இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் கூறுகள்

முனைவர் ச. மாசிலாதேவி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
ஜீ டி என் கலைக்கல்லூரி, திண்டுக்கல்..


முன்னுரை

ஒரு நாட்டு மக்களின் பண்டைய வரலாற்றினையும் வாழ்க்கை முறையையும் நாகரீகத்தையும் உணர்வதற்கு அந்நாட்டில் காணப்பெறும் கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள், நிலத்தின் கீழப் புதைந்த கட்டட வகைகள், பண்டைய நாணயங்கள் அந்நாட்டில் வழங்கும் பண்டைய இலக்கியங்கள் முதலியவை முக்கியக் கருவிகளாக உதவுகின்றன. பண்டைத் தமிழர்களின் வாழ்கை முறை, பண்பாடு, நாகரீகம் ஆகியவற்றை அறிவதற்கு பேருதவியாக இருப்பன சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம் என்ற ஒப்புயர்வற்ற இலக்கணம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவையாகும். தமிழ் மொழியின் தலைசிறந்த இலக்கணம் தொல்காப்பியம். தமிழ் மக்களது பேரறிவின் கருவூலமாக திகழ்கிறது. இன்று நமக்கு கிடைத்துள்ள எல்லா நூல்களுக்கும் முற்பட்ட முழுத்தமிழ் நூல் இது. இவை எல்லாவற்றையும் விடத் தொன்மையினாலும் ஆழ்ந்த பொருளுடைமையினாலும் மேம்பாட்டுத் திகழ்வது.

இந்நூல் எழுத்தியல், சொல்லியல், பொருளியல், என முப்பெரும் பகுப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது எழுத்தியல்,சொல்லியல் ஆகிய இரு பிரிவுகளும் தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறை செய்துள்ளது. மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ள பொருளதிகாரம் மக்கள் வாழ்வியலை எடுத்துக் காட்டுகின்றது. இந்நூல் பண்டைய தமிழ் நூல்களுக்கு இலக்கணம் கூறும் நூலாக இருப்பினும் அதில் காணப்பெறும் பல குறிப்புகள் நம் அருந்தமிழ் மக்களின் பெருந்திரு நாகரீக வரலாற்றினை அறிய பெருந்துணை புரிகின்றன. தொல்காப்பியம் காட்டியுள்ள வாழ்வியல் கூறுகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியத்தில் இல்வாழ்க்கை

தொல்காப்பியம் மக்கள் வாழ்வினை அகவாழ்வு, புறவாழ்வு என இரு வகைப்படுத்துகின்றது. ஒத்த அன்புடையராகிக் கணவனும் மனைவியும் இணைந்து வாழும் குடும்ப வாழ்வினை அகவாழ்வென்றும், இவ்விதம் இணைந்த குடும்பங்கள் சேர்ந்து வாழ்வதற்குரிய அரசியல் வாழ்வினைப் புறவாழ்வென்றும் பழந்தமிழர் பண்பாட்டில் இடம்பெற்றுள்ளன.

அக ஒழுக்கத்தை குறிஞ்சி, பாலை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணை ஒழுக்கங்களோடு கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழு வகையான ஒழுக்க மரபினைச் சங்ககாலத் தமிழர் கொண்டிருந்தனர் என்பதை,

“கைக்கிளை முதலாம் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளைந்த எழுதிணை என்ப” (தொல்.அகத்திணை -நூற்பா1)

என்ற தொல்காப்பிய அகத்திணை நூற்பா விளக்கியுள்ளது. ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய காதலர் இருவர், கருத்தொருமித்து இல்லத்திலிருந்து நல்லறஞ் செய்வதற்கு இன்றியமையாத அன்பின் வழிப்பட்ட உள்ளத்துணச்சியே அன்பின் ஐந்திணை என்று சிறப்பித்து கூறியுள்ளார்.அன்பின் ஐந்திணையாகிய அகவொழுக்கமும் களவு,கற்பு என இரு வகைப்படும். உருவும் திருவும் உணர்வும் முதலிய பண்புகளால் ஒத்து விளங்கும் தலைவனும் தலைவியும் நல்லூழின் வழியால் தாமே எதிர்ப்பட்டு,அன்பினால் ஒருவரையொருவர் இன்றியமையாதவராய், உலகத்தார் அறியாது மறைந்தொழுகுதல் “களவாகும்”. இத்தகைய மறைந்தொழுகுதலைத் தவிர்த்து பெற்றோர் உடன்பாடு பெற்று இருவரும் உலகத்தார் அறிய மணஞ் செய்து கொண்டு மனையறஞ் செய்தலே ‘கற்பு’ என வழங்கப்படுகிறது. தலைவனும் தலைவியும் இணைந்து வாழ்வதற்கு அவர்கள் தாமே விரும்பி தேர்ந்து பின்பு பெற்றோரிடம் சம்மதம் பெற்று திருமணஞ் செய்து கொண்டு வாழும் முறை தமிழர்களிடையே பயின்று வந்துள்ளதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தொல்காப்பியத்தில் சமூக வாழ்க்கை

