Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam

முத்து: 12 கமலம்: 12
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

சமையல்
அசைவச் சமையல்
Alexa Rank


கட்டுரை
இலக்கியம்

காப்பிய இலக்கியங்களில் கணிகையா்

முனைவர் ப. மீனாட்சி

உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை,
எஸ். எஃப். ஆா் கல்லூரி, சிவகாசி.


பெண் என்பவள் மாபெரும் மானுட சக்தி. ஆனால் ஆணாதிக்கச் சமுதாயம் அவளை மகப்பேற்றிற்கான இயந்திரமாகவும், தங்களது பாலியல் தேவையை நிறைவு செய்யும் போகப் பொருளாகவும் மட்டுமே பார்க்கிறது. பெண்ணாகப் பிறந்த எவரும் விலைமகளாவதற்கு விரும்புவதில்லை. தாய்வழிச் சமுதாயம் உடைத்தெறியப்பட்டு தந்தைவழிச் சமுதாயம் மேலோங்கிய காலகட்டத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்கிற தமிழர் பண்பாடும் உடைத்து எறியப்பட்டு விட்டது. சமயத்தின் பெயரால் பெண்களை மேலும் வதைக்கத் தொடங்கினர். “நித்திய சுமங்கலி” எனப் பெயரிட்டு பிறப்பு முதல் இறப்பு வரை உள, உடல் நலங்களை விற்றுத்தான் வாழ வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். பாலுணர்வால் பெண்களது உடலை சல்லடையாய் துளைத்ததோடு அதைச் சமூக நியதியுமாக்கியுள்ளனர்.

“ஒருத்தி போரா(து) என்று ஒரு நூறும் நாடுவீர்
உற்றுயாம் பிறரை நோக்கின்
ஓலமிட்(டு) உறுமியே கற்பு போச்(சு) என்பீர்கள்
ஒரு பாலர்க்(கு) ஒரு நீதியோ”
(1)

என்னும் வரிகள் கற்பென்னும் விலங்கைப் பெண்ணிற்குப் பூட்டிவி்டு, சமுதாயத்தில் சுதந்திரமாகவும், சுகமாகவும் வாழ விரும்பிய சில ஆண்களது இழிவுக் குணத்தைச் சுட்டிக் காட்டுகின்றன.

“ஆணின் ஆதிக்க வெறிக்குப் பெண் பலியாகும் ஒவ்வொரு முறையும் தனக்குச் சாதகமாக ஒரு பெயரை இட்டு அதைச் சமூக நியதியாக்கிவிடும் சாமர்த்தியம் ஆணுக்கு மட்டுமே உண்டு” (2)

இராஜாராம் மோகன்ராய், ஈசுவர சந்திர வித்யாசாகர், ஈ.வே.ரா, தயானந்த சரஸ்வதி, பண்டித ராமாபாய், முத்துலட்சுமி ரெட்டி முதலியோர் பெண்ணுரிமை, குழந்தை மணம் ஒழிப்பு, விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு முறை போன்றவற்றிற்காகப் போராடினர். தகவல் தொடர்பின் மூலம் மக்களது மனதில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த இயலும் என்ற நம்பிக்கையில் விலைமாதரைக் கண்டித்து “ஒழுக்கச் சிர்திருத்தத்திற்கு ஆதரவு” என்ற பத்திரிக்கை வந்தது. இதனை எவாஞ்சலிகள் என்னும் கிறிஸ்தவ மதப்பிரிவினர் நடத்தி வந்தனர்.காப்பிய இலக்கியம்

சங்கம் மருவிய காலப் படைப்புகளே காப்பியங்கள். தமிழ்க் காப்பியங்களில் கலையைத் தொழிலாகக் கொண்டவர்கள் கதை மாந்தர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். நடன மகளிர் அனைவரும் பொது மகளிராகவும், விலைமகளிராகவும், பரத்தமை தொழிலில் ஈடுபடுபவராகவும் தமிழ்க் காப்பியங்களில் காட்டப்பட்டுள்ளனர்.

1. நடன மகளிர், சிலப், 1:5:50

2. ஆடற் கூத்தியர், சிலப், 18:35:24

3. அரங்கக் கூத்தி, சிலப், 18:35:24

4. வம்பப்பரத்தை, சிலப், 1:10:219

5. அரங்கியன் மகளிர், மணி, 7:44

6. கடை கழி மகளிர், சிலப், 2:14:

7. கணிகை, நீல, 163:4

8. தாசி, சீவக, 7:1675

9. கலையுணர் மகளிர், 7:1675

10. பரத்தை, சூளா, 7:663

11. நாடக மகளிர், யசோ, 228:25.

