|
கிறித்துவ மதம்
பைபிள் சொல்லும்
கருத்துக்கள்

-
சகிப்புத்தன்மை
உள்ளவர்களே சந்தோஷமாய் இருக்கிறார்கள். ஒருவன் இயேசு கிறிஸ்துவின் நல்ல கரத்தைப் போல் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.
-
மனிதன் தன் சக்தியை நம்ப வேண்டும். எனக்குப் புறாவைப் போல சிறகுகள் இருந்தால்
பறந்து போய் இளைப்பாறுவேனே என எண்ண வேண்டும்.
-
செய்யக்கூடாதவை சில. விபச்சாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே,
பொய்சாட்சி சொல்லாதே, வஞ்சனை செய்யாதே.
-
நீ செய்யக்கூடிய செயல் உன் தந்தையையும் தாயையும் பெருமைப்படுத்துவதாக இருக்க
வேண்டும்.
-
சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை தரும். ஆனால், ஒவ்வொரு
முட்டாளும் ஏதாவது ஒரு சண்டையில் தலையிட்டுக் கொண்டே இருப்பான்.
-
சஞ்சலம் உள்ளவன் காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்து அலைக்கழிக்கப்படும் கடல்
அலை போல் இருக்கிறான். அப்படி அல்லாமல் நிலையான மனம் வேண்டும்.
-
நியாயப் பிரமாணம் என்பது நேர்மையானவனுக்கு வகுக்கப்பட்டதல்ல. அநீதி
உடையவர்களுக்கும், அடங்காத்தனம் கொண்டவர்களுக்கும், தெய்வ பயமில்லாதவர்களுக்கும்,
பாவிகளுக்கும், புனிதமற்றோர்களுக்கும், அக்கிரமக்காரர்களுக்கும், தாய்,தந்தையைக்
கொலை செய்தவர்களுக்கும், மனிதர்களை வேட்டையாடுபவர்களுக்கும்,
காமாந்தகாரர்களுக்கும், தகாத கலவியில் ஈடுபடுபவர்களுக்கும், பொய்யர்களுக்கும்,
குரோதக்காரர்களுக்கும் மட்டுமே வகுக்கப்பட்டு உள்ளது.
-
ஒருவன் நீதிமானாக இருந்தாலும் அவருக்கும் ஒருநாள் கேடு வரும். ஏனெனில் சுமக்க
முடியாத துயரமான சுமைகளை சக மனிதர்கள் மீது அவன் சுமத்தி விடுகிறான். தன்
விரலால் கூட கஷ்டமான காரியங்களை தொட்டுப் பார்ப்பதில்லை. கஷ்டத்தை
எதிர்கொள்பவன்தான் வாழ்வில் வெற்றி அடைகிறான்.
-
இயேசுவான நான் சத்தியத்திற்கு சாட்சியாகவே பிறந்தேன். அதற்காகவே இந்த
உலகத்திற்கு வந்தேன். சத்தியத்தைக் கடைப்பிடிப்பவன் எவனும் என் குரலுக்கு காது
கொடுக்கிறான்.
-
ஒரு மனிதனுக்கு எதிரிகள் வேறு எங்கும் இல்லை. அவனது சத்ருக்கள் அவனுடைய வீட்டில்
இருப்பவர்கள்தான்.
தொகுப்பு: து.ஜெபராஜ், திருவில்லிபுத்தூர்.

முந்தைய ஆன்மீகக் கருத்துக்கள் காண

|