இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

புறப்பாடல்களில் மொழியும் நடையும்
(பெண்பாற் புலவர் பாடல்களை முன்வைத்து)

முனைவர் ப. சு. மூவேந்தன்

உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002.


முன்னுரை

மனித இனத்தின் மாபெரும் படைப்பு மொழியாகும். மொழியால் அறிவும், அறிவால் சிந்தனையும், சிந்தனையால் இலக்கியமும் வளர்ந்தன. ஒவ்வொரு சமூகமும் தனக்கு இசைவான வகையில் மொழியைப் படைத்துக் கொண்டது. ஆதலால் தான் மொழி நாள்தோறும் பழையனவற்றைப் புறந்தள்ளியும், புதியனவற்றை ஏற்றுக்கொண்டும் வளர்ச்சிநோக்கிச் செல்கிறது. இத்தகு மொழி உருவாக்கம் பெற்ற காலத்தில் அது அனைவர்க்கும் பொதுவாக இருந்தது. சிந்தனைப் புலமும் அறிவுத்திறனும் வளர்ச்சிபெற, வளர்ச்சிபெற மொழியின் பனுவலாக்கமும் உடைமைப் பொருளாக மாற்றம் பெற்றது. அது இனத்தாலும், சமயத்தாலும், பாலினப் பாகுபாட்டாலும் பிரித்தாளப்பட்டது. இது கட்புலனாகா வளச்சார்புடைய ஒன்றனைப் போலத் தெரிந்தாலும் நுண்ணோக்கி உணர்வாற்கே நுண்ணிதின் புலப்படும்.

எழுதும் எழுத்துக்களில் உருவ வேறுபாடுகள் இல்லை. ஆனால் எழுத்துக்கள் கூடி உருவாகும் சொற்கூட்டங்களில் சொற்றொடர் அமைப்பு முறைகளின் வழி பால்வேறுபாட்டினைக் காணமுடியும். குறிப்பாக, ஆண்கள் எழுதும் படைப்புகளில், அவர்களின் தனித்த மேலாதிக்க நிலையையும், பெண்கள் எழுதும் படைப்புகளில் அவர்களின் சொந்த உணர்வு நிலைப்பாட்டினையும் புழங்குவெளியையும் இனம் காண முடியும்.

மொழியில் பெண்ணுக்கான மொழி, ஆணுக்கான மொழி என்ற வேறுபாடுகள் உள்ளனவா? எனில் எவ்வாறு சில இனக்குழுக்களிடையே தனித்த மொழிவழக்குகள் வழக்கில் உள்ளனவோ, அதேபோல் பெண்களுக்கிடையேயும் பயன்படுத்தத்தக்க மொழி ஒன்று உண்டு. இது பெண்மொழி அல்லது பெண்பிரதி எனப்படுகின்றது. அவ்வகையில் சங்கப் பெண்பாற் புறப்பாடல்களின் வீரம் குறித்த பாடல்களில் புலப்படுத்தப்படும் மொழியும் நடையும் குறித்து ஆராயப்படுகின்றது.

படைப்பாளரின் நடையும் படைப்பின் நடையும்

ஒரு படைப்பின் நடை நயத்துக்குக் காரணம் படைப்போரின் பண்பு நலன்களும், அவர் கையாளும் உத்திகளும் ஆகும். படைப்பாளரின் பண்பு நலன்களை அவர் படைத்த படைப்புக்களில் தோன்றும் கருத்துக்கள், உரை வடிவமைப்புகள், மொழிக்கூறுகள் போன்றவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிறுவலாம். படைப்போரின் பண்பு நலன்கள் அவர் வாழ்ந்த காலகட்டம், சமுதாயச் சூழல், அவரது அனுபவம் போன்ற பல அம்சங்களின் தாக்கத்தால் உருவாகின்றன. இதனால்தான் அவரது படைப்பின் நடையும் வேறுபடுகிறது. ஆகவே, பண்பு நலன்களை இனம் காண்பதன் மூலம் அவரது தனித்தன்மையை உணரலாம்.


மொழிநடையில் உணர்ச்சி

ஒரு படைப்பில் வெளியாகும் நடையை பொதுநடை, உணர்ச்சி நடை என இரு வகைப்படுத்தலாம். பொதுநடை என்பது கருத்துக்களைத் தருக்க அடிப்படையிலும், சாதாரண மொழிக்கூறுகளாலும் வெளிப்படுத்துவது ஆகும். இத்தகைய நடை அறிவியல் நடை என்றும் கூறப்படும்.