இது போன்று இன்னும் பிற பெயர்கள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளன.

கலைகளில் கணிகையர் வல்லவர்களாக இருந்தாலும், பல ஆடவருடன் பழக்கம் இருந்ததால் சமூகத்தில் தவறான கருத்து பதிவாகியுள்ளது. மேலும் இவர்களது இயல்புகள் பலவற்றையும் கதாபாத்திரங்கள் தாங்களாகவே எடுத்துரைப்பது போன்று உள்ளன. இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தில் மாதவியின் விருப்பையோ அல்லது அவளது உணர்வுகளையோ பொருட்படுத்தாமல், அவளை அவள் தாய் கூனி மூலம் விற்பது, அவர்களுடைய வாழ்க்கை அமைப்பை எடுத்தியம்புகிறது. கணிகையர் குலத்தில் பிறந்த காரணத்தினால் சமூகம் தான் வகுத்திருக்கும் எல்லையில் அவள் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கட்டாயப்படுத்துகிறது.

“சலம்புணர்க் கொள்கையோடு சலதியொடு ஆடி
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுந் தரும்”
(3)

மனைத்தக்க மாண்பு இல்லாத இனம் எங்களுடையது. கற்பென்னும் திண்மையை உடைத்து நொறுக்கிய சமுதாயம், எங்களைப் பெருந்தகவாக எப்படி ஏற்றுக்கொள்ளும்? எனக் கேள்விக் கணையைத் தொடுக்கிறது.

காதலன் இறந்ததும் அவனது சிதையில் குளிர்ந்த பொய்கையில் குளிப்பது போல் எரிமூழ்கும் பத்தினிப்பெண்டிகள் அல்லர் கணிகையர் என்பதை,

“... ... ... ... ... முதுகுடிப்பிறந்த
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம்
கைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே
பாண்மகள் பட்டுழிப் படூஉம் பான்மையில்
யாழினப் போலு மியல்பின மன்றியும்
நறுந்தா துண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்
வினையொழி காலைத் திருவின் செல்வி
அனையே மாகி யாடவர்த் துறப்போம்”
(4)

எனச் சித்ராபதி கணிகையரின் நிலையில்லாத் தன்மை குறித்துக் கூறுவதாக உள்ளது.“நிலையான வாழ்க்கை உடையவர் அல்லர். நிலைத்த மண வாழக்கையோ அல்லது துறவு வாழ்க்கையோ அவர்களுக்கு உரிமையாகாது. கணவனிறந்த துயரத்தால் தன் உயிர் மீது வெறுப்புக் கொண்டு, குளிர்ந்த குளத்து நீரில் நீராடுவது போல் தீயினில் குளிக்கும் இயல்புடைய குலமகளிர் போன்றவர்கள் அல்லர். கணிகையர் என்றும் பலர் தரும் உணவைப் பெற்று அதன் மூலம் வாழ்க்கை நடத்துபவர் நாம் என்றும், பாணன் இறந்தால் அவனால் இசைக்கப்பட்ட யாழ் இறந்து போகாது வேறொருவரால் இசைக்கப்படும். அதைப் போன்று இயல்புடையவர்கள் கணிகையர் என்றும், மணமுடை மகரந்தத்தையுடைய பூவில் தேனில்லாத போது அதை விட்டு நீங்கும் வண்டினைப் போன்றவர்கள் கணிகையர் என்றும், நல்வினைகள் ஒருவரை விட்டு நீங்கும் போது திருமகள் நீங்குவது போல், ஆடவரை விட்டுப் பொருள் குறைந்த போது கணிகையர் நீங்குவர் என்றும் தெளிவாகச் சித்ராபதி அக்காலக் கணிகையரின் நிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறாள்” (5)

“ஆடவர் காண நல்லரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகுங் காட்டி
சுரும்புநாண் கருப்புவில் அருப்புக் கணைதூவச்
செருக்கயல் நெடுங்கண் சிறுங்குவலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப்
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி
வண்டிற் றுறக்கும் கொண்டி மகளிர்”
(6)

என்ற அடிகள் மலரைத் துறக்கும் வண்டினைப் போலத் தனக்குப் பொருள் முதலியவற்றைக் கொடுத்தாரைப் பரத்தையர் துறந்துவிடுவர் என்பதையே விளக்குகின்றன.

