|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற |
|
a |
|
தொடர் கட்டுரை-1. பகுதி-23
நல்ல பெயர் வாங்கலாம். -தேனி.எம்.சுப்பிரமணி.
23. எதையும் தூக்கி வீசி விடலாமா?
சிலர் இருக்கிறார்கள்
எவரையும் கண்டு கொள்வதேயில்லை. தங்களுக்கு எவருடைய உதவியும் தேவையில்லை. தம்மால்
மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்கிற தவறான எண்ணத்தில் மற்றவர்களைத்
தூக்கியெறிந்து பேசுவதுடன் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். ஆனால்
இவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை ஆக வேண்டுமென்றால், எந்த ஒரு செயலையும் செய்யத்
தயாராகி விடுகிறார்கள். எவரையும் அணுகித் தங்கள் காரியத்தைச் சாதித்துக்
கொள்கிறார்கள். அதே சமயம் அந்த வேலை முடிந்தவுடன் உதவியவர்களைக் கழற்றியும்
விட்டு விடுகிறார்கள். யாரையும் தூக்கி எறிந்து பேசி விடுகிறார்கள். சமயம்
சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தபடி தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளும் இவர்கள்
குறிப்பாக தங்களுக்குப் பயன் தருவதை மட்டுமே விரும்புகிறார்கள். தற்போது
இவர்களால் பயன் இல்லை என்று கருதுபவர்களைத் தூக்கி வீசி விடுகின்றனர்.
பின்னால் ஒரு சூழ்நிலையில் அவர்களுடைய சிறு உதவி தேவைப்படும் போது அவர்களை
வலியத் தேடிச் செல்கின்றனர். (வழிமுறைகள் வளரும்.)
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.