........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

      a

கட்டுரை-4

             மடல் வடிவில் ஓர் ஒலிப்புரட்சி

                                                                                                                    -மதுமிதா.

1.'ஓ பாசிட்டிவ்' இரத்தம் உடனே வேண்டும். தகவலுக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். தொலைக்காட்சியில் அறிவிப்பு.

2.மலையடிவாரத்தில் உடல் வேதனையில் தவித்தவர் 'ஹாம்' ரேடியோ உதவியால் துரிதமாய் காப்பாற்றப்பட்டார். -வானொலி உதவி.

3."ஹலோ" "ஹலோ"

"படிச்சு முடிச்சாச்சா.எப்ப விளையாடலாம்"

"இதோ.ஒரு அவர்ல வந்துடறேன்.விளையாடலாம்"

இரு தீப்பெட்டிகளின் இடையே துளையிட்டு நூல் கோர்த்து, நூல் முடியும் தூரத்தில், இரு முனைகளிலும் இருவர் நின்று கொள்வர். ஒருவர் பேச இன்னொருவர் கேட்க என்று, முன்பு சிறுவயதில் குழந்தைகள் இப்படி பேசிதான் விளையாடுவர். இப்போதுதான் விளையாடவே நேரமில்லையே குழந்தைகளுக்கு. ஆனாலும் எத்தனையோ விளையாட்டுகள் இருக்க இதில் ஆர்வம் ஏன்? ஒருவர் பேச ஒருவர் கேட்டபின், கேட்டவர் பேச,  பேசியவர் கேட்க என சில மணிநேரங்களுக்கு இவ் விளையாட்டு தொடரும்.

மேலே கூறப்பட்ட மூன்றுமே தகவல் பரிமாற்றங்கள் தான். இவை அந்தநேர தேவைப் பறிமாற்றம் மட்டுமே தவிர பதிவு செய்து பாதுகாத்துக் கொள்ள இயலாத தகவல் பரிமாற்றங்கள். தொலைபேசி கண்டுபிடிப்பதற்குள் அலெக்ஸாண்டர் கிரஹம் பெல் அடைந்த சிரமங்கள், கடந்து வந்த அநுபவங்கள் தான் எத்தனை?

தொலைபேசி கண்டுபிடித்த காலத்தில் உபயோகித்த 'ஹலோ' வினை இன்று வரையிலும் ரிசீவரை எடுத்ததும் ஹலோ வென தொடர்ந்து சொல்லி வருகிறோம். மைக் டெஸ்ட் செய்வதற்கும் ஹலோ தான். இப்போதெல்லாம் அருகிலிருக்கும் யாரையாவது அழைத்து பேச வேண்டுமென்றாலும் ஹலோ தான்.

மார்க்கோனி வானொலி கண்டுபிடிக்கும் போது இப்போது அறிவிக்கப்படும் வானிலை அறிவிப்பை மட்டுமல்ல, சொதப்பலாய் பேசப்படும் மொழியழகையும் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார். அப்போதெல்லாம் பேசுவதாலும், கேட்பதாலுமே மனிதனால் தகவல் பரிமாறிக்கொள்ள  இயலும்.

உலகில் உயிர் தோன்றிய காலத்திலிருந்து மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும் முறை தனித் தன்மையுடையது. மனிதர்களின் தகவல் பரிமாற்றமுறை கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ச்சியடைந்து கொண்டே வந்துள்ளது. சைகையால் பேச ஆரம்பித்த மனிதன் ஒலிவடிவில் பேச ஆரம்பித்தான். பிறகு மொழி உருவானது. சித்திர வடிவில் இருந்த சங்கேத குறியீடுகள், காலப்போக்கில் எழுத்து வடிவம் பெற்றன. பல நூற்றாண்டுகளுக்கு வாய் வார்த்தையாகவே குருகுலங்களில் கல்வி கற்பிக்கப்பட்டன. அனைத்து மதங்களின் அருட்செய்திகளும் வாய் வார்த்தையாகவே அடுத்தடுத்த சந்ததியினருக்கு, உலகுக்கு சேர்க்கப்பட்டன. எழுதுகோலால் எழுத ஆரம்பித்த பின் எழுத்து வடிவில் அவை சேகரிக்கப்பட்டன.

