|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற |
|
a |
|
கட்டுரை-36 மனமும் தியானமும் -கிருஷ்ணன், சிங்கப்பூர்.
அலைந்து அலைந்து களைத்துக் கிடக்கிறது மனித மனம். எதற்காக என்றே தெரியாத, காட்டு நாய்த்தனம்...! வன்மம், கோபம், ஏமாற்றம், விரக்தி, ஆசை, கவலை, இன்பம், சோகம், மகிழ்ச்சி என்றெல்லாம் மாறி மாறி மோதிய அலையில், மனதின் ஓரங்களில் கப்பிக் கிடக்கிறது உப்புப்பாளங்கள். அடித்தவனை கடிக்கப் பார்க்கும் ஆவேசம்- அறியாமல், காலை மிதித்தவனை நசுக்கி வைக்கும் மிருகரோஷம் மண்டிக் கிடக்கிறது. இதிலிருந்து எப்படி விடுபடப் போகிறான் மனிதன் ?
விடுபடுவதையோ, விரயப்படுவதையோ உணராத உன்மத்த
மனம்... 'சுய அறிதல்' இன்றி, மனம் இன்றி கரைந்து கொண்டிருத்தலைத் தடுத்துக் கரை
சேர வழி காணவே இருப்பது பிறவிப்பயன்.....!
ஐம்புலன்களும் கட்டவிழ்ந்து அலைகிறது. அதற்கு
அடிமையாகி இழுத்த இழுப்புக்கெல்லாம் இணங்கிக் கிடக்கிறான். பேராசையின் விளைவால்,
தனது ஒவ்வொரு குற்றத்தையும் நியாயப்படுத்துகிறான். இதிலிருந்து விடுபட, தீய
செயல்- தீய எண்ணங்களில் இருந்து 'விடுதலை' பெற வேண்டும். அதற்கு தியானம் அவசியம்.
தியானம் என்றால் என்ன ? அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய இயற்கை வளத்தை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம். எதிர்மறையான எண்ணங்களில் இருந்து நம்மை விடுத்து - நம்மிலிருந்தே நம்மை விடுவித்து சுகந்திரமான ஆனந்தத்தை அனுபவிப்பதே தியானம். ஒவ்வொருவரும் ஓர் ஆன்மா என்பதை உணர வேண்டும். அந்த ஆன்மாவில் தெய்வீக ஒளிப் புள்ளியாய் புறப்படவேண்டும். அந்த ஆன்மீக ஒளியே, மனித சமுதாயத்தின் பொற்காலமாகும். மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும் என்பதில் ஐயமில்லை. மனம் பண்பட வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும் முறையாக ஈடுபட்டு வரவேண்டும். மனம் சீர் பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன. புலன்கள் அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் என்பதும் சாதாரண வெற்றியல்ல.
மனம் எதை ஆழ்ந்து நினைக்கிறதோ அதன்படியே
குணச்சித்திரம் பதிவு ஆகிவிடும். '' எவ்வுருயிரும் எவ்வுயிரை எச்செயலை
நினைத்தால்,அதன் தன்மையாகி விடும்'' என்பதே உண்மை. மனிதன் அறிந்த ஏழு
சம்பத்துக்கள், உருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல், வலிவு,
சுகம், செல்வம் ஆகியவை. இதில் ஒன்று குறைந்தாலும் அதை மனிதன் நாடிப் பெற
வேண்டும்.
தமிழர்களின் எளிமையும், அன்பும், இனிமையும்,
வலிமையும், நீதியும், நேர்மையும் அழியா சின்னங்கள். பழந்தமிழ் மக்களின்
வாழ்க்கையும் முறைகளையும், சமுதாயப் பழக்க வழக்கங்களையும் மேல் நாட்டினர் கண்டு
ஆச்சரியமடைகிறார்கள். தியானம் என்பது நம் முன் நிலைத்துள்ள மூச்சைக் கொண்டு நமது அறிவு, சிந்தனை வேறு எங்கும் செல்லாது தூய அன்புடன் நம்முள் இறைவனை நேசிப்பதாகும். தியானம் செய்யும் போது நம்மை அறியாமல் ஒரு காந்த உஷ்ணம் ஏற்படும். அந்த உஷ்ணம் தியானத்தின் மூலம் மேலும் மேலும் பெருகும். காந்த உஷ்ணம் தசாய காந்த உஷ்ணமாக மாறி நமது சிரசில் போய் சேரும். நமது சிரசில் பல சுரப்பிகள் சுரந்து அற்புதங்கள் பல உண்டாகும். இவ்வாறு நிகழ்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை சற்று பார்ப்போம்.
