........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 517

நீ இல்லாமல்...!

இரவான வேளையிலே
இரை ஊட்ட வந்தவளே
இமைக்காமல் உன் அங்கம்
புரட்ட நினைப்பேனடி

நரை என்னில் விழுந்தாலும்
நடுனசுக்கம் கொண்டாலும்
உன்னோடு உறவாட
கண்கள் மட்டும் போதுமடி

எனைத்தீண்டு எனைத்தீண்டு
என்னைத்தொடுவதனால்
உனைத்தீண்டி அறிவமுதம்
பெற நெஞ்சம் துடிக்குதடி

காசெல்லாம் உன்னை வாங்க
வீணாகுதென்போர்க்கு - நீ
அறிவு சுகம் தருவது ஏன்
தெரியாமல் போகுதடி

பல பேரின் விடியலுக்கு
விளக்கான உன்னோடு -நான்
விளக்கேற்றி விடியும் வரை
விளையாடல் என்ன தப்பு

உன்னை என்ன செய்தாலும்
அலுக்காமல் இருக்கின்றாய்
எப்போதும் எனைத்தீண்டி
அறிக என்று சொல்கின்றாய்

இருட்டு உனக்கென்றும்
பிடிக்காத வேளையடி
வெளிச்சத்தில் உனைத்தொட்டால்
எனக்கறிவு பெருகுதடி

கண்களால் என்னை
களவாடு என்கிறாயே
கனம்முழுக்க என்னையே
மனனம்செய் என்கிறாயே

ஆனால்...
உன்னோடு எனக்கு காதல்
என்னோடு உனக்கு இல்லை
அறிவு தந்த புத்தகமே
உன்னை அப்போதும் கற்பேனே!

-கிருஷ்ணா, இலங்கை. 
 

 

 

 

 

 

m

 

கிருஷ்ணா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.