தூரமிருக்கும் உறவினர்கள், நண்பர்களுக்கு புறாவின் கால்களில் தகவல்கள் பிணைக்கப்பட்டு அனுப்பப்பட்டன. தூதுவர்கள் குதிரைகளில் தகவல்கள் எடுத்துச் சென்றனர். காலம் மாற மாற ஓலைச் சுவடிகள், செப்பேடுகள் என்று மாறி அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் காகிதங்கள் உபயோகிக்கப்பட்டன. தபால்காரர்கள்,தொலைபேசி என்று தகவல்தொடர்பு முறை வளர்ச்சியடைந்தது. வானொலி, தொலைக்காட்சி பெட்டி இரண்டுமே செய்திகள் ஒலி, ஒளி பரப்ப மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று வாழ்வின் அத்தியாவசிய சாதனங்களாகின. செல்பேசி, பேக்ஸ், கொரியர் சேவை, வயர்லெஸ் என அனைத்து துறை சார்ந்தவர்களும்,அவரவர் வசதிக்கேற்றபடி உபயோகிக்கும் படி அறிவியல் சாதனங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அனைத்திலும் அதி அற்புத விஞ்ஞானம் அளித்த வரம் கணினி.

கணினி வந்ததும், இணையசேவை கிடைத்ததும், இத்தனை நூற்றாண்டுகள் பெற்ற விஞ்ஞான வளர்ச்சியினை விட இந்த ஐம்பதாண்டுகளுக்குள் கிடைத்த இணையிலா வளர்ச்சி. இவ்வளர்ச்சி மகுடத்தில் ஒளிசேர்க்க இன்னுமொரு ரத்தினமாய் கிடைத்துள்ளது; இருபத்தியோராம் நூற்றாண்டில் மின்வெளியில் ஒலிப்புரட்சி;  அதுதான் வாய்ஸ்ஸ்னாப் (Voice Snap) எனப்படும் மின்னஞ்சல் ஒலி பரிமாற்றம் செய்யும் அமைப்பு. இதுவரையிலும் கணினியில் மடல்கள் எழுத்துவடிவில் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன. இதனை எழுத, வாசிக்க தெரிந்தவர் மட்டுமே உபயோகிக்க இயலும்.இப்போது இந்த வாய்ஸ்ஸ்னாப் மூலமாய் ஒலி வடிவில் மடல்கள் அனுப்பலாம். வானொலி, தொலைபேசி, கணினியில் வாய்ஸ் சாட் இவையெல்லாம் கூட  ஒலி வடிவில்தானே உபயோகிக்கிறோம்.

இதற்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்?

ஆமாம். ஆனால் இவற்றுக்கும், ஒலி மடலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அவற்றில் வந்த குரலொலிகள் காற்றில் போனால் போனதுதான். ஒலி மடலிலோ கணினி மடல் போன்றே, கணினியில் ஒலிமடல்கள் பதிவு செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு விடும். ஒரு முறை பேசுகையிலேயே பதிவு செய்யப்பட்டு விடுவதால் காற்றோடு போனால் போனது தான் என்று விசனப்படத் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் நெட்டில் இல்லா சமயங்களிலும், தேவையான போது கேட்டுக் கொள்ளலாம்.

Voice Snap Software Limited (VSSL) இந்நிறுவனம் இந்தியாவில் சென்னையிலும், அமெரிக்காவிலும் (Chennai(India) and Nashua, NH (USA)) இயங்கி வருகிறது. இந்த ஒலி அஞ்சல் சாப்ட்வேரினை இணைய தளத்திலிருந்து பெறுவது எப்படி?

www.voicesnap.com சென்று பெயரைப் பதிவு செய்ய வேண்டும்.பதிவு செய்கையில், ஒரு மின்னஞ்சல் முகவரி தரவேண்டும். அந்த மின்னஞ்சல் முகவரிக்கு பாஸ்வேர்ட் அனுப்புவர். அதே மின்னஞ்சல் முகவரியே, ஒலி மடலுக்கான முகவரியாக இருக்கும். அவர்கள் பதிவு செய்த பின் அந்த இணைய தளத்திலிருந்து இலவசமாய் அவர்கள் அளிக்கும் மென்பொருளை கணினிக்கு டௌன்லோட் செய்யவேண்டும். அதில் கேட்கப்படும் இடத்தில் ஒலி மடல் முகவரி,பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லலாம். பேசி அல்லது பாடி ஒலிப்பதிவு செய்யலாம். அனுப்புவதற்கு முன் கேட்டு சரி செய்து கொள்வதற்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. சரி பார்த்ததும் மின்மடல் அனுப்புவது போன்றே ஒலிமின்மடலினை அனுப்பலாம்.பிறர் அனுப்பும் பதிலும் மின்மடல் பெறுவது போன்றே பெற்றுக் கொள்ளலாம்.

வாய்ஸ்ஸ்னேப் உபயோகிப்பாளர்கள்:

1.தென்னிந்திய கிராமம் ஒன்றில் ஒரு கலெக்டர் மக்களிடமிருந்து ஒலிமனுக்களை பெற்றுக் கொள்கிறார்.

2.ஏர்இந்தியா, இந்தியன் ஏர் லைன்ஸ் நிறுவனங்கள் உபயோகிக்கின்றனர்.

3.இந்தியாவின் முன்னணி வங்கி ஒன்று உபயோகிக்கிறது.