உதயகுமரன் மணிமேகலையைப் பற்றி இழித்துக் கூறிய மொழிகளை மணிமேகலை சுதமதியிடம் கூறுவதாக,

“கற்புத் தானில் ணற்றவ வுணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள் விளையாட்டியென்
நிகழ்ந்தனனாகி நயந்தோ னென்னாது”
(7)

கணிகையர் குலத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக அவள் தான் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, ஏனையோரால் வினவப்படுகிறது. சமூகம் விதித்த அமைப்பிலேயே அவள் வாழ வேண்டும் என வற்புறுத்துகிறது. உதயகுமரன் அதுவும் நாட்டை ஆளும் அரசனுடைய மகன் பரத்தமை தொழிலில் ஈடுபடாமல் துறவு வாழ்க்கையை மேற்கொண்டு வரும் மணிமேகலையை இழிவாகக் கூறுவதிலிருந்து, அவளுக்கும் அக்குலத்திற்கும் இருந்த சமூக மதிப்பின்மை புலனாகிறது.

ஆதிரையின் கற்பு சிறப்பைக் கூறும் சாத்தனார் அவ்விடத்திலும் பரத்தையின் இயல்பினைக் காயசண்டிகை வாயிலாக உரைக்கிறார்.

“ஆதிரை கணவன் ஆயிழை கேளாய்
சாதுவன் என்போன் தகவிலன் ஆகி
அணியிழை தன்னை அகன்றனன் போகிக்
கணிகை யொருத்தி கண்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக்
கெட்ட பொருளின் கிளை கேடுநுதலின்
பேணிய கணிகையும் பிறர் நலங்காட்டி
காணம் இலியெனக் கையுதிர் கோடலும்”
(8)

என்ற அடிகளில் கணிகையருக்குப் பொருளே முக்கியமானது என்பதைப் புலப்படுத்துகின்றன. இக்கருத்தினையே வளையாபதி பாடல்களும் விளக்குகின்றன.

“ஆய்டுரங் கஞ்சீறை வண்டினம் போல்க வென்று
பாயிர மின்றிப் பயிற்றி மொழிந்தனள்
மேவரும் வான்பொருள் தந்துநின் றோள்நம்பி
யாவ ரடைந்தவர்க் கவையும் புரைப”
(9)

வயது முதிர்ந்த கணிகை, இளைய கணிகைக்கு உன்னிடம் வருபவர் பலர் இருப்பினும், பொருள் மிகுதியாகக் தருபவரை ஏற்றுக்கொள் என அறிவுரை கூறுவதோடு கணிகையரை விலங்குகளோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார்.

“ஊன்நின்ற வலிழுக்கென்னா
னுயிரினையு முளதென்னா
னோன்றலையு நோன்பென்னா
னோக்குடைய கணிகையரே
போன்றிருந்து பொதியறுக்கும்
புத்தன்றன் புன்னெறியை
யான் சென்ற தடிப்படுப்ப
னறக்கரும் மிகுவென்றாள்”
(10)இவ்வரிகள் கணிகையர் பொருளைக் கவரும் இயல்பினர் என்பதை உணர்த்துகின்றன. ஆணாதிக்க வேட்கைக்குப் பெண்கள் பழியானதோடு, சமூகத்தில் அவமானச் சின்னமாக வாழ வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. திருமணத்துக்குப் புறம்பான ஒழுக்கத்தில் ஆண்களும் பெண்களும் ஈடுபட்டாலும் பெண்ணை மட்டுமே இச்சமூகம் இழிவாகவும் கேவலமாகவும் கருதுகிறது. தவறு செய்யும் ஆணைக் கண்டிக்கவோ, இடித்துரைக்கவோ செய்யவில்லை.

“மாடலொ மெரிந்து மின்னும் வயிரக் குண் டலத்தோ டம்பொற்
றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகை வாண்முகத்து நல்லார்
பாடலா னரம்பின் தெய்வம் படிவங் கொண் டனையநீரா
ராடலா லரம்பை யொப்பா ரவரிலா யிரரை யீந்தான்”
(11)

நடன மகளிர் அடிமைகளாக ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டிற்கு அனுப்பப்பட்டதை உணர முடிகிறது.

“மக்கட் பயந்து மனையற மாற்றுதல்
தக்க தறிந்தார் தலைமைக் குணமென்ப
பைத்தர வல்குற் படிற்றுரை யாரோடு
துய்த்துக் கழிப்பது தோற்ற மொன்றின்றே”
(12)

கணிகை மகளிரை நுகர்ந்து வாழும் வாழக்கை மாண்புடையதன்று. கணிகையர் குலத்தில் பிறந்தால், அவள் சாகும் வரை கணிகையாகவே இருக்க வேண்டும் என்று சமூகம் கட்டாயப்படுத்துகிறது. கணிகையாகிய பெண் சமுதாயத்தில் விலங்கு போன்று கருதப்பட்டுள்ளாள். பொருட்களை ஏலம் விடுவது போன்று, பெண்களை ஏலம் விடும் ஒரு அபத்த நிலையே அன்றைய சமூகத்தில் நிலவியுள்ளது. ஆண்களின் காம விளையாட்டுக்கான கால்பந்தாகப் பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ள இழிவு நிலையினைக் காப்பியங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.முடிவுரை

* சோழர்களது ஆட்சிக்காலத்தில் பகைநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு இறைப்பணிக்கென நியமிக்கப்பட்டவர் தேவதாசிப்பெண்கள். நாயக்கர் ஆட்சிக்காலம் இதற்குப் பேரழிவினைத் தேடித் தந்துள்ளது.

