........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

      a

கட்டுரை-25

     சிங்கப்பூர் கணையாழி விழா' 2007  

  -பாண்டித்துரை, சிங்கப்பூர்.

சிங்கப்பூரில் தனி ஒரு மனிதனால், பிச்சினிக்காடு இளங்கோவால் ஏழு ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கவிமாலை அமைப்பு இன்று விருட்சமாக எழுந்து காடாகியுள்ளது. துவக்கமாக திருமதி மீரா மன்சூர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட,  கவிமாலை அமைப்பின் மூலமாக 5-ம் ஆண்டு கணையாழி -2007 விழா இனிதே துவங்கியது.

மன்மதன் வந்தாரடி எனும் பாடலுக்கு குமாரி ஹெமினியின் பரதநாட்டியம் அரங்கேறியது. பின் பண்முக ஆளுமையை நோக்கிப் பயணப்படும்  கவிஞர் கோவிந்தராஜீ பல குரல்களில் பவனி வந்து நிகழ்வினை வாழ்த்தினார்.

எங்கள் கவிமாலை என்ற தலைப்பில் பா.திருமுருகன் தான் கண்ட கவிமாலையை கவிதையாக வாசித்தார் . அதிலிருந்து சில வரிகள்

" கவிமாலை திருவிழா
திமிறாய் நடக்க வேண்டும்
இங்கு குயில்களை காட்டிலும்
காகங்களே கவனிக்கப்படுகின்றன
ஏதோ ஓர் தூரத்தில்
பாதங்கள் மட்டும்
பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன "

கணையாழி விழாவிற்கே உரித்தான அம்சம் கவியரங்கம். "முதல் உதவி செய்வோம்" எனும் பொது தலைப்பின் கீழ் கவிஞர் ந.வீ.விசயபாரதி அவர்களின் தலைமையின் கீழ் நடந்தேறியது. அதிலிருந்து சில வரிகள் மட்டும் இங்கே...

கண்ணீர் துடைப்போம்

இயலாமை
தோல்வி
இவைகளில் ஏதோ ஒன்று
இயற்கையின் படைப்பில் எதுவுமே
இங்கு சீராக இல்லை
அதானால்தான் மனிதனும்
மாறுபட்ட கோணத்தில் வாழ்ந்து …….

- கவிஞர் கோ.கண்ணன்.

காயங்களுக்கு மருந்து பூசுவோம்

உற்றுக் கவனி
உன்னை சூழந்திருப்பது மங்கிய வெளிச்சம்
இருள் என்று பிதற்றிக்கொண்டிருக்காதே
அடிபட்ட கணங்களை
ஆழமாக துடைத்தெடுத்து
அவளுக்கென்று காத்திருக்கும்
பல ஆச்சர்யங்களை
பரிச்சயமாக்க மருந்தாக்குவோம்

- கவிஞர் சுகுணா பாஸ்கர்.

பூத்தூவி வரவேற்போம்

நலம் கருதாமல்
நாளும் நட்பு செய்யும்
நயவஞ்ச கமில்லாத
நல்ல உள்ளங்களை
நட்பு பூத்தூவி வரவேற்போம்

- கவிஞர் கலையரசி செந்தில் குமார்.

புன்னகையை புரிய வைப்போம்

இதயக் கதவை
திறக்கும் சாவி புன்னகை
சறுகுகள் கூட
மரங்கள் பூமிக்கு அனுப்பும்
புன்னகை முத்தங்கள்
புன்னகை என்பது
உலக மொழி

-கவிஞர் பாலு மணிமாறன்

இடையிடையே கவிஞர்களின் கவிதையின் செறிவினை தனக்கே உரிய அந்த துள்ளலில் சொல்லிச் சென்ற கவிஞர் ந.வீ.விசயபாரதியின் சில வரிகள்

அடிமை இந்தியாவை
சுதந்திர இந்தியாவாக மீட்டெடுக்க
சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய
விடுதலை வேள்விக்கு
களமும் பலமும் பணமும் தந்து
இந்த சிங்கப்பூர் மண் செய்த
முதல் உதவிதான்
இந்த பூமியின் புகழுக்கெல்லாம்
உச்சம் என்று
உரத்துச் சொல்வேன்

விழாவின் தொடக்க உரையை "புதிய நிலா" பத்திரிக்கையின் ஆசிரியர் ஜகாங்கீர் அவர்கள் நிகழ்த்தினார். இவரது பேச்சு அனைவரையும் கவரும் ஒரு அம்சம் பல்வேறு கவிதை , கவிஞர் என்று உதாரணப்படுத்தி சிங்கப்பூர் கவிதை உலகத்தரத்துடன் போட்டி போடுகின்றன. அச்சூழலை ஏற்படுத்தியும் இருக்கிறது என்றார்.

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் புதுமைத்தேனீ அன்பழகன் அவர்கள் இந்த ஆண்டின் கணையாழி விழா நாயகன் எழுத்தாளர் பி.பி.காந்தம் என்றார். இந்த ஆண்டின் சிங்கப்பூர் கணையாழி'2007 விருது எழுத்தாளர் பி.பி.காந்தம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. யார் இந்த காந்தம்?  அனைவருக்கும் தெரிந்தவராயிருப்பினும் ,தெரியாத ஒரு சிலருக்காக அவரைப் பற்றிய சிறு குறிப்பை உங்கள் முன்...

ஆங்கிலம் ஜப்பான் சீனம் மலாய் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புலமை பெற்று பல்வேறு நிகழ்வுகளில் மொழி பெயர்பாளராக இருந்தவர் சீனச் சிறுகதைகள், ஆங்கில கவிதைகள், ஆங்கில நூல்கள் என்று மொழி பெயர்த்து புத்தகமாக வெளியிட்டது. அண்ணாவின் சிறுகதையை நாடகவடிவில் இயற்றி அரங்கேற்றம் செய்தது, பத்திரிக்கை ஆசிரியர், I.N.A தேசிய பணியில் பணிபுரிந்து பின் காவல் துறையில் பணியாற்றியவர். தூரதேசங்களில் சுகமான பயணங்கள் எனும் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களையும் இயற்றி வெளியிட்டது பல்வேறு தமிழ் மற்றும் சழுக அமைப்புகளில் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை ஏற்ற இந்திய கலைஞர் சங்கத்தின் கலை காவலர் பட்டம் வென்று 78 வயதினை எட்டியவர், இந்த எழுத்தாளர் பி.பி.காந்தம்.

சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ந.வரபிரசாத் கலந்து கொண்டு சிறப்பித்தார். கவிஞர் மாதங்கி , எழுத்தாளர்கள் சிங்கப்பூர் சித்தார்த்தன், ஜே.எம்.சாலி இளங்கண்ணன், ஜெயந்தி சங்கர், லெட்சுமி, ஒலி 96.8 – ன் செய்தி பிரிவின் பொன்-மகாலிங்கம், முனைவர் ரெத்தின வெங்கடேசன், தினமலர் நிருபர் புருசோத்தமன், சமூக ஆர்வலர் பிரவின்குமார், மேடைப் பேச்சளார்கள் சிவக்குமார், ஸ்டாலின், கவிமாலை கவிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வினை சிறப்பாக ஒளிப்பதிவாளர், பேச்சாளர் எம்.சே.பிரசாத் பதிவு செய்தார்.

பாண்டித்துரை அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கட்டுரைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.