர். ஆக, மேல்த்தட்டு வர்க்கம் பக்கீர்களையும் சூபிகளையும் அல்லாவுக்கு இணை வைக்கிறார்கள் என்று கூறி விலக்கி வைக்கிறது.


பக்கீர்களின் நம்பிக்கைகள்

பக்கீர்கள் பாடுவதை முதன்மைத் தொழிலாகச் செய்தாலும் குழந்தைகளுக்கு மந்திரித்தல், தாயத்துக் கட்டுதல் போன்ற நம்பிக்கை சார்ந்தத் தொழில்களையும் செய்து வருகின்றனர். பக்கீர்கள் ‘கண்ணேறு கழித்தல்’ என்ற முறையில் பயந்துபோன குழந்தைகளின் முகத்தில் குரானின் வேதவசனங்களைக் கூறித் தெளித்து விடுவர். இவ்வாறு செய்யும் பொழுது குழந்தைகளின் பயம் விட்டுப்போகும் என்பது பக்கீர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் மக்கள் தாங்கள் நினைத்தக் காரியங்கள் தடைப்பட்டு நிற்கும் பொழுது இது மற்றவர்களின் பொறாமைப் பார்வை என்று கருதுகின்றனர். இவ்வாறு வரும் பொறாமைப் பார்வைகளை நீக்குவதற்குக் ‘கண்ணேறு கழித்தல்’ செய்வர். தங்களையோ, தமது குழந்தைகளையோக் காற்றுக் கருப்பு நெருங்கிவிட்டதாக நினைத்தால் பக்கீர்களிடம் சென்று தாயத்து (கருப்புக்கயிறு) வாங்கிக் கட்டிக்கொள்வர் இது அனைத்து சமய மக்களும் அடங்குவர். இது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

பக்கீர்கள் தர்காக்களில் நம்பிக்கை சார்ந்த தாயத்து, தண்ணீர், எலுமிச்சைப்பழம் ஆகியவற்றை ஓதித் தருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய பக்கீர்கள் அடுத்த நாளுக்கான உணவு, உடையும் கிடைக்காத வாழ்வை வாழ்ந்து கொண்டு வருகின்றனர்.

பக்கீர்களின் வாழ்வாதார நிலை

பக்கீர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இவர்களின் பாடல் தொழிலிலும், மந்திரித்தல் தொழிலிலும் வரும் வருமானம் போதாததாகவே உள்ளன. ஆகையால் பக்கீர்கள் தமது குழந்தைகளைக் கடைகள் தோறும் சாம்பிராணி புகைகாட்டும் தொழிலுக்கு அனுப்புகின்றனர். இதில் கிடைக்கின்ற வருமானம் இவர்களின் வாழ்க்கைக்குச் சிறிது உதவுகின்றன. ஒரு சிலர் பூட்டு, குடைவேலை ஆகியவற்றின் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர் என்றாலும் பொருளாதார நிலையில் இன்றளவும் மேம்படாத சூழ்நிலையில் உள்ளனர். இதனை வ. ரஹ்மத்துலா,

“நாள் ஒன்றுக்கு பாடல் தொழில் மூலம் வருமானம் சுமார் ரூபாய் எண்பது முதல் நூறு வரை கிடைப்பதாகவும், சாம்பிராணி புகைகாட்டும் தொழிலில் சற்று அதிகமாக வருமானம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர். அதனாலேயே இன்றும் தாங்கள் பிள்ளைகளைப் பாடல் தொழிலுக்கு அனுப்பாமல் சாம்பிராணிப்புகை காட்டும் தொழிலுக்கு அனுப்புவதாக ஒரு பக்கீர்கூறுகிறார்” (இஸ்லாமிய ஃபக்கீர்கள், ப.87)

