இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

நாலும் இரண்டும் உணர்த்தும் பெண்மை - ஓர் ஆய்வு

பேராசிரியர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு


முன்னுரை

வரலாறு தொடங்கிய நாள் முதல் ஆன்றோரும், சான்றோரும் தாம் நன்மை எனக் கண்டவற்றைத் தவறாது உலகிற்கு உணர்த்தி வந்துள்ளனர். எனினும் வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையாத கருத்துகள் அமைத்து திருவள்ளுவரைப் போல உணர்த்தியவர்கள் உலகில் யாரும் இல்லை எனலாம். இதனால்தான் வான்மறை வள்ளுவத்தை “வாழ்க்கைப் பொருள் நூல்“ என அழைக்கிறோம். வள்ளுவரைப் போலவே நாலடியாரிலும் சமண முனிவர்கள் பெண்ணியக் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர். அவற்றை ஒருங்கு நோக்கி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்

பெண் என்று சொன்னால் அழகு, அச்சம், மடம், நாணம் என்ற அடிப்படையில் பெண்ணுக்கெனத் தனியே சில அறங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வறங்கள் ஆண்களால் உருவாக்கப்பட்டதோடு அல்லாமல் அவ்வறங்களைப் பின்பற்றி வாழ்பவளே சிறந்த பெண் என்ற கருத்தையும் முன் வைத்தனர். இதனையே, இப்படித்தான் நெறியோடு வாழவேண்டும் என்று சத்தியக் கொள்கை கொண்டவள் எவளோ அவளே நல்ல பெண்மணி (திரு.வி.க., பெண்ணின் பெருமை ஓர் ஆய்வு, ப.1) என்கிறார் திரு.வி.க. பெண் குறித்த இந்த முரண்பாடான கருத்துக்கள் காலத்திற்கேற்ப எழுந்த நிலையில் நீதி நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த நிலையில் பேசப்படும். நாலடியாரிலும், பெண்ணுக்கான அறங்கள் சிறப்பாகப் பேசப்படுகிறது.

பெண்ணின் கடமை

பெண்ணின் கடமை குறித்து நாலடியார் பாவை நீரினைப் பகிர்ந்து உண்ணும் அளவிற்கு மிகுதியான வறுமை வந்த போதும், உறவினர் பலர் திரண்டு வந்த போதும் இனிமையாகப் பேசும் பண்பு பெற்றிருத்தல் வேண்டும் என்கிறது. இதனை, ”குடநீர் அட்டு உண்ணும் இடுக்கண் பொதும் கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும் கடன்நீர்மை கையாறாக கொள்ளும் மடமொழி மாதர் மனைமாட்சி யாள்” (நாலடி பா.382) என்ற பாடல் பறை சாற்றகிறது.


திருக்குறளும் பெண்ணியமும்

திருக்குறள் எவ்வளவு தான் பெண்ணின் பெருமை பற்றி கருத்துக்கள் எடுத்துரைத்தாலும், அப்பெருமையானது வழக்கமான ஆணாதிக்கக் கொள்கையில் பேசப்படுவதாகவும், ஆணுடன் ஒத்த நிகர்நிலை திருவள்ளுவரால் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை என்பதும் பெண்ணியக் கொள்கையினரின் கருத்தாகும். "தெய்வத் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்.55) என்ற குறளானது, பிற தெய்வங்கள் எவற்றையும் தொழுது வணங்காது தன் கணவனை மட்டுமே தெய்வமாக நினைத்துத் தூங்கி எழும் குடும்பப் பெண், பெய் என்றதும் பொய்யாது பெய்யும் பருவ மழைக்கு இணையானவள் என்று கூறுகிறது. மனைவி எப்பொழுதும் கணவனுக்குத் தொண்டும் தொழும்பும் செய்து வாழ வேண்டும். அதுவே அவளுக்குச் சிறப்பு தரும் எனும் பெண்ணடிமைக் கருத்தையே எதிரொலிக்கின்றது என்பர் இக்காலப் பெண்ணியவாதிகள்.

