இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

102.நற்றிணைத் தலைவியின் மனமுறிவுச் சிந்தனைக் களங்கள்


முனைவர் பொ. வெங்கடேஸ்வரி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
தேனி கம்மவார் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கொடுவிலார்பட்டி, தேனி

முன்னுரை

பண்டைத் தமிழரின் வாழ்வியல் விழுமியங்களைப் பறைசாற்றுவன சங்க இலக்கியங்களாகும். இவ்விலக்கியங்கள் வெளிப்படுத்தும் அக்கால மக்களின் பண்பாட்டு நெறிகள் உலகை வியக்க வைப்பனவாகும். அவற்றுள் குறிப்பிடத்தக்கது மனையற மாண்பு. மனையற வாழ்வில் தலைவியின் பங்கு அளப்பரியது. தலைவி தலைவனின் சொல்லை மீறாமல் அவனுக்காகவேத் தன் வாழ்வை ஒப்படைத்தவளாகவும் தலைவனைத் தவிர வேறெந்த சிந்தனையும் இல்லாதவளாகவும் இருந்துள்ளதையும் அவ்வாறு தலைவனைச் சார்ந்து வாழும் தலைவிக்குக் தலைவனின் ஒவ்வாத நடத்தையால் ஏற்படும் உளவியற் சிக்கல்களுள் ஒன்றான மனமுறிவுச் சிந்தனைகளையும் நற்றிணையின் வழி ஆய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

தலைவியின்காதல் வாழ்வும் தலைவனும்

தலைவி தலைவனைக் கண்டு காதல் கொண்ட நொடியிலிருந்தே அவளது கற்பு வாழ்க்கைத் தொடங்கி விடுகிறது. அவள் மனதாலும் உடலாலும் தலைவனுக்கு உரிமைப்பட்டவளாகக் கருதப்படுகிறாள். தலைவியின் சிந்தனை முழுவதும் தலைவனைச் சுற்றியே அமைகிறது. மனையற மகளிர் தன் கணவனை உயிராகக் கருதினர். தலைவனைத் தவிர வேறெதுவும் அறியாதவளாகத் தலைவி இருந்துள்ளதை,

“நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே”(நற்.355:11)

என்ற அடிகளால் அறியமுடிகிறது. அதேபோல் தலைவன் தலைவியின் நெஞ்சில் நீங்காது குடியிருப்பவனாக இருந்துள்ளதை,

“பெரிய மகிழும் துறைவன் எம்
சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே” (நற்.388:9-10)

என்ற அடிகள் வெளிப்படுத்துகின்றன. மேலும் தலைவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவன் வழி நடப்பவளாகவே தலைவி வாழ்ந்ததை,

“நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும்
நின் வழிப்படூஉம்’ என் தோழி” (நற்.247:6-7)

என்ற அடிகள் தலைவனையே உயிர் மூச்சாகத் தலைவி கருதியதைக் காட்டுகின்றன.தலைவியின் நம்பிக்கையின்மை

திருமண வாழ்வின் அடிப்படையே நம்பிக்கைதான். கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைக்கும் போதுதான் அவ்வுறவு நீடித்ததாக விளங்கும். தலைவனைப் பற்றித் தோழி, தலைவியிடம் அவன் சான்றோனாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டாலும் தலைவி அவன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவளாக இருந்துள்ளதையும் (நற்.233,261) தலைவன் மீதான நம்பிக்கை என்றும் பொய்க்காது. அவனது காதல் நெஞ்சைச் சுடாது என்றும் தலைவி மனவுறுதியோடும் நம்பிக்கையோடும் இருந்துள்ளதையும் (நற்.357) காணமுடிகிறது. நம்பிக்கையில் பழுது ஏற்படும் போது அன்பில் திரிபு ஏந்படுவது இயற்கையே. தலைவன்மீது தலைவி அளவு கடந்த காதலும் நம்பிக்கையும் கொண்டவளாக இருந்தாலும் தலைவனின் செய்கை அவளுக்கு ஐயத்தை ஏற்படுத்தி விடுகிறது. பொருள்வயிற் பிரிந்த தலைவன்; நீண்டநாள் வராததால் தலைவி ஐயம் கொள்வதை,

“தம்அலது இல்லா நம்நயந்து அருளி
இன்னும் வாரார்... ... ...
கங்கை வங்கம் போகுவர் கொல்லோ
எவ் வினை செய்வர்கொல் தாமே” (நற்.189)

என்ற அடிகள் புலப்படுத்துகின்றன. ஐயத்தின் அடுத்த நிலையாகப் பண்பில்லாத தலைவனோடு காதல் கொண்டதை எண்ணித் தலைவி குற்ற உணர்ச்சியோடு பொழுதைக் கழிப்பதை (நற்.378) என்ற பாடலால் அறியலாம்.