ஒரு படைப்பில் வெளிப்படும் நடை உணர்ச்சி நடையாகவும் இருக்கலாம். உணர்ச்சி நடை ஒரு தற்சார்பான நிலையிலான உணர்வு என்றாலும், அதைப் பொதுச்சார்பு நிலையிலான உணர்வு என வரையறுத்து நிலைநாட்ட முடியும். அலங்கார வர்ணனையோடு உணர்ச்சியை எழுப்பும் வண்ணம் கருத்துக்களையும் மொழிக்கூறுகளையும் பயன்படுத்திக் கட்டமைப்பதன் மூலம் உருவாகும் உரை உணர்ச்சி மொழி நடையைக் காட்டும் தன்மையுடையதாகும். இலக்கியப் படைப்புகள் இத்தகைய நடைத்தன்மை கொண்டவை. அலங்காரப் பண்புகளைக் கொண்டு உணர்ச்சியையும், மனவெழுச்சியையும் ஊட்டும் வகையில் உரைகளை உருவாக்குவதற்குப் பல உத்திகள் கையாளப்படுகின்றன. இந்த உத்திகள் மொழிக்கூறு சார்ந்தனவாகவும், உரை உள்ளடக்கம் அல்லது கருத்துச் சார்ந்தனவாகவும் அமையலாம். சங்கப்பாடல்களின் இலக்கிய நடையை உருவாக்கிய ஒரு நெடிய நீண்ட மரபு தமிழ்ப்புலவர்களுக்கு உண்டு.

அகச்சார்பு உணர்வு

உணர்ச்சிநடை என்பது பாடல்களில் வெளிப்படும் ஒரு காட்சியின் இன்ப உணர்வையும், துன்ப உணர்வையும் எழுப்ப, அப்பாடல் உணர்வுப் பாடலாக அமைகிறது. இம்மாதிரியான உணர்வு அகச்சார்பு நிலையிலான உணர்வும், உணர்ச்சி சார்ந்த உணர்வு எனவும் கருதப்படும். இத்தகு உணர்வுவயப்பட்ட நடையினையே வீரம் குறித்த பாடல்களின் நடையமைப்பாகக் காணமுடிகின்றது. குறிப்பாகச் சங்கப் புறப்பாடல்களில் ஔவையார், மாறோக்கத்து நப்பசலையார், பெருங்கோப்பெண்டு ஆகியோர் பாடல்களில் இத்தகு தன்மையை வெகுவாகக் காணமுடிகின்றது.

“என்னை மார்பில் புண்ணும் வெய்ய
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்
நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
அஞ்சுவரு குராஅல் குரலும் அரற்றும்
நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா
துடிய! பாண! பாடுவல் விறலி!
என்ஆ குவிர்கொல்? அளியீர் நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ அரிதே!
தோன்றதாம் உடுத்த அம்பகைத் தெரியற்
மண்ணுறு மதித்தலைத் தெண்நீர் வார
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர்போல
வழிநினைந் திருத்தல் அதனினும் அரிதே!” (புறம். 280)

என்னும் பாடலில் புலவரின் மன உணர்வைக் கருத்தாடலும் மொழிநடையும் ஒருசேர எடுத்துரைப்பதனைக் காணலாம்.


வடிவமைப்பும் உணர்வுப்பொருண்மைக் கூறும்

வடிவத்தில் உணர்வுக்கேற்ற நடையமைப்பினைப் பயன்படுத்துதல், சங்க இலக்கியத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். உணர்வு நிலைகள் மீதூறப்பெற்ற பாடல்கள் அனைத்திலும் இவ்வகையான நடையமைப்பினைக் காணலாம். ஒத்த தன்மையுடைய உணர்வு வெளிப்பாடுகளிலும், இந்நடை ஒற்றுமையினைச் சங்கப் புலவர்களிடையே காணமுடிகின்றது.

ஒரு பாடலின் பொருளுக்குள் உணர்வுக்கேற்ற வகையில் அதன் கருத்தலகுகள் கட்டமைக்கப்படுகின்றன. இதனை,

“வாயிலோயே வாயிலோயே - 1
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே - 2
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்அறியலன் கொல்? - 3
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே - 4
அதனால்
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை - 5
மரம்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே - - 6
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” - 7 (புறம். 206)

“என்னும் பாடலில் காணலாம். இதில் 7 கருத்தலகுகள் இடம் பெற்றுள்ளன. அதியமான் பரிசில் நீட்டித்த வழிச் சினம் மீதூறப் பெற்ற ஔவையார் பாடியது. இதில் ஔளவை தன் சீற்றத்தை வாயிலோனிடம் கூறுகிறாள். இன்றுபோய் நாளை வருமாறு வாயிலோன் அவரிடம் கூறியிருக்க வேண்டும். அம்பு எவ்வழியாக வந்ததோ, அவ்வழியாகவேப் பதிலுரையும் எய்யப்படுவதனை இப்பாடலின் சூழல் பொருத்தமுடன் அறியலாம்.