இல்லறமே நல்லறம்

இல்லறம் ஒன்றே இயற்கையோடு இயைந்தது என்பதே திருவள்ளுவரது முடிவாகும். இருவேறு வகையில் விளங்கும் ஆண்மக்களின் பண்பும், பெண்மக்களின் பண்பும் ஒன்று சேர்ந்து உயர்ந்த ஒழுக்கத்தினை உலகில் விளக்குதலின் இல்லறமே நல்லறமாயிற்று. இதனையே, ”இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை” (குறள்.47) என்ற குறள் மூலம் அறிவுறுத்துக்கின்றார். இயற்கையோடு மாறுபாடாமல் வாழும் இயல்பான இல்வாழ்க்கையையே அவர் சிறப்பித்துப் பேசுகின்றார். துறவைப் பற்றி பேசினாரேயன்றி பெண்ணைத் துறத்தலை ஒரிடத்து கூறவில்லை. பெண்ணோடு வாழும் வாழ்க்கையையே பெரிதும் போற்றுகின்றார். இல்லறமேற்று வாழும் பெண்களின் பெருமைகளைச் சிறப்பித்துப் பேசுகின்றார். இல்வாழ்க்கை என்பது அன்பையும் அறனையும் உடையது. இல்வாழ்க்கையை அறநெறியாலே நடத்த வேண்டும். அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை. இத்தகைய இல்லறத்தை நடத்தி இசைபட வாழ்பவன் இவ்வுலகின் கண்ணே இருந்தான் எனினும் வானுலகத்துத் தேவனாக மதிக்கப்படுவான் என்றும், தெளிவாக இல்லறச்சிறப்பினைக் கூறுகிறது. ”அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவது எவன்” (குறள் 46) என்றும், ”ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து” (குறள்.48) என்றும் இல்வாழ்க்கையின் சிறப்பை வள்ளுவர் கூறுகின்றார். எனின் அவ்வில்லறச் சிறப்பெல்லாம் இல்லாளின் சிறப்பேயன்றேன். இவ்வில்லாள் தேர்ந்த கல்வியறிவு உடையவளாய் இருந்தாலன்றோ குடும்பம் களர்நிலமாக அன்றி நல்ல வினைநிலமாக இருக்க முடியும். இல்லறம் மேம்பட்டுத் திகழ வாழ்க்கைத் துணையாய் வரும் பெண் எத்தகையவளாக இருக்க வேண்டும் என்று வள்ளுவரே அறிவிக்கின்றார்.

பெண்ணின் நற்செயல்கள்

”தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (குறள். 56) என்று அமைந்துள்ள குறட்பா வாழ்க்கைத் துணையாய் அமைகின்ற பெண் தன் நற்குண நற்செயல்களால் இல்லறத்தை மாட்சிமை பெற நடத்திச் செல்லும் திறமை படைத்தவள் என்னும் கருத்தையே அறிவிக்கின்றன. பெண், கல்வியறிவு அற்றவளாக இருப்பின் இத்தகைய மாட்சிமை அமைதற்கு வழியுண்டா?


ஈன்ற தாயின் சிறப்பு

”ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” (குறள்.69) என்ற குறளுக்குத் தனக்குத்தானே அறிகின்ற அறிவு பெண்ணுக்கு இல்லாமையின் கேட்ட தாய் என வள்ளவர் அமைத்ததாகப் பொருள் கொள்வாருமுண்டு அக்கருத்தானது வள்ளுவருக்கு உடன்பாடன்று “காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு“ என்றபடி எந்தத்தாயும் தன் குழந்தையின் சிறப்பைப் பெருமைப்பட பேசுதல் இயல்பு. அவற்றின் உண்மையான சிறப்பை பிறர் கூறக் கேட்கும் போதுதான் இத்தாய் ஈன்ற பொழுதினும் பெருமகிழ்ச்சி அடைவாள் என்ற கருத்தே வள்ளுவர் காட்டுவதாகும். “புதல்வரைப் பெறுதல்“ என்று அதிகாரப் பெயரும், புதல்வன், புதல்வி ஆகிய இருபாலரையும் குறிக்கும் பொதுச் சொல்லாகும். அவ்வதிகாரத்தில் அமைந்து குறள்களில் வள்ளுவர் கூறும் செய்தி நன்மக்களைப் பெறுதல் என்பதேயாகும். “அறிவறிந்த மக்கள் பேறு என்றும், பண்புடைய மக்கள் என்றும், தம்மக்கள் அறிவுடைமை” என்றும் ஆண், பெண் இருபாலரையும் குறிக்கும். மக்கள் என்ற சொல்லையே அவர் வழங்குகின்றார் ”தன் மகனை“ என்றும் மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” என்றும் ”தந்தை மகற்கு ஆற்றும் நன்றி” என்றும் மகனை வியந்து கூறுகின்றார். ஆண்மக்களையே திருவள்ளுவர், ”அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்” (குறள்.64) ”மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” (குறள்.65) ”குழலினிது யாழ் இனிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்” (குறள்.66) என்ற குறள்கள் பெண் குழந்தையின் மழலைக்கு இனிமை இல்லை. ஆண் குழந்தையின் மெய்தீண்டலே இன்பம் ஆண் குழந்தையின் மழலை மட்டுமே குழலையும், யாழையும் வெல்லும் இனிமையைத் தருவது என்பது பொருந்தாக் கூற்றாய் அமையுமன்றோ? வள்ளுவர் காட்டும் காமத்துப்பாலை நோக்குமிடத்தும் கல்வி அறிவுடைய பெண்களையே வள்ளுவர் சுட்டுகிறார். களவாவது ஒத்த அறிவும், ஒத்தத்திருவும், ஒத்த அழகும். குடியும் உடைய தலைமகனும், தலைமகளும் எடுப்பாரும் கொடுப்பாரும் இன்றி ஊழ்வயத்தால் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டுத் தம்மை மறந்து ஒன்று சேர்வதே ஆகும். எனவே ஆணைப்போல பெண்ணும் அறிவுடையவளே என்று கூறுகின்றார். இங்ஙனம் திருவள்ளுவரது முப்பாலையும் நோக்கும் இடத்து பெண்களைக் கல்வியறிவுடையவர்களாக இல்லறம் சிறக்க வந்த மாண்புடையவர்களாகவே காட்டுகின்றார் என அறியலாம். பெண் பிறவியே உயர்ந்த பிறவி என்றும், உயர்நிலை அடைதற்குத் தக்க பிறவி என்றும் கூறியதோடு, அப்பெண்ணின் தகுதியினையும் எடுத்துக்காட்டி உயர்ந்த பிறவிகளுள் எல்லாம் உயர்ந்தது பெண் பிறவி எனத் தம் கொள்கையை விளங்க வைக்கின்றார். ”பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்” (குறள் 54)


