|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
| 1 |
|
அடையாளம்-1 எம்.ஜி.ஆர். நினைவுகளைச் சேகரிக்கும் ஹோட்டல் மேலாளர்.
தேனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் கற்பகத்தில் மேலாளராக இருப்பவர்
நாகராஜன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நாட்டு நாணயங்கள், ரூபாய்
நோட்டுகள், தபால் தலைகள், விதவிதமான பேனாக்கள், சாவிக் கொத்துக்கள் என்று
பலவிதமான சேகரிப்புகளைச் செய்து வருகிறார்.
இந்த வித்தியாசமான மனிதர் நாகராஜன், தனது ஓய்வு நேரத்தில் இந்த சேகரிப்புகள் தவிர பத்திரிகைகளுக்கு தேனி ராஜதாசன் எனும் பெயரில் கதை, கட்டுரை, கவிதை, துணுக்குகள் என்று ஏதாவது ஒரு படைப்பை பத்திரிகைகளுக்கு அனுப்பி, பிரசுரமான அவற்றையும் ஆல்பமாகத் தயாரித்து வைத்திருக்கிறார். மேலும் இவர் மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், கிராமியக் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் பங்கேற்று நடித்து பல அமைப்புகளின் பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 88 வது தினப் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற "குரல்வேந்தன்" நடிகர் ராஜீவ் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் , திருப்பூர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோருடன் நாகராஜன் என்ற தேனி ராஜதாசன்
இவருக்கு உரத்த சிந்தனை எனும் அமைப்பு வழங்கும் சிறந்த வாசக எழுத்தாளர்களுக்கான
ஜி.வி.விருது, இதயக்கனி மாத இதழின் சிறந்த சாதனையாளர் விருது, ஆதித்தனார்
முத்தமிழ்ப் பேரவை வழங்கிய சிறந்த சிறுகதைகள் எழுதியதற்கான விருது, இந்தியப்
பேனா நண்பர் பேரவை வழங்கிய விருது, தமிழ்நாடு கிராமியக் கலைஞர்கள் தலைமை நலச்
சங்கம் வழங்கிய விருது தமிழக அரசின் மதுரை மண்டலக் கலை, பண்பாட்டு மையத்தின்
விருது போன்றவை வழங்கப்பட்டிருக்கிறது.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.