காமவுணர்வும் தலைவியும்

காமவுணர்வு என்பது எல்லா உயிரினத்திற்கும் பொதுவான உணர்ச்சியாகும். இவ்வுணர்ச்சி மனிதர்களுக்கு மட்டுமே மனதோடும் பண்பாட்டோடும் இணைந்த உணர்ச்சியாக உள்ளது. இவ்வுணர்ச்சிக்கு வடிகால் கிடைக்காதபோது ஏக்கமாக மாறுகிறது. எல்லோரும் அறியும் வண்ணம் பெண்கள் காமவுணர்வை வெளிப்படுத்துவது நம் பண்பாட்டில் இல்லை என்பதால் தலைவி காமத்தைத் தனக்குள்ளே அடக்கி வைத்து வாழப் பழக்கப்படுத்தப்பட்டாள். தனக்குரியவளின் காம தாகத்தைத் தீர்ப்பது ஓர் ஆண்மகனின் கடமையாகும். அக்கடமையிலிருந்து தலைவன் தவறும்போது தலைவி மனதளவில் பாதிக்கப்படுகிறாள். தன் காமத்தைத் தீர்க்காத தலைவன் ஓர் ஆண்மகனா என்று தலைவி கேள்வி கேட்பதை,

“புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல் தோழி” (நற்.94:6-7)

என்ற அடிகள் காட்டுகின்றன. காமவுணர்ச்சி தாங்க முடியாத உணர்ச்சி என்பதைப் பல தலைவி கூற்றுப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. களவிலும் கற்பிலும் தலைவனையே எண்ணி வாழும் தலைவிக்கு அவனைப் பிரிந்த சூழலில் காமத்தை அடக்கி வாழ வேண்டிய நிலை இருந்தது. இச்சூழலில் தன் உணர்வைத் தலைவன் புரிந்து கொள்ளவில்லையே (நற்.335,338,369) என்ற ஆறாத மனத்துயர் தலைவிக்கு இருந்துள்ளது. காமநோயினால் தலைவி ஒவ்வொரு நாளும் உடல்மெலிந்து அறிவுநீங்கி மயக்கமுற்று சிந்தனை திரிந்து மனமுறிவு ஏற்பட்டதை,

“கண்ணும் காட்சி தெளிவின என்நீத்து
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே” (நற்.397:3-4)

என்ற அடிகள் உணர்த்துகின்றன.தாழ்வு மனப்பான்மை

தன்னைவிட பிற மனிதர்கள் உயர்ந்தவர்கள் என்ற சிந்தனையே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தாழ்வுமனப்பான்மையை உண்டு பண்ணுகிறது. தலைவனின் பரத்தைப்பிரிவு தலைவிக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகக் காரணமாகிறது. தன்னைவிடப் பரத்தை அழகாக இருப்பதாலேயே தலைவன் பரத்தையை நாடிச்சென்றதாகக் கருதுகிறாள். பரத்தைப்பிரிவால் தலைவனை வெறுத்த தலைவி குழந்தை பெற்று முடைநாற்றம் வீசும் தன்னிடம் வரவேண்டாம் என்றும் அழகான பரத்தையிடமே செல்லட்டும் என்றும் தலைவி தாழ்வு மனப்பான்மையில் வாயில் மறுப்பதை (380,360) நற்றிணை புலப்படுத்துகின்றது. மேலும் தலைவி, தலைவனையும் அழகாய் இருக்கும் பரத்தையையும் மனதளவில் வெறுக்கிறாள். எனவே பரத்தையோடு தலைவன் சேர்ந்து வாழ்ந்தாலும் அவள் கற்போடும் உண்மைத் தன்மையோடும் இருக்க மாட்டாள் என்று (நற்.330) தலைவி குறிப்பிடுவதிலிருந்து அவளது தாழ்வு மனப்பான்மையும் வெறுப்புணர்வும் வெளிப்படுகிறது. பரத்தையிடமிருந்து மீண்டு வந்த தலைவன் மீது வெறுப்போடு இருக்கும் தலைவி தன்னைத் தொடவேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குவதையும் அத்தகைய பரத்தைமைப் பண்புடைய தலைவனைத் தீண்டுவது சுடுகாட்டில் கழியப்பட்ட தாழியைத் தீண்டுவது போன்றது என்றும் தலைவனையும் அவனது பரத்தைமைப் பண்பையும் வெறுப்பதை,