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் மக்களிடையே பலவிதப் பிரிவுகள் ஏற்ப்பட்டிருந்தன. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், என்ற பிரிவுகள் இருந்தன. இவையாவும் அவர்கள் செய்யும் தொழிலினால் ஏற்ப்பட்ட பிரிவுகளாகும். இவர்களைத் தவிர பாணர், கூத்தர், பொருநர், பார்ப்பார், அடிமைவேலை செய்வோர், தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் போன்ற பல பிரிவுகள் மக்களிடையே இருந்துள்ளன.

அந்தணர்

அறநெறியில் வாழ்வோர் அந்தணர். அரசர்களை அறநெறிப்படுத்தல், நாட்டு மக்கட்கு நல்லுரை வழங்கல், மக்கள் நல்வாழ்விற்காக இறைவனை வேண்டித் தவங்கிடத்தல் இவை அந்தணரது கடமைகளாகும். அந்தணர் வடிவத்தை,

“நூலே கரகம் முக்கோல் மiணயே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய” (மரபியல் - நூற்பா 71(இளம்))

என்று தொல்காப்பியம் உணர்த்துகிறது.

அரசர்

தமிழகத்தில் ஆட்சிமுறை ஏற்ப்பட்ட காலத்திலிருந்தே சேர, சோழ, பாண்டியர் ஆண்டனர். இவர்களே பழந்தமிழ்ப் பெருங்குடி மக்களின் மூத்த முதற்குடியினர் இவர்களை “வண்புகழ் மூவர்” என்று செய்யுளில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் பெருநில மன்னருக்குட்பட்ட குறுநில மன்னரும் இருந்து வந்தனர். படை, கொடி, குடை, முரசு, குதிரை,யானை, தேர், தார், முடி போன்றவை அரசர்க்கு சிறப்புடையனவகும் என்பதை,

“படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய“ (மரபியல்- நூற்பா - 72 (இளம்))

என்ற நூற்பாவில் எடுத்துரைத்துள்ளார் தொல்காப்பியர்.வணிகர்

பழந்தமிழ் வணிகர்கள் “கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது” நேர்மையுடன் வாணிகம் செய்யும் பண்புடையவர்கள். வாணிகம் செய்யும் தொழிலை வைசியன் பெறுவான் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

“வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” (மரபியல்- நூற்பா - 78 (இளம்))

என்பது தொல்காப்பிய மரபியல் நூற்பா. இவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரு வாணிகமும் கூல வாணிகமும் செய்து வந்துள்ளனர்.

வேளாளர்

இவர்கள் “தொழுதூண் சுவையினும் உழுதூண் இனிது” என்ற கொள்கையைக் கடைபிடித்து உழவுத்தொழிலைக் கொண்டு வாழ்பவர்கள்.

“வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி “ (மரபியல் - நூற்பா 81 (இளம்) )

என்ற நூற்பா இதனை உணர்த்துகின்றது. பல்வகைத் தொழிலாளர்களும், வேளாளரேயாவர். எனினும் உழவொன்றே முதன்மையானதாகக் கூறப்பட்டது. இத்தகைய நான்கு வகைப் பிரிவுகள் தொல்காப்பியர் காலத்தில் பிறப்பினால் ஏற்பட்டவை அல்ல. தொழில், ஒழுக்கம், கல்வியறிவு, திறமை காரணமாகவே இப்பிரிவுகள் அமைந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. “சாதி” என்ற சொல் தொல்காப்பியத்தில் காணப்பெறும் என்றாலும் அஃது ஓரிடத்திலேனும் மக்களைக் குறிக்கும் சொல்லாக வழங்கப் பெறவில்லை.