இவ்வாறு எடுத்துக்காட்டுகிறார். ரம்ஜான், பக்ரித் போன்ற இஸ்லாம் சமய விழாக்களின் போது பக்கீர்கள் பாடல்கள் பாடி அதில் கிடைக்கும் வருமானத்தில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். இஸ்லாம் சமயம் முக்கியமாக ஐந்து கடமைகளைக் கடைபிடிக்க வலியுறுத்துகிறது. அக்கடமைகளான கலிமா (உறுதிமொழி). தொழுகை, நோன்பு, ஜக்காத் (ஏழைவரி), ஹஜ் (புனிதப்பயணம்) ஆகியவற்றைக் கூறுகிறது. இக்கடமைகளை இஸ்லாம் மதத்தினர் அனைவரும் நிறைவேற்ற வேண்டும். ரமலான் போன்ற நோன்புக் காலங்களில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர். அதிகாலைப் பொழுதில் பக்கீர்கள் ‘தாயிரா’ இசைக் கருவியை இசைத்து அவர்களை எழுப்பி விடுவர். நோன்பு நாட்களான முப்பது நாட்களும் இதைத் தவறாமல் செய்வர். இதற்காக இஸ்லாமியர்கள் தமது வசதிக்கு ஏற்ப பணம், பொருட்களைப் பக்கீர்களுக்கு வழங்குவர். இஸ்லாமிய மக்கள் இதை ஜக்காத் (ஏழை வரி) எனும் பெயரில் வழங்குவர். பக்கீர்களும் இதனைப் பெற்றுக் கொள்வர் இவ்வருவாயினால் பக்கீர்கள் தங்கள் பண்டிகை நாட்களைப் பொருளாதாரச் சிக்கல் இல்லாமல் கொண்டாட முடிகிறது.

பக்கீர்கள் மேலும் இஸ்லாமியர்களின் திருமண வீடுகளுக்குச் சென்று பாடல்களைப் பாடுகின்றனர். இப்பாடல்கள் அனைத்தும் இறைத்தூதர்கள், நபிமுகமது பற்றியதாகும். திருமணம் முடிந்தவுடன் திருமணவீட்டார் பக்கீர்களுக்கு பணம், பொருள் அளிப்பர். தர்காக்களில் கொண்டாடப்படும் சந்தனக் கூடு விழாவிலும் பக்கீர்கள் தாயிரா இசைக்கருவி கொண்டு இசைப்பர். இதற்காக பக்கீர்களுக்கு ஒரு தொகை அளிப்பர். இவ்வாறு பக்கீர்கள் இஸ்லாமிய திருவிழாக்களுகக்குச் சென்று பொருள் சம்பாதிப்பர். ஆனாலும் பொருளாராத்தில் இவர்களுக்குத் தன்னிறைவு கிடையாது. இவ்வாறு பெறும் வருமானத்தில் ஓரளவு தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

பக்கீர்கள் கல்வியல் பின் தங்ககியவர்களாகவே காணப்படுகின்றனர். பொருளாதாரக் குறைவால் தமது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையும் உள்ளது. மதறஸா போன்ற அடிப்படைக் கல்வியைக் கூட அளிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். பக்கீர்கள் தமது குழந்தைகளுக்கு மனனத்தின் வழியாகவே பாடல்களைக் கற்றுத் தருகின்றனர். எவ்வளவு பெரிய பாடல்களையும் எழுதிப் பார்த்துப் படிக்காமல் மனனம் வழியே பாட பழகிக் கொள்கின்றனர். பக்கீர்கள் தமது குழந்தைகளுக்கு வயது வந்தவுடன் பாடும் தொழிலுக்கு கூடவே அழைத்துச் செல்வர். இவ்வாறு பக்கீர்கள் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியைக் கூட அளிக்க முடியவில்லை என்பது கவனத்திற்குரியது. இதற்கு பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணியாகும். இன்றும் பக்கீரிகள் அடுத்தவர்களின் கையை எதிர்பார்த்து வாழும் சூழ்நிலைக்கேத் தள்ளப்படுகின்றனர்.

பக்கீர்கள் தமிழகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கின்றனர். பக்கீர்களுக்குச் சொந்தமாக இருப்பிடம், நிலம் என்று எதுவும் கிடையாது. ஆகையால் பல்வேறு இடங்களுக்கு மாறி மாறிச் செல்வர். இவர்கள் ஒரே இடத்தில் நிலைத்துத் தங்குவது கிடையாது. இஸ்லாமியர்கள் மிகுதியாக வாழும் ஊர்களில் இவர்கள் தங்குவர். பல்வேறு இடங்களுக்கு யாசகம் கேட்கச் செல்லும் போது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்னும் இஸ்லாமிய வாசகத்தைக் கூறி பொருளைப் வாங்குபவர்களாக இருக்கின்றனர். சமூகத்தில் இவர்களுக்கென அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையே உள்ளது.