“ஆசு இல் கலம் தழீஇயற்று
வாரல் வாழிய கவைஇ நின்றாளே” (நற்.350:9-10)

என்ற அடிகள் காட்டுகின்றன.

தலைவியும் மனஅழுத்தமும்

தலைவி தலைவனோடு சேர்ந்து இருக்கும்போதே நடுங்கும் இயல்புடையவளாக இருப்பதை சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. எனவே தலைவி தலைவனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளாக இருந்துள்ளாள். உடல்சோர்வும் மனச்சோர்வும் தலைவிக்கு மனக் கவலையை ஏற்படுத்தியுள்ளன. பிரியமாட்டேன் என்று வாக்குறுதி தந்த தலைவர் பிரிந்ததோடில்லாமல் தன்னை மறந்துவிட்டார் என்று மனக்கவலை கொள்வதை (நற்.118) என்ற பாடல் புலப்படுத்துகின்றது. தான் அன்போடு இருந்தும் தலைவன் தன்மீது அன்பில்லாதவனாக இருப்பதை எண்ணித் தலைவி தூங்காமல் மனக்கவலை கொள்வதை (நற்.296,303) அறியமுடிகிறது. பரத்தையை நாடிச்சென்ற தலைவனின் செய்கை தலைவிக்கு மிகுந்த மனஅழுத்தத்தைத் தருகிறது. ஊரார் அனைவரும் பரத்தையைத் தலைவனின் மனைவி என்று அழைப்பதையும் அப்பழிச்சொல்லை இனி மாற்றமுடியாது என்றும் தலைவி மனஅழுத்தத்தோடு குறிப்பிடுவதை,“கண்டல் வேலிய ஊர் அவன்
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே” (நற்.74:10-11)

என்ற அடிகள் பதிவு செய்துள்ளன. இவ்விதமான மனஅழுத்தத்தை அகநானூற்றுத் (176, 246) தலைவியிடமும் காணமுடிகிறது. தலைவி பரத்தைமைப் பண்புடைய தலைவனை மனதார ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறாள். தலைவன் பரத்தையைவிட்டு மனதாரத் திருந்தி வரவில்லை என்றும் சமுதாயத்திற்தாகவே தன்னிடம் வந்துள்ளான் என்றும் தலைவி ஊடலை விடாமல் மனஅழுத்தத்தோடு இருந்தாள். மேலும், பரத்தையின் சொல்லும் செயலும் தலைவிக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. அவள் தலைவனை வெறுக்கவேண்டும் என்பதற்காகவே பரத்தை தலைவியிருக்கும் தெருவில் செருக்காக நடந்து செல்வதையும் தலைவன் தன் கூந்தலைப் பற்றியிழுத்து வளையல்களைக் கழட்டியதைத் தலைவி கேட்கும்படியாகக் குறிப்பிட்டு தலைவிக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதையும் (நற்.100) என்ற பாடலால் அறியலாம். தலைவன் மீண்டு வந்தாலும் தலைவிக்கு அவன் பரத்தையோடு இன்பம் துய்த்ததை மறக்க முடியவில்லை. எனவே அன்பில்லாத தலைவனோடு இன்பம் துய்ப்பதில் எந்தப்பயனும் இல்லை என்று வருந்துகிறாள்,

“வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லுமற்று எவனோ அன்புஇலங்கடையே”(நற்.174:9-11)