கருத்தாடலும் நடையும்

மொழிப்படைப்புகளின் நடையை, படைப்பில் காணப்படும் ஒலி, ஒலிக்கட்டு, சொற்கள், சொற்கட்டமைப்பு, புதிய சொற்கள், தொடர்கள், தொடர்க்கட்டமைப்பு, திரும்பத்தோன்றுதல், பொருண்மை உத்திகள், நிகர் கருத்து வெளிப்பாடு, எதிர்கருத்து வெளிப்பாடு, ஒருமுகப்பாங்கு போன்ற பல கருத்துக்களை வெளியிட்டு, அவை தோன்றும் முறையை வைத்துப் படைப்பின் நடையை நிலைநாட்டுவர். ஒரு படைப்பின் நடையானது அந்தப் படைப்பின் மொத்த வடிவமைப்பு, அந்த வடிவமைப்பில் பங்கெடுக்கும் மொழிக்கூறுகள், அந்த மொழிக் கூறுகளின் பண்புகள், அவைகளின் தோற்ற எண்ணிக்கை, தொடர்களைக் கையாளும் முறைகளில் ஏற்படும் வேறுபாடுகள் போன்றவற்றின் அடிப்படையிலும் பொதுவாக மொழி பயன்படுத்தப்படும் முறைகளில் ஏற்படும் வேறுபாடுகளின் மூலமும் நிலைநாட்டப்படும்.

அமைப்பு நயமும் கருத்தாடல் நடையும்

கருத்தாடல் என்பது தொடர்களாலான அடுக்குகளைக் கொண்டுள்ள மொழிக்கூறு என்பதால் தொடர்களை அடுக்கும் முறையிலும், அடுக்கி உரைக்கோவை படைக்கும் முறைகளிலும் வேறுபாடுகளைக் கொண்டு உரையின் நடையை வேறுபடுத்திக் காட்டமுடியும். ஒரு பாடலின் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு படைப்புகளின் நடையை விளக்கும்போது, படைப்புகளில் கையாளப்பட்டிருக்கும் ஒலி மற்றும் ஓசை அமைப்பு, சொல் அமைப்பு, தொடரமைப்பு போன்றவற்றைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் படைப்பாளரின் நடையமைப்பினை இனம் காணலாம். (செ. சண்முகம், 273:2010)

ஒலி மற்றும் ஓசை நடை

கருத்தாடலின் தொடர்களில் ஓசைநயம் வெளிப்படும் வகையிலான ஒலியமைப்பைக் கொண்டுள்ள சொற்களைக் கையாண்டு எதுகை, மோனை என்ற நடை உணர்வு தோன்றும் வகையில் தொடர்களை அடுக்குவதன் மூலம் பெறப்படும் உரைகள் ஓசைநய நடையைக் காண்பிக்கும். செய்யுள் வடிவ படைப்புகளில் இது பெரும்பான்மையாக ஆளுகை செலுத்தி வருகின்றது. இத்தகு ஓசைநயம் வீரம் குறித்த பாடல்களின் நடையாகப் பயின்று வருவது இயல்பான ஒரு மரபாகப் பின்பற்றப்பட்டுள்ளது. இதனை,

“சிறிய கட்பெறினே எமக்கீயும் மன்னே
பெரிய கட்பெறினே,
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே
சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன். மன்னே
என்பொடு தடிபடு வழிஎல்லாம் எமக்கு ஈயும் மன்னே
அம்பொடு வேல்நுழை வழி எல்லாம் தான் நிற்கும் மன்னே
நரந்தம் நாறும் தன் கையில்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே” (புறம். 235)

என்னும் பாடல்வழி அறியலாம்.


சொல்நய நடை

ஒரு படைப்பின் நடையுணர்வு எழுவதற்குப் படைப்பாளன் அந்தப் படைப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் வரையறுத்த சொற்கள் காரணமாக அமைகின்றன. இத்தகு நடையமைப்பினை,

“நாடா கொன்றோ காடாகொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ” (பா. 187)

“ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரோடு செல்லினும்
தலைநாள் போன்ற…” (பா.101)

என்னும் பாடல் சொற்றொடர்களின் வழி அறியலாம்.