“நீர்வாழ் சாதியுள் அறுபிறப்பு உரிய” (மரபியல்-நூற்பா 44 (இளம்) )

“நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே” (மரபியல்-நூற்பா 64 (இளம்) )

என்ற நூற்பாக்களில் ‘சாதி’ என்னும் சொல் நீரில் வாழும் உயிர்களைக் குறிப்பிட்டுள்ளது என்று அறியலாம். தமிழர்களின் வாழ்வியல், அரசியல், பொருளியல் ஆகியவை தடையின்றி நடைபெறுவதற்காக வேண்டி நான்கு விதப் பிரிவுகளாக வகுத்து நம் முன்னோர்களின் அறிவின் திறமை பாராட்டுக்குரியதாகும்.

இவர்களைத் தவிர அடிமைகள், தொழில் வல்லார், நடனமாடுவோர், யாழ் வாசிப்போர், நாடகம் நடிப்போர் ஆகிய வகுப்பினரும் தமிழ்நாட்டிலிருந்தனர் என்பதை நாம் புறத்திணையினால் அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் தொல்காப்பியர் காலத்தும் அவருக்கு முன்னர் காலத்தும் சமூக வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது.

தொல்காப்பியம் காட்டும் பழக்கவழக்கங்கள்

பண்டையத் தமிழர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. அவற்றில், பண்டையத் தமிழர்களின் திருமணச் சடங்கு, அவர்களின் நம்பிக்கைகள் குடும்பப் பொறுப்பு. எவ்வாறு இருந்துள்ளது என்பதை தொல்காப்பிய நூற்பா வழி தெரிந்து கொள்ளலாம்.திருமணச் சடங்கு

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு பண்டைத் தமிழ் மக்களில் ஆடவரும், பெண்டிரும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டு தம் காட்சியும் கருத்தும் ஒன்றுபட்டுத் தமக்குள் ஒருவரையொருவர் உயிர்போல் காதலிக்கும் காதலன்பு நிகழப்பெற்ற பின் தமக்குள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இஃது ‘அன்பினைந்திணைக் காமக் கூட்டம்’ என வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவர்தம் பெற்றோரும் சுற்றத்தாரும் திருமணம் செய்து வைப்பார்கள்.

“கற்பெனப் படுவது காரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர்க் கொடுப்பக்கொள் வதுவே” (தொல்.பொரு.நூ.17)

என்ற தொல்காப்பிய நூற்பாவால் அறிந்து கொள்ளலாம். மகளிர்க்குரியார் தம் மகளிரால் விரும்பப்பட்ட காதலர்க்குத் தம் மகளிரை மணம் செய்து கொடுத்தனர். பெற்றோரால் ஏற்றுக் கொள்ளப்படாத இருவரும் தம் பெற்றோர் உற்றார் அறியாமல் வேற்றிடஞ் சென்று மணஞ்செய்து கொள்வர். இதனை

“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான்” (தொல்.பொரு.கற்பி. -நூற்பா2)

என்ற தொல்காப்பிய நூற்பா எடுத்துரைக்கின்றது. ஒருப்பட்ட வழிப் பெற்றோரே. ‘சடங்கு’ மூலம் மணம் நடத்தி வைப்பர். காதலர்களிடையே வஞ்சித் தொழுகுதலும் பொய்யும் தலை காட்டின காலத்தில் தான் பண்டைத் தமிழ் சான்றோர் திருமணச் சடங்கை வகுத்தனர் என்பதனை,

“பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (தொல்.கற்பி - நூற்பா4)என்ற நூற்பாவால் அறிந்து கொள்ளலாம். ஐயர் என்பது ஆரியர் என்ற சொல்லின் திரிபு அன்று. ஐயர் என்ற ‘ஐ’ என்பதன் அடியாகப் பிறந்ததாகும். ‘ஐ வியப்பாகும்” என்பது தொல்காப்பியம் (தொல்-சொல்-உரியி-நூற்பா 87) வியக்கதக்க குணமும் செயலும் உடைய முனிவரையே” குறிக்கும். இச்சொல் நாளடைவில் ஒரு குடும்பத்திற்குத் தலைவராய்க்-குலப்பெரியோரைக் குணத்திலும், செயலிலும் சிறந்தாரைக் குறிப்பிடும் சொல்லாக விளங்கிறது. மேற்குறிப்பிட்ட நூற்பாவின் மூலமாகப் பண்டைத் தமிழர்களின் திருமண முறைகளை அறிய முடிகிறது.

