இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

97.சீவகசிந்தாமணி கூறும் அவலச்சுவை


அ. வித்யப்பிரியா
முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்), சேலம் - 7.

முன்னுரை

தமிழுக்கு அணிசெய்யும் காப்பியங்களுள் ஐம்பெருங்காப்பியம் எனச் சிறப்பித்துக் கூறுவர். அவற்றுள் சீவக சிந்தாமணியும் ஒன்றாகும். திருத்தக்கதேவர் இயற்றிய காவியங்கள் இயற்றும் புலவர்கள் கூறும் இடத்தில் இன்பச் சுவையே இருக்க வேண்டும் என்பதில்லை. துன்பச்சுவைகளும் இடம் பெறலாம். அத்துன்பச் சுவைகள் கூறுமிடத்தில் அவலச் சுவை தோன்றுகிறது. காப்பியத்தில் மாந்தர்களான சச்சந்தன், விசயை ஆகியோரின் உள்ளத்தைக் கவரக்கூடிய உணர்வுகளில் மிகுதியாக வெளிப்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஏமாங்கத நாட்டின் இன்பம் வளம்

இராசமாபுரம் ஏமாங்கத நாட்டின் தலைநகராகும். இந்நாட்டின் அரசனானவன் சச்சந்தன் அந்நாட்டின் வளமானது பண்டங்கள் ஏற்றிச் செல்லும் வண்டியும், மிகுந்த நெல்லை விற்றற்கு எடுத்துச் செல்லும் வண்டியும், பாகு மற்றும் மணம் நிறைந்த மலர்களை ஏற்றிச் செல்லும் வண்டியும், இளநீர் சுமந்த வண்டியும், மெல்லிலை (வெற்றிலை) ஏற்றிய வண்டியும், பாக்கு மரத்தின் பழுக்காய் மற்றும் இனிய பழங்களை ஏற்றிக் கொண்டு இடைவிடாது செல்லும்.

வணிகர்கள், பொன் சொறியும் கடைக் கதவைச் சாவியால் திறந்து, பொன்னாலான யவனர் பெட்டியிலிருந்து மணிகளையும், முத்துகளையும், வயிரங்களையும், பவளங்களையும், நல்ல பகலையும் இரவாக்கும் கருநீல மணிகளையும் எடுத்து வைக்கும் போது சிந்திப் போவதை வைத்துக் கொள்ளாத வளமார்ந்த வணிகப் பெருமக்கள்

“பழுக்குலைக் கமுகுந் தெங்கும் வாழையும் பசும்பொன் னாலு
மெழிற்பொலி மணியி னாலுங் கடைதொறு மியற்றி னாரே” (115 : 3:4)

என பாடலடிகள் மூலம் காணாலம். தங்கள் கடைகளைப் பழுத்த கமுகையும், தென்னையையும், வாழையையும், பசும்பொன்னையும், எழில் மிக்க மணியையும் கொண்டு அழகு செய்தனர். சொல்வதற்கரியச் சிறப்பு செல்வ வளமிகுந்த நாடாகத் திகழ்நதன.சச்சந்தனின் தோற்றம்

சச்சந்தனைப் பற்றி தேவர் கூறுவது

“தருமன் றண்ணளி யாற்றன தீகையால்
வருணன் கூற்றுயிர் மாற்றலின் வாமனே
யருமை யாலழ கிற்கணை யைந்துடைத்
திரும கன்றிரு மாநில மன்னனே” (160)

என்ற பாடலடியின் மூலம் காணலாம். பிறருக்கு அருளுவதில் அறக்கடவுள் போன்றும், வருணணைப் போன்றும், பகைவர் உயிரைப் போக்குவதில் எமனைப் போன்றும், நிலைக்கிடனாம் அருமையில் அருகப்பிரானைப் போன்றவன். அழகால் மங்கையர்க்கு ஐங்கனை ஏத்திய காமனைப் போன்றவன். சச்சந்தன் என்பதை அறிய முடிகிறது.

விசயையின் தோற்றம்

விதேக நாட்டு மன்னன் மகள் விசயை. சச்சந்தனின் மனைவியும், காப்பியத் தலைவனான சீவகனின் தாயுமானவள்; திருத்தக்கதேவர் விசயையைக் காட்டும் போது ஒப்பற்ற மாதரசியாகக் காட்டுவதை,

“உருவுஞ் சாயலு மொப்ப வுரைப்பதற்
கரிய வாயினு மவ்வளைத் தோளிகட்
பெருகு காரிகை பேசுவல் பெண்ணணங்
கரிய தேவரு மேத்தரு நீரளே” (163)

என பாடலடிகள் மூலம் காணலாம். இளம்பிறை சோந்தது போல் சிறு நெற்றியும், வட்டமான திருமுகமும், கனி போன்ற வாயும், தூய பற்களும், நீண்ட மூக்கும், உருப்பசியை மயக்கும், வளைத்த புருவங்களும், கைத் தேர்ந்த ஓவியன் எழுதி அமைத்தவை போல் அடங்காத தன்மையுடைனவாய் விளங்கினாள்.மன்னனின் திருமணம்

மங்கையரின் அழகையெல்லாம் பெற்ற விசயையின் தந்தையிடம் அவளை மணந்து கொள்ள விருப்பத்தைச் சச்சந்தன் தெரிவித்தான்.

