|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற |
|
a |
|
கட்டுரை-28 பிரம்மாவிற்கு எப்போது புத்தாண்டு வரும்?
ஜனவரி துவங்கி டிசம்பர் வரை முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள் கடந்து விட்டால் மீண்டும் ஜனவரி முதல் தேதி ஆங்கிலப் புத்தாண்டாகி விடுகிறது. இதுபோல் தமிழ் மாதம் சித்திரை துவங்கி பங்குனி முடிந்து விட்டால் தமிழ்ப் புத்தாண்டு வந்து விடுகிறது. இப்படி உலகில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கணக்கில் புத்தாண்டு கொண்டாடி வருகின்றனர். மனிதர்கள் இப்படி வருடக்கணக்கு வைத்திருக்கும் போது, இந்துமதக் கடவுள்களுக்கும் தனியாக வருடக்கணக்கு இருக்கிறது. அந்தக் கணக்கின்படி படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கு புத்தாண்டு எப்போது வரும் தெரியுமா?
நிமிஷம் பதினைந்து கொண்டது ஒரு காஷ்டை. -இப்படி சதுர்யுகம் ஆயிரம் திரும்பினால், பிரம்மாவுக்கு ஒரு பகலாகும். பின்னும் ஆயிரம் திரும்பினால் ஒரு ராத்திரியாகும். ஆகவே இரண்டாயிரஞ் சதுர்யுகங்கள் கொண்டது பிரம்மாவிற்கு ஒரு நாளாகும். இந்த நாள் முப்பது கொண்டது ஒரு மாசம். இந்த மாசம் பன்னிரண்டு கொண்டது ஒரு வருஷம். (பிரம்மாவிற்கு இப்போதுதான் புத்தாண்டு வரும்!) இந்த வருஷம் நூறானால் பிரம்மாவின் ஆயுசு முடியும். இவ்வியல்புடைய பிரம்மாக்கள் எண்ணில்லாதவர்கள் பிறந்திருக்கிறார்கள். இறந்திருக்கிறார்கள். பிரம்மாவினுடைய ஆயுசு பரமெனப்படும். அதில் பாதியாகிய ஐம்பது வருஷம் பார்த்தமென்று சொல்லப்படும். பிரம்மாவின் பகலாகிய ஆயிரள் சதுர்யுகத்திலே பதினான்கு மநுக்கள் அதிகாரம் பண்ணுவார்கள். அவர்கள் பெயர் சுவாயம்புவர், சுவாரோசிஷர், ஒளத்தமர், தாமசர், ரைவதர், சாக்ஷீஷவர், வைவஸ்தர், சூரியசாவர்ணி, தக்ஷசாவர்ணி, பிரமசாவர்ணி, தருமசாவர்ணி, ருத்திரசாவர்ணி, ரோச்சியர், பாவியர் என்பவைகளாம். ஒவ்வொரு மநுவந்தரத்துக்கு எழுபத்தொரு சதுர்யுகமாகும். எழுபத்தொரு சதுர்யுகம், தேவமானத்தினாலே எட்டு லக்ஷத்தைம்பத்தீராயிரம் வருஷங்களாம். மனுஷியமானத்தினாலே முப்பது கோடியே அறுபத்தேழு லக்ஷத்திருபதினாயிரம் வருஷங்களாம். ஒரு மநுவந்தரத்துக்கு எழுபத்தொரு சதுர்யுகமாகப் பதினான்கு மநுவந்தரத்துக்கும் தொளாயிரத்துத் தொண்ணூற்று நான்கு சதுர்யமுகமாகும். பிரம்மாவின் பகலிலே மிஞ்சிய சதுர்யுகம் ஆறு. இப்படிப் பதினான்கு மநுவந்தரங்களானால், பிரம்மாவிற்கு ஒரு பகலாகும். இதன் முடிவிலே தினப்பிரளயம் உண்டாகும். அப்பொழுது பிரம்மா அப்பகலளவினதாகிய இராத்திரியிலே யோக நித்திரை செய்வர். இப்படி ஆயிரஞ் சதுர்யுகவளவையுடைய இராத்திரி கடந்த பின்பு பிரம்மா, படைத்தற் தொழில் செய்வார். பிரம்மாவுக்கு ஒரு பகல் ஒரு கற்பமெனப்படும். கற்பமாவது சிருட்டி முதற் பிரளயமிறுதியாகிய காலம். ஒரு கற்பத்துக்கு மனுஷ வருஷம் நானூற்று முப்பத்திரண்டு கோடி. பிரம்மாவினுடைய ஒர பகலிலே பதினான்கு இந்திரர்கள் இறப்பார்கள். ஒரு மாசத்திலே நானூற்றிருபது இந்திரர்கள் இறப்பார்கள். ஒரு வருஷத்திலே ஐயாயிரத்து நாற்பது இந்திரர்கள் இறப்பார்கள். பிரம்மாவுடைய ஆயுசுள்ளே ஐந்து லக்ஷத்து நாற்பதினாயிரம் இந்திரர்கள் இறப்பார்கள். தற்காலத்தில் இருக்கின்ற பிரம்மாவிற்கு முதற்பராத்தமாகிய ஐம்பது வயசுஞ் சென்றன. இப்போது நடப்பது இரண்டாம் பரார்த்தத்தில் முதல் வருஷத்து முதல் வருஷத்திலே முதற்தினம். இது சுவேதவராக கற்பம் எனப்படும். பிரளய சலத்தில் முழுகியிருந்த பூமியை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவங்கொண்டு மேலே எடுத்த கற்பமாதலிற் சுவேவதராக கற்பமெனப்பட்டது. இத்தினத்திலே சுவாயம்புவமநு, சுவாரோசிஷ்மநு, ஒளத்தமமநு, தாமசமநு, ரைவதமநு, சாக்ஷீஷமநு என்னும் மநுக்கள் இறந்து போனார்கள். இப்போது ஏழாவது மநுவாகிய வைவஸ்வத மநுவினுடைய காலம் நடக்கிறது. இவருடைய காலத்திலே இருபத்தேழு சதுர்யுகங்கள் சென்றன. இப்பொழுது இருபத்தெட்டாவது சதுர்யுகத்துக் கலியுகம் நடக்கிறது. நன்றி: பாலபாடம்-நான்காம் புத்தகம்
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.