மனம் சரியானால் மற்ற எல்லா விஷயங்களும் சரிவரும்
என்பதில் ஐயமில்லை. மனம் பண்பட வேண்டுமானால் அதற்கான பயிற்சியில் ஒவ்வொருவரும்
முறையாக ஈடுபட்டு வரவேண்டும். மனம் சீர்பட்டால் புலன்கள் அடக்கம் பெறுகின்றன.
புலன்கள் அடங்கியதால் மனம் நம் கைவசம் இருந்துவிடும் என்பதும் சாதாரண
வெற்றியல்ல.
இந்த மனதினைக் குறித்து தாயுமானவரின் ஒரு பாடல்:
இதன் பொருள்: மனம் கள்ளமற்று இருத்தல் வேண்டும். மாறாக மனதில் கள்ளம் புகுந்து விட்டால் மனமானது கொள்ளித் தேளினால் கொட்டப்பட்ட குரங்கினைப்போல் பின் துவளும். ஐயனே..., இறைவா...! நல்ல நிலையான குணமே இல்லாத இந்த மனமென்னும் பேய்க் குரங்கின் பின்னே என்னை மாறாத, மாளாத கவலையுடன் சுழலும்படி செய்துவிட்டாயே...! ஐயா...! அஞ்சாதே...! என்று அழைத்து அடைக்கலம் அருளக் காண்பேனோ நான்...! தியானம் என்பது நம் முன் நிலைத்துள்ள மூச்சைக் கொண்டு நமது அறிவு, சிந்தனை வேறு எங்கும் செல்லாது தூய அன்புடன் நம்முள் இறைவனை நேசிப்பதாகும். தியானம் செய்யும் போது நம்மை அறியாமல் ஒரு காந்த உஷ்ணம் ஏற்படும். அந்த உஷ்ணம் தியானத்தின் மூலம் மேலும் மேலும் பெருகும். காந்த உஷ்ணம் தசாய காந்த உஷ்ணமாக மாறி நமது சிரசில் போய் சேரும்.
தியானம் ஆறு வகைப்படும். அவைகள் :
தியானம்- 2 இரண்டாவது யோகமானது புருவ மத்தியை மையமாக கொண்டு சர்வேசுவரனாகி ஆண்டவனை மலர்ந்த தாமரை மலரின் மத்தியில் நிலை நிறுத்தி கோடி சூரிய பிரகாசமாக புருவ மத்தியில் தியானித்து ஜீவ ஒளியும் பரிசுத்த ஞானமும் பெறுவார்கள். இதையே E.S.P என்ற ஜீவ சக்தி பெறுவதற்கு உறுதுணையான தியானமாக செய்யலாம். [E.S.P என்பது EXTRA SENSE POWER என்ற அற்புத அதீத சக்தி என்று கூறப்படும்] தியானம்-3
மூன்றாவது தியானமாவது இதயக்கமலத்தின் மத்திய
ஆத்ம ஒளி பெறுவதற்கு தியானித்து நற்சிந்தை, நல்வாழ்க்கை, நல்வாக்கு
பெறக்கூடியவர்களுக்கும் ஜீவ விடுதலை பெற்று ஜீவ முக்தி பெறுவதற்கு உரியதாகும். மனதுக்கு நிம்மதியை வேண்டுகிறவர்கள் தியானத்தின் மூலமாக அந்த நிம்மதியை அடைய முடியும். உடலில் ஏற்படுகிற நோய்களையும் தியானத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும். தியான முறை என்பது தான் இணையவிருக்கும் இறைவனை அடைவதற்கு சரியான முறையாகும். நீங்கள் ஒருநாள் முழுதும் மவுனமாக இருந்து பாருங்கள். அன்று உங்கள் உள்ளம் முழுதும் சனமற்று இருப்பதை உணர்வீர்கள். இதைப்போல் நீங்கள் தியானம் ஆரம்பிக்கப்பட்டு 9 நாளில் தியானத்தின் உண்மையையும் பூரணத் தத்துவதையும் உடலில் உள்ள நோய்களிருந்தும் படிபடியாக விடுபட்டு புத்துணர்வு பெறுவதையும் 4443 நரம்பு நாடிகளும் புதுமைப் பெற்று ஒரு பூரண உற்சாகம், ஆரோக்கியம் பெறுவதை நீங்கள் உணர்வீர்கள்.