“மருமகன் வலந்தது மங்கை ஆக்கமு
மருமதிச் சூழ்ச்சியி னமைச்ச ரெண்ணிய
கருமமுங் கண்டவர் கலத்தற் பான்மையிற்
பெருமகற் சேர்த்தினார் பிணைய னாளையே” (187)

என்ற பாடலடிகளில் காணாலாம். மருமகன் விருப்பத்தை கூறியதும், கூர்ந்த அறிவினையும் சூழ்ச்சியும் உடைய அமைச்சர்கள் ஆராய்ந்துரைத்து முடிவில் மைத்துனன் என்ற உறவுமுறையால் பெரும் மன்னனாகிய சச்சந்தனுக்குத் திருமணம் செய்துவித்தனர்.

கடமை தவறிய மன்னன்

இங்ஙனம் தன் காதல் மனைவியை அழகில் ஈடுபட்டுக் காதலின்பத்தில் மூழ்கி அரசன் கடமையை மறந்து ஆட்சிப் பொறுப்பைப் பொருள்படுத்தப் பெருந்தவறு செய்தான். அரசியல் கடமையை ஒரு பெருசுமையாகக் கருதியவன். தன் நாட்டு ஆட்சியின் பொறுப்பை முதலமைச்சராகிய கட்டியங்காரனிடம் ஒப்படைக்க எண்ணினான்.

நிமித்தன் தன் கடமையினின்று தவறாது, விசயைபால் கொண்ட இன்பத்தில் அரசியல் கடமையினின்னு வழுவாமல் இருக்கப் பல அறிவுரைகளைக் கூறினான். ஆயினும் மன்னன் அம்மொழிகளை ஏற்காது கண்ட நிமித்திக்கண் அவனிடத்திருந்து விலக்கினான்.

விசயையின் கனவு

“கனவு என்பது பின் நிகழ்பவை முன்னுணர்த்தும் ஒர் அறிகுறி என்று கொண்டால் அது நம்பிக்கை சார்ந்ததொரு நிமித்தம்” காப்பியங்களில் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் புலவர் பக் - 139. காணலாம்.

அரசனுக்கு நிகழப் போகும் பெருந்துன்பத்தை முடிவாக அறிவுறுத்தக் பெற்றது. கதை வளர்ச்சிக்குரிய முக்கியத் திருப்பு முனையாக அமைகின்றன.

“தொத்தணி பிண்டி தொலைந்தற வீழ்ந்ததெண்
முத்தணி மாலை முடிக்கிட னாக
வொத்ததன் றாள்வழி யேமுளை யோங்குபு
வைத்தது போல வளர்ந்ததை யன்றே” (223)

என்ற பாடலடிகள் மூலம் காணலாம். ஒர் அசோக மரம் கிளைகள் முறித்து அடிசாய்ந்து அதன் வேரில் அவ்வசோக மரத்தில் குறுத்து இருப்பது போலவும் எட்டு முத்து முடியை தாங்கியதும் போலவும் விசயை கனவு காண்கிறாள்.

இந்த நிகழ்வு பிற்காலத்தில் சீவகனின் பிறப்பையும் அவன் மணந்த எட்டு மனைவியரைக் குறிப்பதாகவும் அமைகிறது. பின் நிகழ்வை முன்னுணர்த்தும் வகையில் காணமுடிகிறது.மயிற்பொறியில் யேற்றுவித்தல்

கனவுகளைக் கேட்டறிந்த சச்சந்தன் தன்னை பாதுகாத்துக் கொள்ள ஈடுபடவில்லை. விசயைக்கு அவன் கருவிற்கும் (சீவகன்) தப்பிப் பிழைக்க வழி செய்ய வேண்டும் என்ற முடிவில் ஒர் மயிற்பொறியை இயற்றுவித்து அவ்வூர்தியை வேகமாகச் செலுத்துவது பற்றியும் அவளுக்குக் கற்பித்தான் என்பதனை

“ஆடியன் மாமயி லூர்தியை யவ்வழி
மாடமுங் காவு மடுத்தொர்சின் னாள்செலப்
பாடலின் மேன்மேற் பயப்பயத் தான்றுரந்
தோட முறுக்கி யுணர்த்த வுணர்ந்தாள்” (238)

என்ற பாடலடிகளின் மூலம் காணலாம்.

சச்சந்தனின் வீரப்போர்

இங்ஙனம் தம்மிடம் பெருமதிப்பு அரசளித்த நன்றியைக் கொன்ற கட்டியங்காரன் அரசனுக்கு எதிராகக் காலம் பார்த்துப் படையுடன் வந்து அழிக்க முற்படுகிறான். கட்டியங்காரன் ஆட்கள் தன்னை நெருங்கும் முன் விசயையை விண்வழியாக அனுப்பிவிட்டுத் தான் கட்டியங்காரனோடு போர் செய்ய முற்பட்டான்.

