|
....... ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
ஆசிரியர் குழு ஆசிரியர்: தேனி எம். சுப்பிரமணி
தமிழ் பத்திரிகைகளில் கதை, கட்டுரை, கவிதை, துணுக்குகள் என்று ஏராளமாய் எழுதிப் பெயர் பெற்றவர். தமிழ் எழுத்தாளர் பேரவையின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக இருந்தவர். பல்வேறு சமூக, இலக்கிய அமைப்புகளில் பொறுப்புகளில் இருந்தவர். பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் போன்றவற்றில் கலந்து கொண்டவர். துணை ஆசிரியர்: கவிஞர்.வி.எஸ்.வெற்றிவேல்
தேனியிலுள்ள மத்திய அரசு வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று இலக்கியத்தின் பல வடிவங்களில் இவர் தன் பங்களிப்பை வழங்கியிருக்கிறார். "அதிகாலை" என்கிற கவிதை நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். பல மேடை நாடகங்களை எழுதி நடித்து இயக்கியிருக்கிறார். சில சினிமா படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். துணை ஆசிரியர்: எஸ்.ஏ.சுகுமாரன்
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் வருவாய்த் துறைப் பணியில் இருந்து வருபவர். பல்வேறு பத்திரிகைகளில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதிப் பரிசுகள் பல பெற்றவர். தூத்துக்குடி பாரதி கலை இலக்கிய மன்றம், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தவர். கலாரசிகன் எனும் மாத இதழின் ஆசிரியராக இருந்தவர்.
துணைஆசிரியர்: எஸ்.செந்தில்குமார்
தேனி மாவட்டம், கூடலூரிலுள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருபவர். ஓவியத்தில் அதிக ஈடுபாடு உடையவர். பத்திரிகைகளில் கதை, கட்டுரை, கவிதைகள், துணுக்குகள் எழுதியவர். தேனியில் வெளியான முதல் சிற்றிதழான முல்லை நதி மாத இதழின் துணை ஆசிரியராக இருந்தவர்.
துணை ஆசிரியர்: வி.பி.மணிகண்டன்
தேனியிலுள்ள நூற்பாலை ஒன்றில் பணியாற்றி வருபவர். பத்திரிகைகளில் கவிதைகள், துணுக்குகள் எழுதியவர். இலக்கியத்தில் அதிக ஈடுபாடு உடையவர். தேனியில் வெளியான முதல் சிற்றிதழான முல்லை நதி மாத இதழின் துணை ஆசிரியராக இருந்தவர்.
துணை ஆசிரியர்: வி.விஜயராகவன்
மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் பொறியியலில்
இளங்கலைப் பட்டம்
பெற்றிருக்கும் இவர், தேனியிலுள்ள கல்லூரி
ஒன்றில் விரிவுரையாளராகப்
பணிபுரிந்து வருகிறார். கணினித் துறையில் மிகுந்த ஆர்வமுடையவர்.
கணினிப் பொறியியலில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று விரும்புபவர்.
துணை ஆசிரியர்: ஆர்.ரஞ்சித்குமார்
மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் பொறியியலில்
இளங்கலைப் பட்டமும், செயல்முறைக் கட்டுப்பாடு மற்றும் மின்னணுக்
கருவிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்று பெங்களூரில்
உள்ள கல்லூரி
ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்தியாவின் கிராமப் பகுதிகளிலும் இணைய தளத்தின்
பயன்பாடுகள் செல்போன் சேவையைப் போல் எளிமையாக்கப்பட்டு தகவல் தொடர்பில் புதிய வளர்ச்சி காண வேண்டும் என்கிற ஆர்வம்
இவருக்கு அதிகம்.
|
|
உங்கள் தேடுதலை இங்கே
துவங்குங்கள்
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.