தொடர்நய நடை

தகுந்த தொடர்களைத் தேர்வு செய்வதன் மூலமும், தேர்வு செய்த தொடர்களைத் தகுந்தவாறு அடுக்குவதன் மூலமும் கருத்தாடலின் நடை வெளிப்படுகின்றது. தொடர்நய நடையில் தொடர்களின் வடிவம், வடிவத்தைத் தேர்வு செய்தல் என்பவை முதன்மை பெறுகின்றது. தொடர்களை அடுக்குதல் என்பதில் நடை உணர்வு எழுப்பலில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

“மறப்புலி உடலின் மான்கணம் உளவோ?
இருளும் உண்டோ ஞாயிறு சினவின்?
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
பொருநரும் உளரோ நீ களம் புகினே?” (பா. 90)

“ஈதல் நின்புகழும் அன்றே
முறைமை நின்புகழும் அன்றே
யாங்ஙனம் மொழிகோ யானே...” (பா. 98)

“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே...” (பா. 187)

தொடர் வடிவம்

ஒரே வகையான இலக்கண அமைப்பையும், ஆனால் வேறுபட்ட சொற்களையும் கொண்ட தொடர்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்குவதன் மூலம் கருத்தாடல் உருவாக்கப்படுகின்றது. இத்தகையக் கருத்தாடல் அமைப்பு ஒருமுகப் பண்பினைக் கொண்டது என்று மொழியிலாளர்களால் குறிக்கப்படுகின்றது. இதனை,

“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” (புறம். 312)


என்னும் பாடலில் காணலாம். இவ்வாறான நடையமைப்புக் கூறுகள்,

1. பணிப்பு வடிவம்
2. கூற்று வடிவம்
3. வியங்கோள் வடிவம்
4. எதிர்மறைக் கூற்று வடிவம்

என்ற நான்கன் தன்மைகளைப் பெற்றுவரும்.

பணிப்பு வடிவம்

என்னை புற்கை உண்டும் பெருந்தோளன்னே (பா. 84)

யாழொடும் கொள்ளா பொழுதொடும் வாரா
பொருள் அறிவாரா … (பா. 92)

வழுஇல் வன்கை மழவர் பெரும (பா.90)

கூற்று வடிவம்



“வாயிலோயே வாயிலோயே” (பா. 89)

“போற்றுமின் சாற்றுதும் நும்மை” (பா. 104)

“களம்புகின் ஓம்புமின்” (பா. 87)

“யாங்ஙனம் மொழிகோ யானே” (பா. 39)

வியங்கோள் வடிவம்

“ஏற்றுக உலையே ஆக்குக சோறே
கள்ளும் குறைபடல் ஓம்புக ஒன்னிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக
அன்னவை பிறவும் செய்க.

எதிர்மறைக் கூற்று வடிவம்

“கொண்ட வாளொடு படுபிணம் பெயரா
செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே” (ப.279)

இணைமுரண்படத் தொடுத்தல்

இனியை பெரும எமக்கே...
இன்னாய் பெருமநின் ஒன்னாதோர்க்கே. (பா. 94)

உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும் (பா. 95)

எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம்
...அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும்
பரணன் பாடினன் (பா.99)

திங்கள் அன்ன வெண்குடை
ஞாயிறு அன்னோன் (பா. 231)

இல்லாகியரோ காலை மாலை (பா. 232)

சிறியகட் பெறினே
பெரியகட் பெறினே... (பா. 235)
என்றவாறு முரண்தொடைகளைப் பயன்படுத்தக் காணலாம்.


வெளிப்படைத் தொடரிணக்கம்

ஒரு கருத்தாடலில் தோன்றும் தொடரடுக்குகளில் ஒரு தொடரில் தோன்றிய பயனிலையைத் திரித்து அடுத்துவரும் தொடரில் இட்டு இரண்டு தொடர்களுக்கும் இடையிலான இணக்கத்தை வெளிப்படையாகக் காட்டும் வகையில் தொடர்களை அடுக்குகின்ற ஒரு வகை அந்தாதி நடையே வெளிப்படைத் தொடரிணக்க நடை ஆகும். இத்தகைய நடையமைப்பினை ஓளவையார் பாடல்களில் காணமுடிகின்றது.