என்ற அடிகள் தலைவி மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பதைப் புலப்புடுத்துகிறது. மருதத்திணைத் தலைவிக்குத் தலைவனைப் பரத்தையிடம் செல்லாமல் பாதுகாக்க வேண்டிய அவலநிலை இருந்தது. அவனைப் பாதுகாக்காவிட்டால் பரத்தைக் கைப்பற்றிவிடுவாள் என்றிருந்த சூழலை,

“விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே
எழுமினோ எழுமின் எம் கொழுநற் காக்கம்” (நற்.170:4-5)

என்ற அடிகள் காட்டுகின்றன. இத்தகைய வாழ்வியல் சூழலும் தலைவனின் பரத்தைமைப் பண்பும் தலைவிக்கு மிகுந்த மனஉளைச்சலையும் மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தியதை அறியலாம்.உயிர்வாழ முடியாமையும் தற்கொலைச் சிந்தனையும்

தலைவனையே தன்உயிர்மூச்சாக வாழும் தலைவிக்குத் தலைவனின் பிரிவு, வாழ்க்கை மீதே ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. தலைவன் பொருள்வயிற் பிரிவதை அறம் என்று கருதினாலும் தலைவியின் உள்ளம் ஏற்க மறுக்கிறது. தலைவனைப் பிரிந்தால் தன்உயிர் தன்னை விட்டுப் பிரிந்துவிடும் என்று கருதியதை (நற்.79) என்ற பாடல் புலப்படுத்துகின்றது. களவில் பிரிந்த தலைவன் திருமணம் செய்யாமல் காலநீட்டிப்புச் செய்வதையும் ஊராரின் அலர் பேச்சையும் பொறுக்க முடியாத தலைவி தான் இனி உயிர்வாழப் போவதில்லை என்று மனம் வெறுத்ததை,

“வாழலென் வாழி தோழி என்கண்
பிணி பிறிதாகக் கூறுவர்
பழி பிறிதாகல் பண்புமார் அன்றே” (நற்.117:8-10)

என்ற அடிகளால் அறிய முடிகிறது. தன் நம்பிக்கை பொய்யானதால் வருந்திய தலைவி தான் நம்பியது தவறு என்றால் அதைவிட உயிர் இழப்பதே சிறந்தது என்று உயிர்இழக்கத் துணிந்தாள். (327) தலைவன் மீதான அளவுகடந்த அன்பே தலைவிக்குத் தற்கொலைச் சிந்தனையை ஏற்படுத்தியது எனலாம். அவ்வாறு இறந்தாலும் மறுபிறவியில் தலைவனை மறந்துவிடுவேனோ என்று தலைவி அஞ்சுவதையும் (397) நற்றிணை பதிவுசெய்துள்ளது. தலைவனின் பிரிவைத் தாங்கமாட்டாத தலைவி இறந்தாவது தன் அன்பைத் தலைவனுக்கு உணர்த்த எண்ணுவதையும் தான் உயிர்விடாததால் தலைவன் தன்அன்பை உணரவில்லை என்றும் மனம் வருந்திய நிலையை

“அருந்துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப்
பெரும் பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்” (நற்.381:1-2)

என்ற அடிகள் வெளிப்படுத்துகின்றன. தான் அன்போடு இருக்கும் நபர் தன்னிடம் அன்பாக இல்லையே என்ற மனஅழுத்தமே தலைவிக்கு உயிர்இழக்கும் எண்ணச்சிதறல்களைத் தோற்றுவிக்கிறது.

முடிவுரை

சங்ககாலப் பெண்டிரின் வாழ்வு முழுவதும் ஆணைச் சார்ந்தே அமைந்திருந்தது. ஆணுக்குக் கட்டுப்பட்டு, அடங்கி வாழ்வதே பெண்டிரின் குணங்களாகக் கருதப்பெற்றன. சமுதாய அறத்திற்காக மகளிர் இக்குணங்களைக் கடைப்பிடித்தாலும் மனதளவில் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகினர். தலைவனின் பிரிவும் பரத்தைமைப் பண்பும் தலைவிக்கு மனஉளைச்சலையும் மனஅழுத்தத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் வெறுப்பையும் மனமுறிவையும் தற்கொலைச் சிந்தனைகளையும் ஏற்படுத்தக்கூடிய சூழல்கள் இருந்ததை நற்றிணையின் வழி அறியமுடிகிறது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p102.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License