கற்பு என்னும் திண்மை

தமிழர் பண்பாட்டு நெறி முறைகளுள் கற்பொழுக்கம் என்பது முக்கியமானதாகும். ”உயிரினும் சிறந்தது நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத்” (தொல்.கள.நூ.எ.23) என்ற தொல்காப்பிய நூற்பா கற்பின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது. நாலடியார் கற்புடை மகளிர் குறித்து கூறும்போது அவர்தம் கடமை, தலைக் கற்பு, குடும்பப் பொறுப்பு, உடல் சார்ந்த ஒழுக்கமுறை, பொறுமை ஆகியவற்றைக் கற்பினுள் அடக்கிக் கூறுகிறது. வள்ளுவர் பெண்ணைச் சிறப்பித்துக் கூறுவது மட்டுமல்லாது. பெண்ணுக்கு என்று வற்புறுத்தப்படுகிறது. கற்பியல் கோட்பாடு இல்லறத்துக்கு இன்றியமையாதது ஆகும். இது பெண்ணுக்கு மட்டும் உரியதாக வள்ளுவர் கூறவில்லை. ஆணுக்கும் அது வற்புறுத்தப்படுகிறது. பெருமை என்ற அதிகாரத்தில் வரும். ”ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு” (குறள்.974) என்னும் குறளில் ஆணுக்கும் கற்பு வலியுறுத்தப்படுகின்றது. தன் கணவனை மட்டுமே நினைத்து வாழுகின்ற ஒருமை மகளிர் பாலத் தானும் (கணவனும்) தன் மனத்தை அலைபாய விடாமல் இல்லறத்தில் நிலைநிறுத்திக் கொண்டு ஆண் மகன் ஒழுக்கம் காத்தல் அவனுக்குப் பெருமை உரித்தாகும் என்று இக்குறள் எடுத்துரைக்கிறது. மேற்கண்ட கருத்தானது இல்லறவியல் கூறப்படாது, பொருட்பாலியல் குடியியலில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ”நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது” (குறள்.124) என்ற குறளானது, இல்லற ஒழுக்கத்திலிருந்து வழுவாமல் அடங்கி வாழ்பவனின் நிமிர்ந்த தோற்றம் மலையைவிட மிகவும் பெரியதாகும் என்று உரைக்கிறது. கற்பொழுக்கத்துடன், கட்டுப்பாடுடன் வாழ வேண்டும் என்று பெண்களை வலியுறுத்துவது பெண்ணுரிமைக்கு மாறானது. பெண்களை அடிமைப்படுத்துவதற்காக ஆண்களால் திணிக்கப்பட்டது என்று சில பெண்ணியவாதிகள் கூறுகின்றனர். கற்பு குறித்து நாலடியார் தம் கணவருக்குச் சினம் உண்டாக்காதவராகவும், இன்முகத்தோடு உவந்தளிப்பராகவும், தன்னை விரும்பி பின்னே வேறொரு ஆடவர் இல்லாத தன்மையுமே தலைக்கற்பு என்று கருதுகிறது. இதனை, ”அரும்பெறல் கற்பின் அயிராணி யன்ன பெரும்பெயர்ப் பெண்டிர் எனினு விரும்பிப் பெருநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும் நறுநுதலாள் நன்மைத் துணை” (நாலடி. பா.381) என்ற பாடல் உணர்த்துகிறது.

