........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                  
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

இந்து மதம்

 அபிஷேகங்களால் வரும் பலன்கள்

நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...

சந்தனாதித் தைலம் - சுகம்தரும்.

திருமஞ்சனப்பொடி- கடன், நோய், தீரும்.

பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்.

பால் - நீண்ட ஆயுள் கிட்டும்.

தயிர் - நன்மக்கட்பேறு கிடைக்கம்.

நெய் - வீடு பேறு அடையலாம்.

தேன் - சுகம்தரும், குரல் இனிமை தரும்.

கரும்பின் சாறு - நல்ல உடலைப் பெறலாம்.

இளநீர் - போகம் அளிக்கும்.

எலுமிச்சம் பழம் - பகைமையை அழிக்கும்.

விபூதி - போகமும், மோட்சமும் நல்கும்.

சந்தனக் குழம்பு, பன்னீர் - திருமகள் வருவாள்.

வலம்புரிச் சங்கு - தீவினை நீக்கும், நல்வினை ஆக்கும்.

நெல், எண்ணை - விஷ்சுரம் நிவர்த்தி.

நீர் - சாந்தி உண்டாகும்.

வாழைப்பழம் - பயிர் விருத்தி ஆகும்.

வெல்லம் - துக்க நிவர்த்தி.

சர்க்கரை - சத்ரு நாசம்.

அன்னம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.

மாம்பழம் - வெற்றி கிடைக்கும்.

சொர்ணாபிஷேகம் - இலாபம் தரும்.

கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும்.

பால் பஞ்சாமிர்தம் - சம்பத்து நல்கும்.

-சுபாஷினி முருகன்

சுபாஷினி முருகன் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய ஆன்மீகக் கருத்துக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.