|
இதர கருத்துக்கள்
திருமூர்த்திமலைக் குருமகான்
பரஞ்சோதியார்.

வாழ்க சமாதானம், உலக அமைதி
காப்போம். சந்தோசம்.
கோவை மாவட்டம் , பொள்ளாச்சி அருகில் உள்ள
திருமூர்த்தி மலையில் ஆசிரமம் வைத்து ஆன்மீக வழியில் அமைதிக்கான வழி முறைகளைக்
காட்டி வருபவர்
ஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள். இவர் தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு,
அவர்களுக்குத் தேவையான மன அமைதிக்கான தியானம், அறிவுரைகள் வழங்கி வருபவர்.
ஒவ்வொரு நாளும் தன் ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களிடம் , தியான வேளைகளில் மன ,
மெய் வழிகளில்
" வாழ்க சமாதானம், உலக அமைதி காப்போம். சந்தோசம், சந்தோசம்" என்று
இதயப்பூர்வமாக முழங்கச் செய்கிறார். இவருடைய பக்தர்களில் ஒருவரும், நம்
துணையாசிரியர்களில் ஒருவருமான கவிஞர். வி. எஸ். வெற்றிவேல் "நீதான் முதல் மைல்
கல் !" என்று இவரைப் பற்றி ஒரு புதுக்கவிதையைப் படைத்து வழங்கியிருக்கிறார்.
அந்த புதுக்கவிதை இதோ...
நீதான் முதல் மைல் கல்
!
இனிக்கின்ற
இளைய தலைமுறையே !
உன்னைச்
சரியாகக் கணிப்பதில் நானும் ஒருவன் !
எதையும்
எதையும்
உன்னால்
திணிக்கவும் முடியும் - வேண்டாமெனில்
துணிக்கவும் முடியும்
உன்னால் முடியாதது ஒன்றுமில்லை
என்பதை
ஒத்துக்கொள் !
இதை
இதுவரை தெரியாமல் இருக்கமாட்டாய் ! அப்படி
இருந்தால்
கற்றுக்கொள் !!
அதிகாலையில்
கவனம்
கவனம்
அதிகாலையில்
எழுந்து
அன்றாடகடமைகளைச் செய்பவர்களை
எந்தக்கிரகங்களும்
அண்டாதென்பது
தொன்று தொட்டு வந்த மகான்களின் கருத்து
இன்று
திருமூர்த்தி மலைக்குருமகான் பரஞ்சோதியாரும்
இதைத்தான்
தீவிரமாக போதித்துக்கொண்டிருக்கிறார்கள் !
இன்னும்
மனித குலத்தை தெய்வ குலமாக மாற்றும்
மேம்பாட்டுக்கு
ஏத்தனையோ சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்; !
மறவாதே !
மறவாதே!
இரண்டுமுறை மறவாதே என்று சொல்வதற்குக்
காரணம்
இந்தச்சேதி
உனக்குள்
இறங்கட்டும் என்றுதான் !
காலகாலமாக
நீ எதற்குக் கட்டுப்பட்டு வந்தாயோ
அந்த
மூடநம்பிக்கைகள் உன்னை ஆளவும்
அனுமதித்தாய் !
மேலும்
அதற்கு நீயே அரியாசனமுமானாய் !
நினைத்துப்பார் !
நினைத்துப்பார் !!
நீண்டகாலமாக மயக்கத்தில் கிடந்த உன்னை
நினைத்துப்பார் !!!
உன் செயலை யாரும் தடுக்க முடியாது !
அதில்
நிலைத்துப்பார் ! நிலைத்துப்பார் !!
உண்மை !
உண்மை !
இது உனக்குத் தெரியும் ! புரியாமலும் போகாது !!
நீ
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
ஆனால்
உன்னை நம்பி பாரதம் இருக்கிறதென நினை !
உலகம் இருக்கிறதென நினை !!
நினைத்தால் !
நினைத்தால் !!
தீமைகளை நோக்கி உன் சிந்தனை போகாது !
செயற்கரிய சேவைகளும்
தியாகங்களும் உன்னைச் சேராமல் மீளாது !!
"உன்னை நம்பு"
உன்னைநம்பு அதுபோதும்
அதனால்
உன்னை மட்டுமல்ல நீ உலகத்தையே ஆளலாம் !
நீ
தேசத்தை சீர்திருத்தம் செய்யப் புறப்பட்டுவிட்டால்
இங்கு
நாச வேலைகள் நடத்த ஆளிருக்காது !
நீ
பாரதத்தைக் காக்கத் துணிந்து விட்டால்
உன் நாட்டை
பிறநாடுகள் பார்த்து உறுமுவது நடக்காது !
உன்காலத்திலேயே இந்தியா வல்லரசாக வேண்டும் என
நினை !
இதைவிட
உக்கு
இலட்சியம் வேறில்லை ! வேறில்லை !!
இப்போதிருந்தே
இந்த இலட்சியப் பாதையை நோக்கி நட
உன்நடை
ஊர், நாடு,தேசத்தை, உலகத்தை
ஆட்சியாளர்களையும்
உசுப்பட்டும் !
அறியாமை
என்ற ஆழத்தில்
நீ மூழ்கிக் கிடப்பதால்தான் முன்னேற முடியாதிருக்கிறாய் !
வளர்கின்ற
மாணவ சமுதாயமே !
வரலற்றை
நிர்ணயிக்கும் உடல் வலிமையும் அதைவிட மனவலிமையும்
கொண்ட
வாலிப சாம்ராஜ்யமே !
நீ
அர்த்தத்தோடு எழுவது மக்களுக்குத் தெரிந்துவிட்டால்
இங்கு
அழுகை அஸ்தமனமாகி விடும் !
நீ
கடுமையாக உழைக்கத் துணிந்துவிட்டால்
பற்றாக் குறை என்பது
கனவிலும் தோன்றாது !
நீ
ஒழுக்கத்தின் பாதையை சீராக அமைத்துக்
கொண்டால்
இயற்கையின் சீற்றங்கள்
ஒருபொழுதும் நடக்காது !
மனித குலத்திற்கு
வரையறுக்கப்பட்ட நெறியிலிருந்து சிறிது
விலகினாலும்
மரணத்திற்கு ஒப்பான
துன்பத்தை
துயரத்தை
சொல்லொண்ணா வேதனைகளை
இடைக்காலங்களில் பெறவேண்டும் என்பதே
உலக நியதி !
அஞ்சாமை
நெஞ்சுரம்
அடலேறுப் பிடிப்பும் இலட்சிய வேட்கையும்
கொண்ட
ஆற்றல்மிகு இளைஞர் பாசறையே !
விழி!
எழு!!
நீ ஏன் இப்படி ஆவேசமாய் புறப்பட்டிருக்கிறாய்
என்ற அர்த்தம் புரியட்டும்
உன்
புரட்சியைப் புரிந்து கொண்டால் சமுதாயமே
உன்னைப் பின்தொடரும்
பிறகு
மனித குல ஒருமைப் பாட்டுக்குப் பாதை சொன்ன
நீதான்
முதல் மைல் கல் !
- கவிஞர். வி. எஸ். வெற்றிவேல்

வி.எஸ்.வெற்றிவேல் அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய ஆன்மீகக் கருத்துக்கள் காண

|