குடும்ப வாழ்க்கையின் பெண்ணியம்

இல்லறவியலில் ஆண் குடும்பத் தலைவன் என்ற பொறுப்பை வகிப்பவன் ஆவன். இருப்பினும் குடும்ப வாழ்க்கைக்கே அடித்தளமாக இருப்பவள் பெண்ணே ஆவாள். பண்டைத் தமிழர் வாழ்வில் புறச்செயல்கள் ஆணைச் சார்ந்து நிகழ்வன. அச்செயல்கள் அனைத்தும் பெண்ணை ஒட்டியே நிகழ்ந்தன. ஆகவே ஆணைப் புறத்துக்கு உரிய தலைவனாகவும், பெண்ணை அகத்துக்குரிய தலைவியாகவும் மதித்துப் போற்றினர். ஆனால், பெண்ணியவாதிகள் குடும்ப அமைப்பு தேவையில்லை என்றும், இது பெண்ணைத் தளைப்படுத்துகிறது. மேலும் பெண்ணை அடிமைப்படுத்துகிறது என்று கூறுகிறார்கள். வறுமையுற்ற நிலையிலும் விருந்தினரை ஓம்பி மகிழ்விக்க மனைவியே குடும்பத்திற்குப் பொருத்தமானவள். மேலும், மென்சொற் பயிலும் பெண்ணே நல்வாழ்க்கைக்கு உரிய துணையாக அமைவாள் என்கிறது நாலடியார். ”நால்ஆறும் ஆறாய் நனிசிறியதாய் எப்புறனும் மேலாறு மேலுறை சோரினும் - மேலாய வல்லாளாய் வாழும்ஊர் தன்புகழும் மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல்” (நாலடி. பா.383) என்ற பாடலில் நாற்புறமும் மழைநீர் உள்ளே செல்லக்கூடிய அமைப்பினையுடைய சிறியதொரு வீட்டிலும் தன் கடமையிலிருந்தும் வழுவாமல், மக்களால் போற்றப்படும்படி திகழும் பெண்ணை உடைய வீடு உண்மை வீடாகக் கருதப்படுகிறது.


முடிவுரை

திருவள்ளுவர் அறத்துப்பாலில் பெண்களை உயர்வான இடத்தில் அமர்த்தி இருக்கிறார். காமத்துப்பாலில் ஆண், பெண் இருவரையும் சமநிலை இணையர் என்ற பொருளில் குறிப்பிட்டு பொருட்பாலில், பெண்களுக்கு ஏற்பட்டுள்ள இழிவு நிலைகளைச் சுட்டிக்காட்டி, திருவள்ளுவர் பெண்களின்பால் கொண்டிருந்த சமநோக்கை திருக்குறளின் மூலம் அறிய முடிகிறது. எந்தவிதப் பாகுபாட்டோடும் வள்ளுவர் பெண்களைப் பற்றிய கருத்துக்களைக் குறிப்பிடவில்லை. இக்கட்டுரை பெண்களின் தனிச்சிறப்புகள், இயல்புகள், இல்வாழ்க்கையில் அவர்களின் இன்றியமையாமை போன்ற பல செய்திகளை எடுத்துரைத்துள்ளது. பெண்களுக்கு உரிய அறங்களாக நாலடியார் கூறியவை அவர்களை ஒருவித அடிமைத்தளத்திற்கு இட்டுச் செல்வதையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அற்ற நிலையில் அவர்களை வைத்திருந்தமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

துணைநின்ற நூல்கள்

1. இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம், பொருளதிகாரம், கழக வெளியீடு, சென்னை, 1967. 2. திரு.வி.க., பெண்ணின் பெருமை, கௌரா புத்தக நிலையம், சென்னை, 2010. 3. பரிமேலழகர் உரை, திருக்குறள், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2010. 4. புலியூர்க் கேசிகன்(உரை), நாலடியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, 2013.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p254.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License