|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற |
|
a |
|
கட்டுரை-64 சங்ககாலப் புலவர்கள் இரவலர்களா? -முனைவர்.சே.கல்பனா.
சங்கப் பாக்களில் புறநாறூற்றுப் பாக்களைப்
படிக்கும் பொழுது, சங்க புவலர்கள் தங்களது வாழ்க்கையை எவ்வளவு பெருமித்துடன்
வாழ்ந்துள்ளனர் எனபதை அறியலாம். பரிசு கொடுப்பவர் மன்னராக இருந்தாலும் அவர்கள்
உள்ளன்பு இல்லாமல் கொடுக்கும் பரிசினைப் பெறாது அதனை மறுக்கும் துணிவு அப்பொழுது
இருந்துள்ளது. புறநானுற்று 159 பாடலில் பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் குமணனை
அணுகி, வறுமைத் துயரால் தன்னைப் பெற்ற வயது முதிர்ந்த தாயும், அன்பான மனைவியும்,
மக்கள் செல்வங்களும் உடல் தளர்ந்து,மேனி வாடி கிடப்பதைக் கூறி, பொருள் பெற
வந்திருப்பதாகக் கூறுகின்றார். அவ்வாறு நீ தரும் பரிசு மனமகிழ்வோடு வழங்கியதாக
இருக்க வேண்டும். நீ உள்ளன்பு இல்லாமல் களிறு முதலிய பெருஞ் செல்வம் வழங்குவதைக்
காட்டிலும், மனம் விரும்பி சிறிய குன்றிமணி அளவில் பொருள் வழங்கினால் அதனை
மனமகிழ்வோடு எடுத்துச் செல்வேன் என்று கூறுகின்றார்.
இதே புலவர் இளவெளிமானின் செருக்கையும்
அறிவின்மையும், புலவர்கள் வரிசையறிந்து போற்றத் திறத்தையும் எண்ணி, - எனக் கூறி செல்கின்றார். பெருஞ்சித்திரனார் ஒருமுறை கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமானைக் காணச் செல்லுகின்றார். அதியமான் புவலர்களைப் போற்ற கூடியவன், அவர்கள் வரிசை அறிந்து பரிசு வழங்க கூடியவன் என்றாலும், புவலவர் சென்ற நேரத்தில் வேறு வேலையின் நிமித்தம் காரணமாக அப்புவலரைச் சந்திக்காமல், அவரது சிறப்பினைப் பெருமையினை அறிந்து வேறு ஒருவர் மூலமாக பரிசினை வழங்குகின்றான். அதனை விரும்பாத அப்புலவர், என்னை வந்து என் தகுதியைக் காணாமல் தந்த இப்பொருளைப் பெற்றுக் கொள்வதற்கு யான் ஒரு வணிகவழிப் பரிசிலன் அல்லேன். என்னை விரும்பி வருக என எதிர்கொண்டு, என் புலமை கண்டு, பின் எனக்கு நல்கும் பரிசு மிக சிறிதாயினும், எனக்கு அது மிக இன்பம் தருவதாக இருக்கும் என்று கூறி பரிசிலை வாங்க மறுக்கின்றார்.
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் ஒருமுறை கொடைவள்ளல் கடியநெடுவேட்டுனைக் காண செல்கின்றார், அவனோ இவரது புலமை திறத்தை எண்ணி, தன்னோடு இருக்க வேண்டும் என்ற விருப்பினால், பரிசிலை வழங்காமல் காலம் நீட்டிக்கின்றான். பரிசில் கொடுக்காமல் காலம் நீட்டிப்பதை விரும்பாத அப்புலவர் பெருமகனார், மூவேந்தர்களிடம் சென்றால் கொடையில் விருப்பின்றி, பரிசில் வேண்டி வரும் பரிசிலர்களுக்கு நீட்டித்து வழங்குவது இயல்பு. இதனை அறிந்தே எம்போலும் பரிசிலர் விருப்பின்றி வழங்குவதை விரும்புவது இல்லை. ஆகையால் விரைந்து தருவாயாக.
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.