|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
| 1 |
|
அடையாளம்-6 அமெரிக்காவின் தமிழ்ப் பற்றாளர் வ.ச.பாபு
தங்கள் வாழ்வாதாரத்துக்காக தாய்த்
தமிழகத்திலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களில் சிலர், தமிழர்கள் மத்தியில்
தமிழில் பேசுவதைத் தவிர்த்து அயல்மொழியோடு ஆலிங்கனம் செய்துகொண்டு ஆடை
களைவதைப் போல களைந்தெறிந்து வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கு மத்தியில் தமிழை
வளர்க்க, நேசிக்க மழலைகளின் அதரங்களில் தமிழைத் தவழ விட தன்னார்வ தமிழர்களும்
இருக்கிறார்கள் என்பதுதான்
இப்போது ஆறுதலான விசயம்!
தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில்,
உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள்
வணக்கத்திற்குரியவர்கள்! அமெரிக்கத் தமிழர் இல்ல மழலைகள் நேசித்துச்
சுவாசிக்கத் தமிழமுதை விருந்தாக்கியளிக்கும் தமிழன்பர்களை நாம் நன்றியோடு
நினைக்கப்பட வேண்டியவர்கள்! வள்ளுவன் எந் நன்றிகொன்றார்க்கும் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு என்கிறதற்கொப்ப அடுத்த தலைமுறைக்கான மொழியுணர்வை
வளர்த்தெடுக்கும் இவர்களை உலகத் தமிழர்களின் பார்வைகளுக்காக அடையாளம் காட்ட
நேர்காணல் செய்து முன்னிடுகிறேன். இந்த வரிசையில் முதலாவதாக நாம் அடையாளம் காட்ட விரும்புவது சிகாகோவில் வசிக்கும் வ.ச.பாபு அவர்களைத்தான். இவர், பெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையில் பொறுப்பு வகிப்பவர். தமிழுக்காகத் தொண்டாற்றுபவர். தமிழுக்காகவே தன் நேரத்தைச் செலவிடுகின்ற பேராளர் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு தமிழ்ப்பற்று. இவருடனான நேர்காணல் இல்லையில்லை மின்காணல் இதோ...
? தங்களைப்பற்றி ஒரு சிறு குறிப்பு:- அமெரிக்கத் தமிழ்க் குழந்தை ... அமெரிக்க மண்ணில் அன்றாடம் கற்பிக்கப்படும் பயிற்சி மொழியென தமிழ் அமையும் காலம் வரும் வரை, பண்பாட்டு மொழியென்ற வகையில் கற்பிப்பதால், சிறார்களிடையே அதிக அழுத்தம் சேரா வண்ணம், அவர்கள் அச்சத்துடன் மருண்டு ஓடாத வண்ணம் கற்பிப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு தற்போது பள்ளிகளை இயக்குகிறோம். ஆர்வம் கூட்ட தமிழில் தட்டச்சு, மின்னஞ்சல், வலைப்பூக்கள் போன்ற பயிற்சி கொடுப்பதில் ஈடுபட்டுள்ளோம்.
?அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குடும்பங்களில் தமிழ் கற்க விரும்பும்
கல்லூரி நிலை மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் திட்டம் உண்டா?
?தமிழில் மேற்பயிற்சி பெற தமிழ் மண்ணில் அமைந்துள்ள கல்லூரிகளை அணுகும் எண்ணம் உள்ளதாக தெரிவித்தீர்கள். இப்போது தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மேற்படிப்புகளை அளிக்கிறதே! இதன்மூலம் வெளிநாடு வாழ் தமிழர்கள் குழந்தைகள் உயர் கல்வி தமிழில் பெற உள்ள வசதியைப் பயன்படுத்தலாமே!
நீங்கள் குறிப்பிட்டது போல் தமிழ் இணையப்
பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அமைப்பாகும். அய்யா திரு. குழந்தைசாமி அவர்களிடம்
உள்ள நேரிடைத்தொடர்பு இதற்கு ஏதுவாகலாம்.
1987 சிகாகோவில் சிறார்களுக்கு மீண்டும் (80 ஆரம்பத்தில் எடுத்த முயற்சி
நிலைக்கவில்லை) தமிழ் கற்பிக்க வேண்டுமென்ற எண்ணம் இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள்
திரு. இராம்மோகன், இளங்கோ, விசுவநாதன், திருவாட்டி. கண்ணகி, கலைச்செல்வி, மீனா
ஆகியோருக்குத் தோன்றியதன் காரணமாக வடமேற்கு பல்கலைக்கழக வளாகத்தில் நண்பர்
பாலசந்தர் உதவியுடன் முதல் தமிழ்ப்பள்ளி துவங்கியது.
? உங்கள் கருத்துக்கு ஒத்த எண்ணத்தோடு உடன் வந்தவர்கள் குறித்து
உங்களுக்குள் மலரும் நினைவுகள் இருக்கும். அவர்கள் குறித்துப் பகிர்ந்து கொள்ள
இயலுமா? ? இதுவரை சாதித்தது என்ன? இனி சாதிக்கப்போவது என்ன? இதுவரையும் சாதித்தது அணுவளவு! இனி சாதிக்க உள்ளது காலம்தான் பதில் கூறும். ? தமிழ் பள்ளிகள் ஆங்காங்கே துவக்குவது தவிர மற்றபடி தங்கள் பொதுப்பணிகளில் உள்ள ஈடுபாடு குறித்துச் சொல்லுங்களேன்? இந்த மண்ணில் முதல் தலைமுறையாக காலூன்றியவர் யாவர்க்குமே பொதுப்பணிகள் பெரும் பொறுப்பு! இனம், மொழி, பண்பாடு, கலை என யாவற்றிலும் நாம் நிலையாக இந்த மண்ணில் ஊன்றிட 1986ல் ஆரம்பித்த பணி தொடர்கின்றது, என்று முடியும், எந்த அளவில் முடிந்தன என்பதை இனிய மூச்சு காற்றோடு கலந்த பின் வரும் காலம் சொல்லும். ?இந்தப் பொதுப்பணிகளில் உங்கள் மனது மகிழ்ந்த / நிறைவான சம்பவம் என்று ஒன்றைக் குறிப்பிட்டுக் கூற முடியுமா?
"தீதும் நன்றும் பிறர் தர வாரா ... இனிதென ? பொதுவாக வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நீங்கள் தெரிவிக்கும் செய்தி என்ன? தமிழ் உணர்வு நம்மோடு உறைந்திடல் வேண்டும். "தமிழ் உயர தமிழால் நாம் உயர்வோம்" ?அமெரிக்காவில் தமிழ் பள்ளி துவங்க யாரேனும் முன்வந்தால் நீங்கள் தரும் ஆலோசனை என்ன? என்றும் எதிர் நோக்கும் உதவிகள் உண்டு. தொடர்புகளை வரவேற்க எனது "அன்னை இல்லம்" என்றுமே காத்துள்ளது. ?அன்னை இல்லம் தொடர்பிற்கு மின்னஞ்சல் முகவரி:
annaiillam@hotmail.com , மின்காணல்:- ஆல்பர்ட் பெர்னாண்டோ, அமெரிக்கா.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.