........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                  
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

இந்து மதம்

கோமாதாவின் பெருமை தெரியுமா?

இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர். பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.

  • பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால் 

  • கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்

  • சிரம் - சிவபெருமான்

  • நெற்றி நடுவில் - சிவசக்தி

  • மூக்கு நுனியில் - குமரக் கடவுள்

  • மூக்கினுள் - வித்தியாதரர்

  • இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்

  • இரு கண்கள் - சந்திரர், சூரியர்

  • பற்கள் - வாயு தேவர்

  • ஒளியுள்ள நாவில் - வருண பகவான்

  • ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்

  • மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்

  • உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்

  • கழுத்தில் - இந்திரன்

  • முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்

  • மார்பில் - சாத்திய தேவர்கள்

  • நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு

  • முழந்தாள்களில் - மருத்துவர்

  • குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்

  • குளம்பின் நடுவில் - கந்தவர்கள்

  • குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்

  • முதுகில் - உருத்திரர்

  • சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்

  • அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்

  • யோனியில் - ஏழு மாதர்கள்

  • குதத்தில் - இலக்குமி தேவி

  • வாயில் - சர்ப்பரசர்கள்

  • வாலின் முடியில் - ஆத்திகன்

  • மூத்திரத்தில் - ஆகாய கங்கை

  • சாணத்தில் - யமுனை நதி

  • ரோமங்களில் - மகாமுனிவர்கள்

  • வயிற்றில் - பூமாதேவி

  • மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்

  • சடாத்களியில் - காருக பத்தியம்

  • இதயத்தில் - ஆசுவனீயம்

  • முகத்தில் - தட்சிணாக்கினி

  • எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்

  • எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.

-சித்ரா பலவேசம்.

சித்ரா பலவேசம் அவர்களின் இதர படைப்புகள

 முந்தைய ஆன்மீகக் கருத்துக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.