|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற |
|
a |
|
கட்டுரை-35 அடையாளமாகும் ஆபரணங்கள் -கிருஷ்ணன், சிங்கப்பூர்.
நகை மோகம் நங்கையரை மட்டுமின்றி இன்று ஆடவரையும் ஆட்டிப்படைக்கிறது.
பொட்டுத் தங்கம் கூட போடாத நிலையில் பூவையரின்
அங்கங்கள் மூலியாக அழுது வடிவது போல் தெரிவது என்னவோ உண்மைதான். ஆனால் உரிய
அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயவங்கள் புதுப்பொலிவில் "நகை"ப்பது போலத்
தோன்றுவதாலோ என்னவோ, நம் ஆன்றோர்கள் அந்த அணிகளுக்கு "நகை" என்னும்
பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்கள். அணி என்னும் சொல்லும் "அணிதல்" மற்றும்
அலங்கரித்தல் என்னும் இரு பொருள் தந்து நகைகளுக்கு மறு பெயராக விளங்குகிறது.
இந்தியாவில், தமிழ்நாட்டில் பல பெண்களை முதிர்கன்னியாக்கி, வனிதையரை வதைக்கும்
இந்த வரதட்சணை கொடுமையில் முக்கிய இடமும், பங்கேற்பதும் இந்த நகை என்றால் அது
மிகையான நகையல்ல. சரி... இந்த நகைகள் தோன்றின வரலாறும் தொன்மையும் பார்த்தால்
சுவையும் வாய்ந்தது. ஆயிழை =ஆய் + இழை - ஆராய்ந்து செய்த ஆபரணம். அணியிழை = அழகிய ஆபரணம் -என்பன போன்ற இலக்கிய வழக்கு சொற்கள் இதனை உறுதி செய்கின்றன. இதே முறையில் முறுக்கிய கயிறு என்னும் பொருள் தரும் "வடம்" என்னும் தமிழ்ச் சொல், பழங்காலத்தில் கயிற்றில் உருவான ஆபரணங்களைக் குறித்து நின்றது. இன்று பொற்கம்பிகள் முறுக்கி செய்த ஒருவகை அணிகலனுக்கு "வடம்" என்னும் அந்த பழம் பெயர் வழங்குவதை அறிவோம். அடையாளத்திற்காக தோன்றிய அணிகள் அக்கால மக்கள் செயற்கரிய ஒரு செயலை செய்து முடிக்க உறுதி பூணுங்கால், அதன் நினைப்பு எப்போது தமக்கிருக்க வேண்டும் என்ற குறிக்கோளில் தம் முன்னங்கைகளில் "கங்கணம்" என்னும் ஒரு வகை வளையத்தை அணிந்தனர். இன்றும் கூட "ஒரு காரியத்தை செய்து முடிப்பேன்" என்று அக்கருமத்திலேயே கண்ணாக இருப்பார்கள். அவர் கையில் எதுவும் கட்டாவிடினும் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார் என்று குறிப்பிடுகிறோம் இல்லையா? அந்த கங்கணத்தின் மறு வார்ப்பு தான் பின்னால் உருவான காபு, கடகம், வளையல், வங்கி போன்ற கையணிகள். பண்பாடத காட்டுப்பாதைகளில் படுத்து உறங்கும் பாம்பு போன்ற நச்சுப்பிராணிகளில் அரவம் கேட்டு விலகவும், புள்ளினங்கள் காலடியோசை கேட்ட மாத்திரம் பயந்தோடவும் அக்கால ஆடவரும் மகளிரும் கால்களில் அணிந்திருக்கும் அணிகலன் சுழலும், தண்டையும், சிலம்பும் போன்றவை. இன்று எல்லோருமே அணியும் மோதிரத்தின் முன்னோடிதான் பழைய கணையாழி. அன்றைய அரச குடும்பத்தாரும், அரச கட்டளையை நிறைவேற்றும் அமைச்சர், தளபதி, தூதர், ஒற்றர் போன்ற பொறுப்பான பதவியினரும் மட்டுமே கணையாழி அணிவர். ஆழி என்பதற்கு "சக்கரம்"என்று அர்த்தம். கண்ணபிரானது சக்கராயுதம் போல அரசனின் ஆணை சக்கரம் அவனது ஆட்சி எல்லைக்குள் விரைந்து பாயும் என்பதால், மன்னனின் ஆணையை செயல்படுத்தும் அதிகாரிகள் இன்றைய அடையாள அட்டைகள் போல அவற்றைப் பயன்படுத்தினர். பின்னாளில் விரலுக்கு அழகு சேர்க்க விரும்பிய எல்லோருமே அணியத் தொடங்கியதும் அது மோதிரமாகி