........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                        
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

கல்லூரி வாசல்-2

வேலை செய்ய லாயக்கில்லை...

எனக்கு தெரிந்த ஒரு பையன் இன்று என்னை சந்திக்க வந்திருந்தான். 2007-ல் BE ECE முடித்தவன். நல்ல precentage வைத்திருக்கிறான். Infosys-ல் Campus placement கிடைத்திருக்கிறது. Appointment order எல்லாம் கொடுத்தாயிற்று. காலேஜ் முடித்துவிட்டு, பல கனவுகளோடு Infosys campus-க்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. Training பிறகு அவர்கள் வைக்கும் test-களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடரமுடியும் என்று அவர்கள் கூறினார்கள். சும்மா கொஞ்ச நஞ்ச test கிடையாது. கிட்டத்தட்ட 20 test-கள். மூன்று மாதங்கள். பிறகு இவனை இங்கு வேலை செய்ய லாயக்கில்லை என்று சொல்லி infosys வீட்டுக்கு அனுப்பிவிட்டது.

இவனை மட்டுமில்லை, இவனுடைய batch-இல் 156 பேர், கடைசியில் Infosys வேலைக்கு எடுத்துக் கொண்டது வெறும் 36 பேரை மட்டுமே! மீதமிருக்கும் 120 பேரும் வேலைக்கு லாயக்கற்றவர்களா? அது நீங்கள் campus interview நடத்தும் போதே தெரியாதா? என்னங்கய்யா இது? ஒருவர் இருவர் என்பது வேறு விசயம், 120 நபர்களா? இதில் வேறு பிரச்சனை இருக்கிறது.

இவன் இவனது, college-க்கு வந்த முதலாவது கம்பெனியில் place ஆகியிருந்திருக்கிறான். இன்னும் பல company-கள் அதற்கு பிறகு வந்திருக்கின்றன. ஆனால் according to rules, Infosysஇல் place ஆனதால், பிற கம்பெனி interview-களை இவன் attend செய்ய முடியவில்லை. Infosys முதலிலே இவ்வளவு நபர்களை மட்டும் select செய்தால் போதும்னு நினைச்சிருந்தாங்கன்னா வேற company-யில் இவன் place ஆகியிருக்ககூடும் இல்லியா? இவனுக்கு பிறகு மத்த companyயில் (பிற சின்ன கம்பெனிகள் உட்பட) placeஆன இவனது நண்பர்கள் எல்லோரும் settle ஆகி விட்டிருக்கின்றனர்.

இப்பொழுது இவன் resumeஇல் Infosys இருக்கிறது. மூன்று மாதம் training இருக்கிறது. Interviewவுக்கு போகும் இடத்தில் எல்லாம் இதைப்பற்றிய குடைச்சல்கள். இன்னும் வேறு வேலை கிடைத்தபாடில்லை. என்னுடைய batchஇலும் (2001) இதே போல நடந்தது. பல கம்பெனிகள் தங்களது appointment order-களை withdraw செய்து கொண்டன.

படித்து முடித்து புது வேலையில் சேர ஆவலோடு வரும் students இது போன்ற சரிவுகளிலிருந்து மீள்வது மிகுந்த சிரமம். என்ன செய்யப் போகிறோம் என்கிற அந்த பையனின் கலக்கம் ஒரு வேலை கிடைத்தால் மட்டுமே நீங்கும்.

நன்றி: http://www.kuralvalai.com/2008/06/infosys-campus-placements-withdrawn.html

முந்தைய கல்லூரி வாசல் காண
 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.