........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 529

தாய் காப்பேனடா!

காலத்தால் அழியாத காளிதேவி
உன் தாய்! வாய்மொழி கேட்பாயடா!
என்றென்றும் நிலைப்பாயடா!

சுழல்கின்ற காலத்தில்
கீழவர் மேலவர் ஆவர்
மேலவர் கீழவர் ஆவர்

இயற்கையின் விதி மகனே!
இன்னும் சிலநாள் பொறு மகனே!

ஒளியினை இருள் விழுங்கும்
ஒளிவந்தால் இருள் விலகும்
எல்லாம் என் செயலடா - மகனே
என் பக்கத்தில் இருப்பாயடா!

உனக்கொரு வாழ்வுண்டு
உன்னிடத்தில் நானுண்டு
உறுதியுடன் இருப்பாயடா - மகனே!
என்மேல் நம்பிக்கை வைப்பாயடா!

கனவில் நான் வருவேன்
கற்பன அள்ளி தருவேன்
கவிதைகள் புனைவாயடா - மகனே
உலகுக்கு சொல்வாயடா!

நானுண்டு, நீயுண்டு - நமக்கிடையில் உறவுண்டு
நல்லதே நினைப்பாயடா - மகனே
நல்லதே நடக்குமடா!

வானகத் தேவரெல்லாம் வணங்கவே வந்திடுவார்
மண்ணகப் பூக்களெல்லாம் உனக்கென பூத்திருக்கும்
புத்துணர்ச்சி கொள்வாயடா - மகனே
புதுவாழ்வு பெறுவாயடா!

அழியாத தமிழ் உண்டு
அறிந்து சொல்ல நீயுண்டு
என்றும் என் அருள் உண்டு
ஏட்டினை எடுப்பாயடா - மகனே
காவியம் படைப்பாயடா!

மனதில் என்னையே சுமந்திருக்கும் பக்தனே
கவலைகள் உனக்கேனடா!
நான் உன் நிழல்போல் வருவேனடா - மகனே
இந்த தாய் என்றும் காப்பேனடா!

-விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.