விட்டது. அங்கமெல்லாம் தங்கமாக மின்னவேண்டும் என்ற ஆபரண மோகம் சங்க காலத்திலேயே மங்கையர் மனத்தில் புகுந்துவிட்டது போலும். கால் விரலில் அணியும் மெட்டி முதல் சுருங்கூந்தல் வகிட்டில் தொங்கும் நெற்றிச்சுட்டி வரை என்று பாவலர்கள் அணிகளின் பெயரால் ஐம்பெருங்காப்பியங்களை ஆக்கித்தரும் அளவுக்கு அன்றே நகை மோகம் இருந்திருக்கிறது. அயல் நாடுகளில் அந்நிய செலாவணிக்கே பயன்படும் தங்கம் ஆடம்பர சின்னங்களாய் நம்மவர்கள் அங்கங்களில் அடைந்து கிடக்கின்றன. '' நான் விரும்புவதெல்லாம் அணிகலன் ஆடம்பரமின்றி அசோக வனத்தில் இருந்த சீதையைத்தான்'' என்ற அண்ணல் காந்தியின் ஆதங்கத்தை நாம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம். இன்றைய நவநாகரீக அணிமணிகலனுக்கு நமது கோவிலுள்ள சிலைக்கு அணிவிக்கப்பட்ட நகைகளின் மறுபதிப்பு கூட கூறலாம். " கோவில்களுள் கோவில்" என்றும் "தேவாலய சக்கரவர்த்தி" என்றும் "தென்திசை மேரு" என்றும் அழைக்கப்படும் இராஜ ராஜீசுவரம் கோவிலை எழுப்பியவர் முதலாம் இராஜராஜன். இந்தப் பேரரசர் ஒரு பேராற்றலின் மொத்த உரு. இவருடைய 29 ஆண்டு கால ஆட்சியில் 20 ஆண்டுகள் பேரரசை விரிவடையச் செய்வதிலேயே கழிந்தன. கடைசி பத்து ஆண்டுகள் இவர் கோவில் கட்டுவதிலும், கலை வளர்ப்பதிலும் கவனத்தை செலுத்தினார். இந்தக் கால கட்டத்தில்தான் தமிழரின் கலைகள் வளர்ச்சியடைந்தன. காலம் காலமாக இருந்து வந்த சிற்ப, கட்டட அணுகு முறைகளில் மாறுதல் வந்தன. உலோகத்தை உருக்கி சிலைகள் செய்யும் கலை விரிவடைந்ததும் இந்த மாமன்னரின் கடைசி பத்து ஆண்டு கால ஆட்சிதான். 52 கோவில்கள் கட்டப்பட்டன. 66 படிமங்கள். அவற்றில் இராஜ ராஜன் அளித்தவை 23. தஞ்சை இராஜராஜீசுவரம் கோவிலின் சுவர்களில் உள்ள கல் வெட்டுக்களின் வழியே அக்காலத்தில் பெண்டிரும் ஆண் மக்களும் அணிகலன்கள் பூணுவதில் இப்போது போல் அப்போது மிகவும் ஆர்வம் கொண்டிருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அப்போது அணிந்து மகிழ்ந்த நகைகளின் மாதிரியில் தானே கோவிலுக்கு அணிகலன்களை அளித்திருக்க முடியும்? அதனால் கல் வெட்டுகளில் காணப்படும் நகைகள் அந்த நாள் நடைமுறைப் பாணியில் இருந்தவை எனக் கொள்ளலாம். கல்வெட்டுகளின் படி அப்போது பயன்பாட்டில் இருந்து கோவிலுக்கு அளிக்கப்பட்ட சில நகைகளின் பெயர்கள் :-
என்கிறது கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள பேரரசர்
இராஜ ராஜனின் ஆணை. இதில் சிறப்பு என்ன வெனில் ஒவ்வொரு அணிகலனின் முழுவிபரமும்
குறிக்கப்பட்டுள்ளது. நகையின் எடை, அது செய்யப்பட்ட தன்மை, அதில்
பொருத்தியிருக்கும் முத்து, பவளம், வைரம் போன்றவற்றின் விபரம், அதன் மாதிரி
ஆகிய எல்லாம் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக பேரரசர்
இராஜராஜன், ஒரு தெய்வத்திற்கு 16 தங்க வளையல்களை அளித்திருந்தார். அவை
ஒவ்வொன்றின் எடை ஐந்து கழஞ்சி ஆறு மஞ்சடி. ஒவ்வொரு வளையலிலும் ஏறத்தாழ 316
முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன அவற்றின் எடை 155 கல். இந்த பதினாறு
வளையல்களின் மொத்த மதிப்பு 403 காசுகள். பேரரசரின் பட்டத்து அரசி லோக மகாதேவி