* கோவிலுக்கு ஆடு, மாடுகளை நேர்ந்து விடுவது போன்று “பொட்டுக் கட்டுதல்” என்னும் சடங்கின் வாயிலாக தேவதாசிப் பெண்களை நேர்ந்து விடுகின்றனர். உணர்விழைகளால் உயிரூட்டப்பட்ட பாவையை அஃறிணை உயிராக்கியுள்ளனர். இச்செயல் ஆணாதிக்கத்தின் உச்சகட்டத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

* கற்பென்னும் சிறைக்குள் பெண்மையைச் செலுத்தி வாழ்நாள் முழுவதும் தன்னை நிரபராதியாகியுள்ளனர் ஆண்மக்கள்.

* தொல்காப்பியர் காலந்தொட்டு மரபுகளை உடைத்தெறிந்த புதுக்கவிதை வரையிலும் பாலியல் உணர்வால் நெறி தவறிய ஆணினம் மேன்மைபடுத்தப்பெற்று அதற்குப் பழியான பெண்ணினம் “பரத்தை” என இழிவுபடுத்தப் பெற்றுள்ளதை இலக்கியப் பதிவுகளின் வழி அறிந்து கொள்ள முடிகிறது.

* பெண்மையைச் சிறப்பிக்கப் பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் நடைமுறை வாழ்வில் அவை யாவும் நலம் சேர்க்கவில்லை என்பதை விறலி விடு தூதிலக்கியப் பதிவுகள் காட்டுகின்றன.

சான்றெண் விளக்கம்

1. மீனாட்சி முருகரத்தினம், பெண்ணியச் சிந்தனைகள், ப. 20.

2. அ. ஜெய்குமார், பெண்களும் சமூகமும், ப. 32.

3. உ. வே. சாமிநாதையர் (பதி.ஆ), சிலப்பதிகார மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லாருரையும், ப. 243.

4. உ.வே.சாமிநாதையர் (உ.ஆ), மணிமேகலை, 18:4:22.

5. வேங்கடசாமி நாட்டார், துரைச்சாமிப்பிள்ளை சு., (உ.ஆ) மணிமேகலை, ப. 235.

6. உ. வே. சாமிநாதையர் (உ.ஆ), மணிமேகலை, பக்.187-188.

7.மேலது, ப. 195.

8. மேலது, ப. 62.

9. வெங்கடாஜலம் (உ.ஆ), வளையாபதி, ப. 52.

10. ஔவை துரைச்சாமிப்பிள்ளை, நீலகேசி, ப. 163.

11. கோக்கலை ஜேராஜன், சூளாமணிச் சுளைகள், ப. 176.

12. வெங்கடாஜலம், மு. நூ, ப. 63.

துணைநூற்பட்டியல்

1. கோக்கலை ஜேராஜன், தோலா மொழியாரின் சூளாமணிச் சுனைகள், கவிக்குயில் பதிப்பகம், சென்னை,1993.

2. சாமிநாதையர். உ. வே. (பதி.ஆ), சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும், அடியார்க்குநல்லாருரையும், உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, 2008.

3. சாமிநாதையர் உ. வே. (உ.ஆ), மணிமேகலை, உ.வே.சா. நூல் நிலையம், சென்னை, 2008.

4. துரைச்சாமி பிள்ளை.ஔவை (உ.ஆ), நீலகேசி, கழகவெளியீடு, சென்னை,1987.

5. ஜெயக்குமார். அ, பெண்களும் சமூகமும், உமா பதிப்பகம், சென்னை,1999.

6. மீனாட்சி முருகரத்தினம், பெண்ணியச் சிந்தனைகள், பெண்ணிய மனிதநேய நூல் வெளியீடு நிறுவனம், சென்னை,1999.

7. வெங்கடாஜலம் (உ.ஆ), வளையாபதி, பாவை பதிப்பகம், சென்னை, 2006.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p145.html


ISSN 2454 - 1990
Change Language/மொழி மாற்றம் செய்திட

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...

சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)


மாத பலன்கள்
படைப்புகளுக்குப் பரிசளிப்பவர்கள்
சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License