மலக்குடலில் ஏற்படும் அதிக அழுத்தமே மூலத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அசைவ உணவுகளை அடிக்கடி உட்கொள்ளுதல்
போன்றவை மலக்குடல் அழுத்தத்திற்கு காரணமாக அமைகிறது.
கருவுற்ற பெண்களுக்கும், குழந்தை பெற்ற பெண்களுக்கும், அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களுக்கும் மூலநோய் அதிகமாக வருகிறது. உடல் எடை அதிகரித்தாலும் மூல நோய் வரலாம்.
நோய்க்கான அறிகுறிகள்
வலியுடன் மலம் கழித்தல்
மலத்துடன் இரத்தம் சேர்ந்து வருதல்
மலம் கழிக்கும் போதும் கழித்த பிறகும் தாங்க முடியாத எரிச்சல் மற்றும் வலி
ஆசனவாயில் அரிப்பு
பட்டாணி அளவிற்கோ அல்லது அதற்கு மேலோ மலக்குடல் வெளித்தள்ளுதல்
சிலருக்கு வலி, எரிச்சலின்றி இரத்தம் மட்டும் அதிகம் போகும்.
நோய் வராமல் தடுக்கும் முறைகள்
மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் முடிந்த அளவு சீக்கிரமாக மலம் கழிக்க வேண்டும்
மலத்தை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்கக் கூடாது
அதிகப்படியான காரம், மசாலா கொண்ட உணவுகளையும், அசைவ உணவுகளையும் தவிர்கவும்
தேவையான தண்ணீரைக் குடிக்க வேண்டும்
நார்சத்து மிகுந்த உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதை தவிர்க்க வேண்டும்.
நோய்க்கான வீட்டு வைத்திய முறைகள்
தினம் ஒரு பழம் என்ற பழக்கம் மூலநோய்க்கு நல்லது
பிரண்டை, இஞ்சி போன்றவைகளால் செய்யப்பட்ட துவயல் பலனளிக்கும்
கருணைக் கிழங்கு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
நத்தை மற்றும் பன்றி இறைச்சியை உட்கொண்டால் மூல நோய் போய்விடும் என்று சிலர் சொல்வதுண்டு. இது தொடக்கக் காலத்தில் சிலருக்குப் பயனளிக்கலாம். பலருக்கு உடனடியாகப் பலனலிப்பது போல தோன்றினாலும் பிறகு நோயின் தன்மை அதிகமாகும் வாய்ப்பு உண்டு.
வீட்டு வைத்திய முறை பலனலிக்கவில்லை என்றால் தாமதமின்றி தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
மருத்துவ சிகிச்சைகள்
ஆங்கில மருத்துவ முறையில் பொதுவாக அறுவை சிகிச்சையை பரிந்துரைப்பார்கள். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகும் சிலருக்கு மீண்டும் வர வாய்ப்புண்டு. எனவே முதலில் மருந்துகள் மூலம் குணமடையவே முயற்சிக்க வேண்டும். ஆசன வாய் வெளித்தள்ளியபடி இருந்தால் அறுவை சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும். இவை தவிர அனைத்து மூலக் குறைபாடுகளுக்கும் மருந்துகள் மூலம் குணப்படுத்துவதே சிறந்த வழிமுறையாகும்.
ஓமியோபதி சிகிச்சை முறை
மருந்துகள் மூலம் சிறந்த குணமடைய ஓமியோபதி சிகிச்சை முறையே சிறப்பானதாக இருக்கிறது. ஓமியோபதியில் மூலத்திற்கு மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன. பதிவு பெற்ற ஓமியோபதி மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை உட்கொண்டால் போதும். மூல நோயிலிருந்து குணமடைவதுடன் மீண்டும் வராமல் தடுத்து விடலாம். மூல நோய் வந்தவர்கள் முதலில் ஓமியோபதி மருத்துவத்திற்கு முயற்சிப்பதே மிகச் சிறந்தது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.