|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற |
|
a |
|
தொடர் கட்டுரை-2 பகுதி-6
உண்மை -வேந்தன் சரவணன். 6. களவையும் கற்று மற என்பது சரியா?
"களவும் கற்று மற"
தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப்
பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான்
பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள்
என்ன என்று காணலாம்.
கவறும் கழகமும் கையும் தருக்கி
இங்கே "கவறு" என்பது சூதாடும் கருவியையும், "கழகம்" என்பது சூதாடும் இடத்தையும் குறிக்கும். "சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல் சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்." என்பதே இக்குறளின் பொருள் ஆகும். சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த "கவறு" என்னும் சொல்லை "கற்று" என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள் கொள்ள வழிவகுத்து விட்டது.
களவுத்தொழிலைக் கையால் தான் செய்ய வேண்டும். அதேபோல் சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். "இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு" என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். அப்படியானால் சரியான பழமொழி
********* (மேலும் பல உண்மைகள் இங்கே சொல்லப்படும்)
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.