........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                                           
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
1
 

 

 

 

1

எண் கணித பொது பலன்கள்

எண்- மூன்று:  3 

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் கூட்டெண் மூன்றாக உள்ளவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் ஆவர். 

எண் மூன்றுக்குரிய கோள் கேது ஆகும். இது ஒரு நிழல் கோள் ஆகும். மனிதத்தலை கொண்ட பாம்பாக இது கருதப்படுகிறது. பாம்பின் உடல் கை கால்கள் இன்றி எளிமையாக இருக்கும். மூன்று புள்ளிகளால் ஆன  ஒரு முக்கோணமே மிக எளிமையான ஒரு வடிவம் ஆகும். எனவே கேதுவை எளிமையின் கோள் எனலாம். இந்த எண்ணின் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் மிக எளிமையான வாழ்வை நடத்துவர். பழகுவதற்கு எளிமையாகவும் இனிமையாகவும் உள்ள இவர்கள் பிறருக்கு உதவி செய்வதற்கு எள்ளளவும் தயங்கமாட்டார்கள். 

எண் மூன்றுக்குரிய எழுத்துக்கள் அ, ஆ, இ, ஈ, உ, ஊ  ஆகிய சுட்டெழுத்துக்கள் ஆகும். சுட்டெழுத்துக்கள் குறைந்த எழுத்துக்களால் அதிக பொருள் விளக்கம் தருவதைப் போல கேதுவின் தாக்கம் பெற்ற ஒரு சாரர் எந்த வேலையையும் குறைந்த காலத்தில் செய்து முடிக்க விழைவர். இதற்காக உழைத்து அதில் வெற்றியும் பெறுவர். இன்றைக்கு நாம் மின்சாரத்தின் உதவியால் பல கடினமான வேலைகளை மிகச் சுலபமாக குறைந்த நேரத்தில் முடித்துக் கொள்கிறோம். இதற்கான கருவிகளைக் கண்டறிந்தவர்களில் பலர் கேதுவின் தாக்கம் பெற்றவர்களே. எதையும் வித்தியாசமாகச் சிந்தித்து அதில் புதுமையைப் புகுத்தி எளிமைப் படுத்துவதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை என்றே கூறலாம். இவர்கள் கணினித் துறையில் பல புதிய நுணுக்கங்களைக் கண்டறிந்து செயல்களை மேலும் எளிதாக்கி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது. 

நமது மனித உடலில் கேதுவின் ஆட்சிக்கு உட்பட்டது கைகள் ஆகும். கைகளைப் போல் உதவி செய்யும் மனித உறுப்பு வேறு எதுவும் இல்லை எனலாம். தனக்கே ஆகட்டும் இல்லை பிறருக்கே ஆகட்டும் கைகளின் உதவியின்றி ஒருவர் வாழ்வது மிகவும் கடினமான செயலாகும். உதவி செய்வதில் அதிலும் கேட்காமலே சென்று உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே எனலாம். உடுக்கை இழந்தவன் கைபோல என்ற பழமொழி இவர்களுக்கே பொருந்தும். உடலின் மொத்த வலிமையும் கைகள் அல்லது தோள்களில் உள்ளது எனலாம். எனவே இக்கோளின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் பலர் மல்யுத்த வீரர்களாகவும் பலசாலிகளாகவும் இருப்பர். இவர்களது மொத்த குடும்பத்தின் பாரத்தையும் இவர்களே தங்கிக் கொண்டிருப்பர். 

கேதுவின் நிலை கெட்டிருந்தால், உடல்வலி, தோள்வலி, நண்பர்கள் துரோகம் முதலான தொல்லைகள் உண்டாகும்.

மற்ற எண்களின் பலன் அறிய

ஒன்று-1 / இரண்டு-2 / மூன்று-3 / நான்கு-4 / ஐந்து-5

ஆறு-6 / ஏழு-7 / எட்டு-8 / ஒன்பது-9

1
1
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.