நம்பிக்கைகள்

தொல்காப்பிய காலத் தமிழர்கள் மந்திரத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இன்றும் மக்கள் மந்திரச் சொற்களின் பொருளை அறிவதில்லை. அக்காலத்தில் பெரியோர்களால் சொல்லப்பட்ட பொருள்’ தெரியாத சொற்களை மந்திரங்கள் என்று மக்கள் நம்பினார்கள். இதனை

“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப” (செய்யு-நூற்பா 71 (இளம்) )

என்ற நூற்பாவால் அறிந்து கொள்ளலாம்.

எக்காரியங்களுக்கும் நல்ல நாள், கெட்ட நாள் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடமிருந்தது.

“மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
துறந்த ஓழுக்கம் கிழவோற் கில்லை” (தொல்-களவி-நூற்பா 45 (இளம்)

என்ற நூற்பாவால் களவு காலத்தில் கெட்ட இராசியிலும் கெட்ட நாளிலும் தலைவியுடன் சேராமல் இருக்கும் ஒழுக்கம் தலைவனிடமில்லை என்பது தெரிகின்றது. எனவே, கற்புக் காலத்தில் காதலர்கள் தீய ஓரையிலும் தீய நாளிலும் மருவுதல் இல்லை என்பது தெளிவாகின்றது.

வெட்சி வீரர்கள் நிரை கவரச் சொல்லுங்கால் நற்சொல் கேட்டல் உண்டு. இதனை விரிச்சி என்று வழங்குவர். போர் செய்யப் புறப்படும் வேந்தன் குறித்த நேரத்தில் புறப்படத் தாமதமானால் அந்நேரத்தில் குடையையும் வாளையும் ஊருக்குப் புறத்தே அனுப்பி வைப்பான் என்பதை

“குடையும் வாளும் நாள்கோள்”

என்பதிலிருந்து அறியப்படும். சகுணம் பார்க்கும் வழக்கமும் தமிழர்களிடமிருந்தது.

“நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” (தொல்.புறத்-நூற்பா30)

என்ற சொற்றொடர் இதனைக் குறிப்பிடுகின்றது.

தான் நினைத்த காரியம் நிறைவேறினால் ‘இன்னது தருவேன்’ என்று தெய்வத்தை வேண்டிக் கொள்ளும் வழக்கம் அவர்களிடமிருந்தது இக்காலத்தில் இதனைப் ‘பிரார்த்தனை’ என்றும் ‘வேண்டுதல்’ என்றும், ‘நேர்த்திக்கடன்’ என்றும் கூறுகிறோம். தொல்காப்பியர் இதனை “தெய்வக் கடம்” (கற்பி-நூற்பா 9) என்று குறிப்பிட்டுள்ளார்.குடும்பப் பொறுப்பு

இல்லறத்தை நடத்தும் பெரும் பொறுப்பு கணவனுக்கு வாழ்க்கைத் துணையாக நிற்கும் மனைவியிடம் இருந்தது. மனையின் கண் இருந்து மனையறம் நிகழ்த்தும் உரிமையுடையவள் மனைவி. மனை வாழ்க்கைக்குப் பாலிவினைத் தரும் மனைவியை,

“மனைக்கு விளக்காகிய வாணுதல்” (புறம் - 314)

என்று புறநானூற்றுப் புலவர் பாராட்டுகிறார்.

