........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                         

 இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

1

அடையாளம்-2

            நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர் தேனி எஸ்.மாரியப்பன்

1964-ல் தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிலையத்தின் பயிற்றுனராகப் பணியைத் துவக்கிய தேனி.எஸ்.மாரியப்பன் 1979-ல் கல்கி வார இதழ் நடத்திய நகைச்சுவைப் போட்டியில் பங்குபெற்று பரிசு பெற்றார். அன்றிலிருந்து எழுதத் துவங்கி இன்று வரை சுமார் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளை , அதாவது சிரிப்புகளை எழுதி நகைச்சுவை எழுத்தாளர்களில் தனக்கென்று தனிச் சிறப்பு ஏற்படுத்திக் கொண்டார். நகைச்சுவை விஷயங்கள் மட்டுமின்றி பல அறிவுப்பூர்வமான தகவல்கள் பலவற்றையும் தொகுத்து நூலாக எழுதியிருக்கிறார். இப்படி நகைச்சுவை, பொது அறிவு தகவல்கள் என்று 17 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

 இவர் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட நெறியாளராக இருக்கிறார். இந்தியப் பேனா நண்பர்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். இது தவிர தேனியில் உள்ள பல்வேறு இலக்கிய அமைப்புகளிலும் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

இவர் உரத்த சிந்தனை அமைப்பின் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருக்கான விருது மற்றும் சி.பா.ஆதித்தனார் கலை இலக்கியப் பண்பாட்டு கழக விருது என்று பல விருதுகளைப் பெற்று இருக்கிறார்.

உரத்த சிந்தனை விருதுடன் நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளர் தேனி எஸ்.மாரியப்பன்

இவர் பன்னாட்டு மன்றத்தின் சார்பாக சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். இவர், "வாழ்க்கையில் நகைச்சுவையால் மட்டும்தான் மற்றவர்களை மகிழ்விக்க முடியும், நகைச்சுவை ஒன்றுதான் எவரையும் சங்கடப்படுத்தாது. பணம்,பொருள் போன்றவை சிலருக்கு சந்தோஷம் தரும், சிலருக்கு சங்கடம் தரும்.ஆனல், நகைச்சுவை மூலம் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்பதால் சிரிப்பு எழுதுவதில் மட்டும் அதிக கவனம் செலுத்தினேன். நாம் மட்டும் சந்தோஷமடைவதை விட பிறறையும் சந்தோஷப் படுத்துவதுதான் சிறப்பான செயல். இந்த சிற(ரி)ப்பான செயலுக்கு என் சிரிப்புகள் இருந்திருக்கிறது.

தற்போதைய பத்திரிகை வாசிக்கும் வாசகர்களிடம் சிறுகதை, கட்டுரை, கதைகள் படிக்கும் ஆர்வம் வெகுவாகக் குறைந்து விட்டது, சிறு சிறு விஷயங்களில்தான் இப்போது பத்திரிகை வாசகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இது இணையதள இதழ்களுக்கும் பொருந்தும் என்கிறார்.

உண்மையா?  நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

-தாமரைச்செல்வி.

முந்தைய அடையாளம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.