|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
| 1 |
|
அடையாளம்-7 கணிப்பொறி வழி தமிழ் வளர்க்கும் முனைவர்.வாசு.அரங்கநாதன்
அமெரிக்காவின் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில்
பணியாற்றி வருகின்றார்
முனைவர் வாசு அரங்கநாதன். தமிழ்நாட்டின்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றுத்
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1989 முதல்
அமெரிக்காவில் தமிழ்த் தொண்டைத் தொடர்ந்து வருபவர்.
?தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற
ஆர்வம் தமிழகத்தில் இருக்கும்போது ஏற்பட்ட உணர்வா? இல்லை
அமெரிக்காவிற்கு வந்த பின் தோன்றியதா?
?இணையப் பக்கங்களில் கணிப்பொறி வழி தமிழ் மொழி கற்றுக் கொள்ளப் பாடங்களை
வடிவமைத்துள்ள தங்களுக்கு இதன் மூலம் பயன்பெற்ற வெளிநாடுவாழ் தமிழ்
மாணாக்கர்கள் தங்களைத் தொடர்புகொண்டு நன்றி பரிமாறிக்கொண்ட, உதவி
கோரிய நிகழ்வுகள் போன்ற சந்தர்ப்பங்கள் தங்களுக்கு
வாய்த்திருக்கும்.இதில் தங்கள் மனம் நெகிழ்ந்த சம்பவங்கள் கண்டிப்பாக
இருக்கும். அப்படிப்பட்ட மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள இயலுமா? (இதுதான்....உங்கள் உழைப்புக்கு கிடைத்த மகுடம்!)
?அமெரிக்காவில் உள்ள தமிழ் குழந்தைகள் உங்கள் தமிழ்ப் பக்கங்களைப்
பயன்படுத்துவது குறித்து ஏதும் புள்ளிவிபரம் தர இயலுமா?
http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/guest/tamilguest.html தமிழ் வம்சாவழி குழந்தைகளும் மாணாக்கர்களும் தமிழைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகள் குறித்தான பணிகள் பலவற்றை என்னால் இயன்றவரை செய்து வருகிறேன். நான் வாழும் தென் ஜெர்சியில் ஒரு தமிழ்ச் சங்கத்தை நிறுவி இங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பள்ளி ஒன்று நடத்தி வருகிறேன். இவர்களுக்காக இணையத்தில் ஒரு பாடப் பயிற்சிப் பக்கம் ஒன்று அமைத்துள்ளேன். அதன் இணைய முகவரி http://rewardzone.thetamillanguage.com/ டெலவர் பெருநிலத் தமிழ் சங்கத்தின் சங்கமம் என்ற தமிழ் மலரின் ஆசிரியராக இருக்கிறேன். தமிழகச் சூழலை இங்கு ஏற்படுத்துவதே இப்பணிகளின் நோக்கம். கீழ்காணும் இணைய முகவரியில் அதைப் பார்க்கலாம்.
?எதிர்காலத் திட்டம் என்று உங்கள் எண்ண அதிர்வுகளில் இருக்கலாம். அது
குறித்துச் சொல்லுங்களேன்?
http://rewardzone.thetamillanguage.com/reward_images/screenshots.html இதை எங்கள் சமூகத்தில் உள்ள தமிழ்க் குழந்தைகள் பயன்படுத்தி வருகிறார்கள். இதை எங்கள் பல்கலைக்கழகத் தமிழ்ப்பக்கத்தோடு இணைத்து உலகெங்கும் உள்ள தமிழ் மாணவர்கள் பயன்படும்படி வடிவமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவேன். சங்கம் முதல் இக்காலம் வரையிலான இலக்கியங்கள் மின்வடிவில் இருக்கின்ற இக்காலக்கட்டத்தில் இவற்றை முழுவதுமாகப் பயன்படுத்தி தமிழ் மொழி மற்றும் இலக்கிய வரலாறு, தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சி, தமிழர்களின் வாழ்வு முறை முதலியன பற்றி புதுக்கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்ய வேண்டியது மிக முக்கியமான ஒன்று. இவ்வகையில் http://www.thetamillanguage.com/etext/
என்ற பக்கத்தில் தமிழ் இலக்கியங்களை வெவ்வேறு
கண்ணோட்டத்தில் காண ஒரு சொற்தேடலக்கான வசதியைச் செய்துள்ளேன். தமிழ் மற்றும்
தமிழ்ப் பண்பாடு வளர்ச்சி குறித்தான ஆய்வுகளில் நான் என்னை மேன்மேலும்
ஈடுபடுத்திக் கொள்வேன். மின்காணல்:- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.