இத்தகைய குடும்ப விளக்காகவும், இல்லத்தை ஆள்பவளாகவும் மனைவி இருப்பதால் ‘இல்லாள்’ என்றும் போற்றப்பட்டாள். கற்பொழுக்கத்தில் வாழும் பெண்ணின் பொறுப்பினை,

“கற்பும் காமமும், நற்பால் ஒழுக்கமும்,
மெல்லியல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்” (கற்பி - நூற்பா 11)

என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

இதில் ‘விருந்து’ என்பது முன்பின் அறியாத புதியவர்கள் என்பதும், ‘சுற்றம்’ என்பது தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இல்லறம் இனிது நடைபெறுவதற்கு வேண்டிய செல்வத்தைச் சேர்ப்பது கணவனின் பொறுப்பாக இருந்தது. கணவனை இழந்தோர் பருத்திப் பஞ்சினை நூலாக நூற்றுத் தம் குடும்பத்தைப் பாதுகாத்தனர். இவர்கள் “பருத்தி பெண்டிர்” (புறம்-25,26) என்ற பெயரால் தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

இலக்கிய வளர்ச்சி

தமிழில் பாவகை இலக்கியங்களும் பெருக வேண்டும் என்பது தொல்காப்பியரின் கருத்தாகும். மொழிபெயர்ப்பு நூல்களும் புது நூல்களும் தமிழில் வந்து குவிய வேண்டும் என்பது பண்டைத் தமிழரின் நோக்கமாகும்.

“சென்றிடு வீர்எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்” (பாரதியார் கவிதைகள் தமிழ்த்தாய் - 11)

என்று பாரதியாரைப் பாடும்படி செய்தது இந்த பரந்த நோக்கமேயாகும். மொழி பெயர்ப்பு நூல்களை வழிநூல் வகைகள் ஒன்றாகத் தொல்காப்பியரேக் கூறியுள்ளார்.

“மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல்” (மரபியல் - நூற்பா 94 (இளம்))

என்பது அவரது திருவாக்கு. இதனால் சிறந்த நூல்கள் எம் மொழியில் இருப்பினும் அவற்றை மொழிபெயர்த்துக் கொள்ளும் உயர்ந்த வழக்கம் தமிழர்களிடம் இருந்து வந்தது என்பது உணரத்தக்கது. இந்த பண்பாட்டின் அடிப்படையில்தான் பாரதியாரும்,

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்” (பாரதியார் கவிதைகள் - தமிழ் - 3)

என்று நமக்குக் கட்டளை இடுகிறார். தமிழ் மீதுள்ள காதலினால் “தமிழில் எல்லாம் உள்ளன” என்று வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிராது ஒல்லும் வகையெல்லாம் தமிழின் நீர்மை குன்றாது தமிழை வளர்ப்பது இன்றைய இளைஞர்களின் கடைமையாகும். இதுவே தொல்காப்பியர் கருத்துப்படி, நம் மொழியை வளமடையச் செய்வதாகும்.

தொகுப்புரை

பண்டைத் தமிழர்களின் புகழுக்கும் பெருமைக்கும் சான்றாக நின்று நிலவுவது தொல்காப்பியப் பொருளதிகாரம் என்பது இக்கட்டுரையிலிருந்து தெளிவாகின்றது. உலகிலேயேத் தோன்றி வளர்ந்த பண்பட்ட மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று என்றும், அம்மொழியைப் பேணி வளர்த்த தமிழர்கள் பண்பட்ட நாகரீகமுடையவர்கள் என்றும் உணர முடிகின்றது. தமிழ் மொழியில் இலக்கியங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதால்தான், அவற்றை அடிப்படையாகக் கொண்டு “வாழ்க்கை இலக்கணம்” தோன்றுவதற்கு அவை உறுதுணையாக அமைந்தன. இத்தகைய வாழ்க்கைப் பெருநூல் தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தோன்றி வேரூன்றி நிலை பெற்றுள்ளது.

இது தமிழர்களின் பழம் பெருமையையும் நாகரீக மேம்பாட்டையும் தெள்ளத் தெளிவாக விளக்கும் தொலைநோக்கி போலவும், காலக்கண்ணாடியாகவும் திகழ்கிறது என்பதை அறிய முடிகிறது.

சான்றாதரங்கள்

1. தொல்காப்பியர், தொல்காப்பியம்-பொருளதிகாரம் (இளம் பூரணர்), கழக வெளியீடு.

2. புறநானூறு, உரை உ.வே.சா.பதிப்பு.

3. பாரதியார் கவிதைகள்

4. திருவள்ளுவர், திருக்குறள் - பரிமேலழகர் உரை, கழக வெளியீடு.

5. வரதராசனார். மு, இலக்கிய ஆராய்ச்சி, பாரி நிலையம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p181.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License