|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
கல்லூரி வாசல்-3 பிடித்தம் செய்த கல்லூரிக்கு...?
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் - ஜக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் கார்த்திக் கடந்த 2007-08 ஆம் கல்வியாண்டில் தேனியிலுள்ள உடையப்பா பொறியியல் கல்லூரியில் சேர்வதற்காக பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் துவங்குவதற்கு முன்னரே முன்பணமாக ரூபாய் 42,500/-ஐ அந்தக் கல்லூரியில் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு நடந்த பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங்கின் போது திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் நேஷனல் பொறியியல் கல்லூரியில் இவருக்கு இடம் கிடைத்தது. இதனால் தேனியிலுள்ள உடையப்பா பொறியியல் கல்லூரியில் சேர்வதற்காக தான் முன்பணமாக கட்டிய பணத்தைத் திருப்பித் தரும்படி அந்த கல்லூரி நிர்வாகத்திடம் கார்த்திக் கேட்டார். கல்லூரி நிர்வாகம் ரூபாய் 8,000/-ஐ பிடித்தம் செய்து கொண்டு பாக்கித் தொகை ரூபாய் 34,500/-ஐ மட்டும் திருப்பித் தந்தது. பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவுப்படி ரூபாய் 1,000/-ஐ மட்டுமே கல்லூரி நிர்வாகம் பிடித்தம் செய்து இருக்க வேண்டும். எனவே மீதமுள்ள ரூபாய் 7,000/-ஐ திருப்பித்தர மறுத்த கல்லூரி நிர்வாகம் மீது தேனி நுகர்வோர் நீதிமன்றத்தில் கார்த்திக் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நுகர்வோர் நீதீமன்ற நீதிபதி சங்கரநாராயணன் பிள்ளை, உறுப்பினர் கோபிஜெயந்தி ஆகியோர் கல்லூரி நிர்வாகம் கார்த்திக்குக்கு பாக்கித்தொகை ரூபாய் 7,000/- மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 2,000/-, வழக்கு செலவுக்காக ரூபாய் 3,000/- ஆகியவற்றை 12 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டனர். நன்றி: தினமலர் நாளிதழ் (21-07-2008).
____________________
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.