“கலிக்கிறை யாய நெஞ்சின் கட்டியங் கார னம்மேல்
வலித்தது காண்டு மென்று வாளெயி றிவங்க நக்கான” (266)

தீய குணங்கள் உள்ள கட்டியங்காரன் நம் மேல் வலிமை காட்ட வந்ததைக் காண்போம் என்று ஒளிமிகும் பற்கள் தோன்ற சிரித்தான். கனவு எல்லாம் பயன் அளிக்கும் நேரம் வந்துவிட்டது என்றான்.

“சாதலும் பிறந்த றானுந் தம்வினைப் பயத்தி னாகு
மாதலு மழிவு மெல்லா மவைபொருட் கியல்பு கண்டாய்” (269)

இறத்தலும், பிறத்தலும் அவரவர் வினைப்படி நடப்பன, கவலையை விடுக என்று ஆறுதல் கூறி அனுப்புகின்றான். ஒளிவிடும் வேலும் உடலைத் தாக்கிப் பிளந்தும், சோர்ந்தும், அஞ்சாத இரு கண்கள் சினத் தீயுடன் வீழ்ந்து மறைகின்ற வெங்கதிரவன் போல் ஆண்மைத் தகைமை குறைந்தான்.விசயையின் அவல ஒவியம்

விசயை சென்ற மயிற்பொறி மாண்புடைய மன்னன் முடிவில் மாண்டு கட்டியங்காரனின் வெற்றியின் முழக்கம் கேட்டு மயங்கி முடுக்க மாட்டாமல் செயலற்றுப் பிணப்புகையும், பேயும் அஞ்சும் சுடுகாட்டில் இறங்கியது. அங்கு நிறைமாதங்களாகக் கருக்கொண்டிருந்த விசயை குழந்தையைப் பெற்று எடுத்தாள்.

மகனது நிலையை கண்ட விசயை அரண்மனையில் மகவு பிறந்திருந்தால் அறசாலைகள், கோலில்கள் அமைக்கவும் பகையரசரை விடுதலை செய்யவும், சிறைச்சாலையெல்லாம் தூய்மை செய்தும், பொற்குவியலைத் திறந்து ஊர்தோறும் மகன் பிறந்திருக்கிறான் என்று சொல்லி மகிழ்வுடன் கொடுங்கள் என ஆணை பிறப்பித்திருப்பான்.

இவ்வாறு செல்வ செழிப்பில் பிறக்க வேண்டிய நீ நரியின் குரல் முழங்கவும், ஈமத்தீ விளக்காகவும், பேய்ஆடவும், கூகைகள் ஒலியிற் பாராட்டவும் இத்தகைய நிலையில் பிறந்து இருக்கிறாயே! என்று ஏங்கினாள். என் இனிய உயிரே இத்துன்ப நிலை கண்டும் என் உடலை விட்டு நீங்காது இருக்கின்றாய். இஃது எத்தகைய கொடுமையானது என்றாள்.

விசயை அருகணை வேண்டுதல்

சிந்தாமணியே! பிறந்த நீயும் அருகப் பெருமானின் சிறந்த அறமும் ஆதரவாகி, துயரக் கடலிருந்து நீங்க உன்னை விட சிறந்தவர் வேறு யார் இருக்கிறார். உதவிச் செய்வாயாக! என்று வேண்டியதை

“சிறந்தா ருளரேல் உரையாயாற்
சிந்தாமணியே கிடத்தியான்” (311)

எனும் பாடலடியில் விசயை தன் நல்வினை அறியாமல் “நான் இவனை வளர்க்க இனி என்ன செய்வேன்” என்று வருந்தினாள். இங்ஙனம் விசயையின் அவல நிலையினை கண்ணகி, கோப்பெருந்தேவி, மாதவி, மணிமேகலை போன்றோர் எய்திய இழப்பு நிலைக்கு அப்பால் விசயையின் அவலம் தனித்து நிற்கிறது.

முடிவுரை

அவலச் சுவையை வெளிப்படுத்துவதன் மூலம் உணர்ச்சிகளின் ஏற்றத் தாழ்வு வெளிப்படுகிறது. இலக்கியத்திலும், காப்பியத்திலும் மற்றும் மற்றைய கலைத்துறைத்திலும், கதா பாத்திரங்களின் உள்ளத்தைக் கவரக் கூடிய உணர்வுகளின் வெளிப்பாட்டை தோன்றச் செய்வதிலும் அவலச்சுவை தனியிடம் பெறுகிறது.

தமிழ்க் காப்பியங்களில் நாம் பல அவலங்களைக் காண்கிறோம். உயர்நிலையிலுள்ள ஒரு பண்புடையாளான் தான் செய்த தவறுக்காக வீழ்ச்சியுறுவதை படிக்கும் போது அவன்பால் நமக்கு இரக்கம் மிகுகிறது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p97.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License