இவ்வே பீலிஅணிந்து…….
கடிபுடை வியல்நக ரவ்வே அவ்வே
பகைவர்க்குத்தி… (பா.98)

கருத்துநயம் காட்டும் நடை

படைப்புக் கருத்துக்களாகப் பல தேர்வு செய்யப்பட்டாலும் சில கருத்துக்களையே சமூகம் சிறந்ததாக வரன்முறைப்படுத்தி ஏற்றுக்கொள்கிறது. காதலும் வீரமும் அகமும் புறமும் சங்க இலக்கியத்தின் செல்வாக்கினை எடுத்துரைக்கின்றன. இவற்றில் குறித்துள்ள கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருந்த வருவதனைக் காணலாம். கருத்துக்களை இணக்கத்தோடு அடுக்குவது மட்டுமன்றி அவைகளில் உவமை, உருவகம் போன்ற அணிப்பண்புகள் தொனிக்கும் வண்ணம் தொடர் கருத்துக்களை அடுக்குவதன் மூலம் உரைக்கோவையின் நடையுணர்வு வெளிப்படும். இதனைப் புறநானூற்றில்,

நீர்த்துறை படியும் களிறுபோல... (பா. 94)

நீலமணிமிடற்று ஒருவன் போல... (பா.91)

கோட்டிடை வைத்த கவளம் போல... (பா.101)

என்னும் பாடல்களில் காணலாம்.

கரு - உரு - ஒத்திசைவு நடை

ஒரு கருத்தாடலின் சிறப்பான நடை, அதன் கருவுக்கும், அதன் உருவில் படிந்திருக்கும் ஓசைநயத்திற்கும் இடையிலான ஒத்திசைவை உணர்வதன் மூலம் பெறப்படும். வெறும் ஓசைநயம் ஒரு படைப்பில் இழைக்கப்படும் எதுகை, மோனை, ஒலியடுக்கு, சீர் வடிவத்தில் தோன்றினாலும் ஒரு படைப்பின் செம்மாந்த நடை என்பது அந்தப் படைப்பின் அமைப்பு அல்லது உருவில் படிந்திருக்கும் ஓசைநயம் படைப்பின் கருவை எதிரொலிக்கும் தன்மையை வைத்தேக் கணிக்கப்படும். கவிதையின் முருகியல் இன்பத்தை மிகுவிக்க ஒலிநயம் அல்லது யாப்பு வடிவம் கருவியாக அமைகிறது. உயர்தரக் கவிதைகளில் பொருளும் யாப்பும் ஒன்றாக இயைந்து, செறிவெய்தி இரண்டும் ஒன்றுக்கொன்று இன்றியமையாததாகி இணைந்து விடுகின்றன. இத்தகு ஓசைநயம் பொருந்திய பாடல்கள் வீரஉணர்வினை வெளிப்படுத்துவதற்கும் பயன்பட்டுள்ள செய்தி இங்கு அறியத்தக்கதாகும்.

“செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வு இன்றுமாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார்
மண்டுஅமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே” (பா. 226)

என்னும் பாடலின் ஓசைநயமும் பொருளுணர்த்தும் திறனும் உற்றுநோக்கத் தக்கவையாகும். இந்தப் பாடலில் வீரவுணர்வு என்பதே பாடலின் கருவாகவும், எழுவாயாகவும் விளங்கிநிற்கக் காணலாம். இவ்வாறான நிலைப்பாட்டினைச் சங்கப் பெண்பாலார் பாடல்களில் வெகுவாகக் காணமுடிகின்றது.

முடிவுகள்

ஒரு படைப்பின் நடை நயத்துக்கு, அந்தப் படைப்பின் பண்பு நலன்களே காரணமாக அமையும். படைப்பில் வெளிப்படும் அமைப்பாக்க உத்திகள், கருத்தாக்க உத்திகள், மொழிக்கூறுகள் கையாளப்பட்டுள்ள விதம், கூறுகளின் தோற்ற எண்ணிக்கை போன்றவற்றின் அடிப்படையில் படைப்பின் நடையைத் தெளிவாக விளக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. நடை குறித்த கருத்துக்கள் படைப்பை அடிப்படையாகக் கொண்டுதான் விளக்கப்பட வேண்டும் எனவும் படைப்பின் வடிவமைப்பே வாசகர்களிடம் பலவகையான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. ஆனால் படைப்போனின் திறனும், படைப்பின் நயமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தே நடையுணர்வை ஏற்படுத்துகிறது. இத்தகு பொருளுணர்த்தும் சிறந்த நடை புறப்பாடல்களில் இடம் பெற்றுள்ள திறம் இதன்வழி புலப்படுத்தப்படுகின்றது.

கருவி நூல்கள்

1. செ. சண்முகம். கருத்தாடல் கருவும் உருவும். மணிவாசகர் பதிப்பகம். சென்னை (1999)

2. புறநானூறு. மூலமும் பழைய உரையும்.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p219.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License