பாதுகாப்பற்ற நிலை

தமிழ்ச்சமூகத்தில் பக்கீர்களுக்கென்று பாதுகாப்பற்ற சூழ்நிலையே காணப்படுகிறது. 1992 -ல் நடந்த பாபர் மசூதி இடிப்பின் காரணமாக இஸ்லாமியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பக்கீர்களுக்கும் இல்லை. இவர்கள் பேருந்து, ரயில் நிலையங்கள், நடைபாதைகள், கடைவாசல்கள், பள்ளிவாசல்கள், தர்காக்கள் ஆகிய இடங்களில் தங்கிக்கொள்வர். இவ்வாறு தங்கும் பக்கீர்களை காவல்துறையினர் அடித்து விரட்டியடிப்பர். இதனை கீரனூர் ஜாகிர்ராஜா,

“எத்தனை இரவுகள் நாய்களைவிடவும் கேவலமாக விரட்டப்பட்டிருக்கிறோம். எங்களைப் பசியாற விட்டிருப்பான்களா? அயர்ந்து உறங்க விட்டிருப்பான்களா? நள்ளிரவுகளால் லத்தியால் அடித்து எழுப்பிக் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றிருக்கிறார்கள். எங்கள் பெண்டுகள் பிள்ளைகளை மானங்கப்படுத்தியிருக்கின்றார்கள் கற்பை சூறையாடிஇருக்கிறார்கள்” (ஜின்னாவின் டைரி, ப.79)

இவ்வாறு எடுத்துக்காட்டுகிறார். வாழ்க்கையின் விளிம்பில் தள்ளப்பட்ட பக்கீர்களை இந்து மதவாதிகளின் தூண்டுதலினால் தாக்கப்படுகின்றனர். காவல்துறையின் அத்துமீறல் அடித்தள மக்கள் மீதே பாய்கின்றன. சட்டங்களும் அதிகாரங்களும் மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது.

முடிவுரை

பக்கீர்கள் இன்றையக் காலகட்டத்தில் குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் சமூகத்தில் விளிம்புநிலையைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். தொடக்கக் காலத்தில் பக்கீர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தாலும் தற்பொழுது தமக்கென்று குடும்பம், குழந்தைகள், இருப்பிடம் ஆகியவற்றைப் பெற்றுள்ளனர். இருப்பிடம் அமைத்துக் கொண்டு வாழ்ந்தாலும் சமூக உரிமைகளையும் வளர்ச்சியையும் பெறாத சமூகமாகவே உள்ளது. முந்தையக் காலங்களில் பொருளாதாரத்தை நிறைவு செய்து கொள்ள இஸ்லாமியர்களின் வீடுகளுக்கு மட்டுமே சென்று இரவல் பெற்ற பக்கீர்கள் தற்பொழுது அனைத்து மதத்தினர் வீடுகளுக்கும் சென்று இரவல் பெற்று வாழ்கின்றனர்.

குறிப்புகள்

1. மீன்குகைவாசிகள், கீரனூர் ஜாகிர்ராஜா எதிர் வெளியீடு, பொள்ளாச்சி (இரண்டாம் பதிப்பு, 2013)

2. ஜின்னாவின் டைரி, கீரனூர் ஜாகிர்ராஜா, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி (முதல் பதிப்பு, 2014)

3. தேய்பிறை இரவுகளின் கதைகள், கீரனூர் ஜாகிர்ராஜா, பாரதி புத்தகாலயம், சென்னை (முதற்பதிப்பு, 2011)

4. தர்காக்களும் இந்து - இசுலாமிய ஒற்றுமையும், சிவசுப்பிரமணியன். ஆ, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை (முதற்பதிப்பு, 2014)

5. தமிழகத்தில் நாடோடிகள் (சங்ககாலம் முதல் சமகாலம் வரை), பக்தவச்சல பாரதி. சீ (பதிப்பாசிரியர்), வல்லினம், புதுவை (முதற்பதிப்பு, 2006)

6. சூபி விளிம்பின் குரல், ரசூல். ஹெச். ஜி, பாரதி புத்தகாலயம், சென்னை (முதற்பதிப்பு, 2011)

7. இஸ்லாமிய ஃபக்கீர்கள், ரஹ்மத்துல்லா. வ, படையல் வெளீயீடு, சென்னை (முதற்பதிப்பு, 2007)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p155.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License