13 வகை நகைகள் அளித்திருந்தார். அவற்றில் 471 அணிகலன்களில் பயன்படுத்தப்பட்ட தங்கம், முத்து போன்றவை எப்படி எடை போடப்பட்டன என்ற செய்திகளும் தரப்பட்டுள்ளன. சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட ''குடிஞைக்கல்'' முறையில் ''ஆடவல்லான் மேரு விடங்கன்'' என்ற பெயர் கொண்ட கல்லாலும் எடை போடப்பட்டன. அணிகலன்களை நிறுக்கும்போது, நகைகளின் சரடு, சட்டம், செப்பாணி, அரக்கு ஆகியவையும் நகைகளின் பகுதிகளாகவே கொண்டு எடை போடப்பட்டன என்கின்றன கல்வெட்டுகள். தங்கத்தின் மாற்று அளவிடப்பட்டது பற்றிய சுவையான செய்தியும் காணப்படுகிறது. பேரரசர் அளித்த பொன் நகையில் தரத்திற்கு கால் மாற்று குறைவாகவே இருந்ததாம்.
பயன் படுத்தப்பட்ட முத்துக்களில் 23 வகையும் இரத்தினங்களில் 11 வகையும், வைரங்களில் 11 இருந்தன என்று தெரிகிறது. சில நகைளின் பயன்பாடு இப்போது வழக்கில் இல்லாது போய்விட்டது. இப்படி மிகுந்த இறை உணர்வுடனும் கலைச் சிந்தையுடனும் உருவாக்கப்பட்ட படிமங்களும் அவற்றிற்கு அணிவித்து அழகு பார்க்க அளிக்கப்பட்ட அணிகலன்களும் தற்போது உலகின் எந்தக் கோடியில் உள்ளனவோ... தெரியவில்லை. பெண்கள் ஏன் நகைகளை குறிப்பாக தங்க நகைகளை, ஆபரணங்களை விரும்பி அணிகிறார்கள்.? முதலில் ஒரு பாலியல் ஆய்வாளர் சொல்வதைக் காண்போம் ஆதி காலம் தொட்டே பெண்களின் கவர்ச்சிரமான உடல் அம்சங்களை குறிப்பால் உணர்த்தி ஆண்களின் கவனத்தை கவர்ந்து அவர்களை மகிழ்விப்பதற்காக ஆடை அணிகலன்களாக பெண்கள் ஆபரங்களை அணிகிறார்கள். பெண்கள் ஆபரணங்கள் அணிவது ஆண்களுக்குத்தான்.
பெண்கள் அணியும் ஒட்டியாணம் அவர்களுடைய
குறுகலான இடையை வெளிப்படுத்தும். கழுத்தில் அணியும் சங்கிலி, நெக்லஸ் போன்றவை
பெண்களின் மார்பழகை உயர்த்துவதுடன் மார்பு மேட்டின் கவர்ச்சியையும்
வெளிப்படுத்த உதவுகிறது. அதேபோல், காதணி கவர்ச்சிகரமான காதமைப்பையும், மூக்கு
அணிகள் மூக்கின் அழகை எடுத்துக் காட்டவும் உதவுகிறது. பெண்களின் கவர்ச்சிமிக்க
பகுதியில் கால் பாதங்கள் முக்கியமானவைகள் அதனால்தான் சிலம்பு, கொலுசு, மெட்டி
இவற்றை அணிந்து ஆண்களின் கவனத்தை கவர்கிறார்கள் அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பப்பைக்கு செல்கிறது. பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும் இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.
கொலுசு கொஞ்சம் விவகாரமான விஷயம்.
மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது]
உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ] என்கிறார்கள். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டு போகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும். தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.
தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின்
பெயர்):-
2. காதணி :-
3. கழுத்தணிகள்:-
4. புய அணிகலன்கள்:--
5. கை அணிகலன்:- (குறிப்பு உதவி & நன்றி: தமிழ் நாட்டு அணிகலன், சாத்தான் குளம் அ. இராகவன்)
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.