4.வானொலி நிலையங்கள் நேயர்களின் விமர்சனங்களை அவர்களின் குரல் வழியாக கேட்க உபயோகிக்கின்றனர்.

5.பத்திரிக்கை அலுவலகத்தில் உபயோகிக்கின்றனர்.

6.திரைப்படத்துறையினர் சிலர் உபயோகிக்கின்றனர்.

7.தனி மனிதர்கள்,தன்னார்வத்துடன் உபயோகிக்கின்றனர்.

வாய்ஸ்ஸ்னேப் யாரெல்லாம் உபயோகிக்கலாம்:

1.அரசுக்கும்,அரசு அலுவலகங்களுக்கும் மிகவும் உபயோகமாயிருக்கும். ஆசிய, ஐரோப்பிய மொழிகள் வாசிக்கத் தெரியாதவர்களும், கேட்பதன் மூலம் தங்கள் மொழிகளில் மொழியாக்க வல்லுனர்கள் கொண்டு மொழியாக்கம் செய்து பதிவு செய்து வைத்து கேட்டுக் கொள்ளலாம்.

2.விவசாயிகளுக்கு மிகவும் உபயோகமாயிருக்கும். வானொலியில், தொலைக்காட்சியில் ஒலி, ஒளிபரப்பப்படுபவை ஒருவழிப் பாதையாகவே இருக்கும். இந்த ஒலி மடல் இருவழிப்பாதை உடையது.
விவசாயிகள் வானொலியில் புதுதகவல் கேட்டவுடன் இந்த மண்னுக்கு, இந்த பருவகாலத்தில்,இந்த தாது உப்பினை நீங்கள் கூறியது போல் உபயோகிக்கலாமா என மறுபடி கேட்க இயலும். தொலைபேசியில் கேட்டால் கேட்ட கேள்வியும் பதிவாகி இருக்காது. இந்த ஒலிமடல் எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கேட்டுக் கொள்ளலாம்.

3.கவுன்சிலிங். இது மிக முக்கியமான ஒன்று.குரல்ஒலி உணர்வுகளுடன் கேட்கையில் மன ஆறுதல் உடனே கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

4.மதத் தலைவர்கள் ஆன்மீக விஷயங்களை போதிப்பதற்கு உபயோகிக்கலாம்.

5.ஆசிரியர்கள் தேர்வு பாடங்களை,மொழியியலை என மாணவர்களுக்கு அளிக்கலாம்.

6.சாப்ட்வேர் கம்பனிகள் வேறு நாடுகளில் இருக்கும் தங்கள் அலுவலர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

7.இசை ஆசிரியர்கள் வாய்ப்பாட்டு கற்றுக்கொடுக்கலாம்

8.கம்பெனி நிர்வாகிகள் எங்கிருந்தாலும்,செயலர்களுக்கு ஒலிமடல் மூலம்  பணிசெய்ய பணிக்க இயலும்.

9.மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள் தங்கள் உதவியாளர்களுக்கு அவசர தகவல் அளிக்கலாம்.

10.பார்வைக்குறைபாடுடையோருக்கு சிறந்த வரமாயிருக்கும்.

11.எந்த மொழியிலும் அனுப்பலாம் என்கையில் வாசிக்கத் தெரியாதவராக இருந்தாலும்,அனுபவ பாடங்களை உணர்வு பூர்வமாக பேசத்தெரிந்தவர்கள் பேசலாம்.

12.வெளிநாட்டிலிருக்கும் குழந்தைகள், பேரக்குழந்தைகளின் குரலை இந்தியாவிலிருந்து கேட்க சிறந்த சாதனம். தொலைபேசி அல்லது வாய்ஸ் சாட் என்றால் இருவரும் ஒரே நேரத்தில் வீட்டில் இருந்தே ஆக வேண்டும்.பேசியது பதிவும் ஆகி இருக்காது. இதில் அவரவர் நேரத்தில் பேசியதை மறுபடி மறுபடி கேட்டுக் கொள்ளலாம்.குழந்தைகளுக்கு பழமொழி,கிராமிய பாடல்கள் கற்றுத்தரலாம்.

13.ஜோசியர்கள்,ஜோசியம் பார்ப்பவர்கள் உபயோகிக்கலாம்.

14.வியாபார விஷயமாகவும் உபயோகிக்கலாம்.

15.முந்தைய,  தற்காலத்தைய எழுத்துப் படைப்புகளை ஒலிவடிவில் பாதுகாத்து வைக்கலாம்.

- இன்னும் இன்னும் வெவ்வேறுவிதமாய் பற்பல துறைகளிலும் உபயோகிக்க வாய்ப்பளிக்கும் அட்சய பாத்திரம் ஒலி மடல். மடல் வடிவில் வந்த ஒலிப்புரட்சி, ஒலி மின்மடல், இன்னும் பல புதுத் தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

முந்தைய கட்டுரைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.