........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 547

இயேசுவை வணங்குவோம்!

எருசேல நகரத்திலே! நள்ளிரவு நேரத்திலே!
மாட்டுத்தொழுவத்திலே! மரியாளின் மணி வயிற்றிலே
சூரியனாய் வந்துதித்த தேவகுமாரனே!
உலகை உய்விக்க வந்த சுடரொளியே
இயேசு கிறிஸ்வே! வணங்குகிறோம்!

பாவிகளை ரட்சிக்கும் பரமபிதாவே!
மண்ணுயிர் மீட்கத் தன்னுயிர் ஈந்த பரம்பொருளே!
பட்டயம் எடுத்தவனுக்கு பட்டயத்தால் முடிவெனும்
பொன்மொழி உதிர்த்த உத்தமரே! வணங்குகிறோம்!

அற்ப விசுவாசிகளே! ஆட்டுமந்தையென
ஆண்டவனை உணரா பிதற்றும் பித்தர்களே!
உண்மை விசுவாசத்துடன் தேடுங்கள்
கண்டடைவீர்! வணங்குங்கள் வென்றிடுவீர்!

அனவரும் தோழமையுடன் ஒன்றுகூடி
இயேசு ஆண்டவர் முன் மண்டியிட்டு
பிதா! சுதன்! பரிசுத்த ஆவி! ஆமென்
என்று ஜெபம் செய்திடுவீர்!
அனத்தும் உணர்ந்த ஆண்டவர்
நம் பாவம் மன்னித்துக் காத்திடுவார்!

-விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.