|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
இந்து மதம் சிவராத்திரி விஷேசமானது ஏன்?
நமது நாட்டு விரதங்களில் இந்து சமயத்தில் சிவபெருமானை வழிபடுபவர்களால் நவராத்திரி , சிவராத்திரி என்ற இரண்டு ராத்திரிகளுமே விஷேசமாகக் கொண்டாடப் படுகிறது. முன்னது அம்பிகையைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. ராத்திரி காலத்தில் பூஜை செய்ய வேண்டும் என்பதை இவை மெய்ப்பிக்கின்றன. ராத்திரி என்பது என்ன? ராத்திரி என்பது யாதொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்து உறங்கும் காலமாம். பகலெல்லாம் வேலை செய்து நாம் தினந்தோறும் இரவில் உறங்குகிறோம். அப்படி உறங்கி எழுந்தால் தான் உடலுக்கு ஆரோக்கியமும் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாவிடில் உடலும் மனமும் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. நமது நன்மையை நாடி சர்வேஸ்வரன் நமக்குத்தந்த வரன் தூக்கமாம். ஆனால் அளவு கடந்தும் தூங்கக் கூடாது. தீர்க்க நித்திரை என்று மரணத்திற்குப் பெயர். சிவராத்திரி என்பது என்ன? எதனால் தூக்கம் வருகிறது? இந்த தூக்கம் அவசியம்தானா? என்று விசாரித்த சிலர் இது ஒரு அரிய பாக்கியம் இன்றியமையாதது என்ற முடிவிற்கு வந்தனர். தூக்கத்தில் சிவன் நம்மை அடைகிறான். இதைத் தூங்குகிறான் என வேதம் மறைவிடமாகக் கூறுகிறது. பகலெல்லாம் அலைந்து திரிந்த நமது இந்திரியங்களும் உடலும் சக்தியை இழந்து ஓய்வடைகின்றன. அச்சமயம் நமது இருதயத்தில் உள்ள ஈஸ்வரன் நம் ஜீவனை அணைத்து அருகில் அமர்த்துகின்றான். அச்சமயம் கண் காண்பதில்லை. காது கேட்பதில்லை. புத்தி ஒன்றையும் நினைப்பதில்லை. சுகமாகத் தூங்கினேன் என எழுந்த பின் கூறுகிறோம். அச்சமயம் நாம் இழந்த சக்தியை சிவன் நமக்கு அளித்து அனுப்புகிறார். இப்படி இம்மண்ணுலகும் விண்ணுலகும் ஒரு சமயம் வேலையை விட்டு இறைவனிடம் ஒடுங்குகிறது.. இதுவே மஹாபிரளயம் எனப்படும். நாம் தினந்தோறும் தூங்குவது தைனந்தினப்ரளயம் எனப்படும்.
நாம் பகலில் வேலை செய்து களைத்துப் போவது போல் உலகெல்லாம் வளர்ச்சி காலத்தில்
வேலை செய்து களைப்படைகிறது. அந்த பிரபஞ்சத்திற்கு இழந்த சக்தியை அளிப்பதற்காக
சிவன் தனக்குள் லயப்படுத்துகிறார். இதே பிரளயம் எனப்படும். புரலயம் என்பதே
பிரளயம் என்றாயிற்று.
பிர என்றால் உலகம்.
லயம் என்றால் இரண்டறக் கலத்தல். பிரளயம் என்றால் உலக ஒடுக்கம் என்பதாகும். நீங்களும் சிவராத்திரி பூஜை செய்து பயன் பெறலாமே? தொகுப்பு:- கவிதா பால்பாண்டி, திருப்பரங்குன்றம்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.