தியானம்-4 இதற்கும் இறை வழிபாட்டிற்கும் தொடர்பு இல்லை. நல்ல கொள்கைகளை கடைப் பிடித்து அன்பு இரக்கம் மேலான நற்சிந்தை கொள்வதாகும். ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு தன்னலம் கருதாத சேவையின் மூலம் இறைநிலை அடைவதாகும். இதன்படி செய்யும் தியானம் மானசீகம் வசீகரம் சர்வ வல்லமை ஆசையின்மை இவ்வுலக இன்பங்களிலிருந்து விடுதலை பெற்றவர்களுக்கு மட்டும் சித்தியாகும். இத்தகைய தியானம் சித்தியை உடையவர்களை எல்லா உயிர்களும் தொழும். உயிர் கொல்லாமை ஆத்மா ஒன்றே என்ற மனப்பக்குவம் பெறுதல்,மேலான குணங்களை இந்த புத்திமார்க்க தியானம் மிகச் சிறந்ததாகும். தியானத்தின் மூலம் தான் கண்ட அறிவு ஒளியை ஆத்மசக்தியால் கிடைத்த உண்மையின் தத்துவங்களை மக்களுக்கு போதிப்பதாகும். இதற்கு சாதி, மத பேதம் கிடையாது. தியானம்-5 இதற்கு பஞ்சம் யோகம் என்று பெயர். இது ஏகாந்தமாக இருப்பதற்கும் முழு துறவியாக இருப்பதற்கும் ஏற்றதாகும். இது முற்றிலும் துறந்த நிலையாகும்.சர்வமும் இறைவன் மயம் என்னும் சர்ணாகதி நிலை. நமக்கு மேலே இறைவன், அவன் நாலும் அறிந்த ஒருவன். நிற்பதும் நடப்பதும் - உண்பதும் உறங்குவதும் இறைவன் செயல் என்று நினைப்பவர்கள். தியானம்-6 இதற்கு சர்வாங்க யோகம் என்று பெயர். இது நோயிலிருந்து விடுபடுவதற்கும் உடலையும் மனதையும் கட்டுபாடாக வைத்துக் கொள்வதற்கும் இருதயத்தின் மத்திய பாகத்தை வைத்து ஆத்மஜோதியை உணர்ந்து அறிந்து கொள்வது இந்த தியானமாகும். இது குரு மூலம் தியானித்து சித்தி பெறுவதாகும். அட்டமா சித்திகளை தரும் கட்டுப்பாடற்று திரியும் மனதை ஒரு நிலைப்படுத்தி எண்ண அலைகளை அடக்குவது. மனம் பரிசுத்தம் நிறைந்தது. அதில் ஒரு சிறுபுள்ளி விழுந்தாலும் எண்ண அலைகளை அது மாற்றிவிடும்.
கண்ணாடி புகைபடியாது தூய்மையாக இருந்தால் அதில்
தெளிவான உருவத்தினை காண இயலும். அது தூய்மையற்றதாக இருந்தால் உருவம் தெரிவாகத்
தெரியாது. சிறிது நேரம் கண்ணை மூடி அமைதியாக இருங்கள். இயற்கை ஒடுங்குதலை
உணவீர்கள். நீங்கள் யார் என்பதை உணர ஆரம்பிப்பீர்கள். பேரானந்தத்தின் வாசல்
கதவின் திறவுகோல்தான் தியானம். மற்ற ஏனைய வழிபாடுகளைக் காட்டிலும் தியானத்துடன்
ஒப்பிடக்கூடிய வழிபாடு எதுவும் இல்லை. ஆனந்தம், ஆன்மீக உணர்வு உங்கள் ஆன்மாவில்
உள்ளது. உங்களுக்குள் மறைந்து கிடக்கும் பேரானந்தத்தை சதா சிந்தித்தும்
தியானித்தும் அறிந்துக் கொள்வதே தியானமாகும். அச்சமற்ற வாழ்வதற்கு பழகிக் கொள்ள உதவுவதுதான் தியானத்தின் சக்தியாகும். சக்தி, சித்து, பரவொளி ஆகிய அனைத்தும் உடையவர்கள் நீங்கள். தியானப் பயிற்சியில் கிடைக்கும் வெற்றியும், அந்த வெற்றியின் பின்னே நமக்கு இன்பம் தருவதாகவும், சகல விஷயங்களையும் புரிந்து கொள்ள வாய்ப்பாகவும் அமைகிறது. நுண்ணிய விஷயத்தினையும் தன் இதயத்தின் மூலமே தெளிவு படுத்திக்கொள்ள தியானத்தின் மூலம் கிடைக்கும் ஒருமுகப்பாடு துணை செய்கிறது. இன்பமும் பெருகுகிறது. மனம் நிலைபெற, இன்பம் பெற - தினமும் பத்து நிமிட மணித்துளிகளை ஒதுக்குங்கள்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.