........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 583

விரதத்தைத் தூக்கி எறி...!

விடலை நிலா நீயடியோ
வேட்டைக்காரன் நானடியோ
விருந்தெடுக்க வந்து விட்டேன்
விரதத்தைத் தூக்கி எறி...

இளவயதுக் காதல் தான்
இன்மையிலே உச்ச இன்பம்
மழலை மொழி பேசாதே
மௌனங்கள் தேவையில்லை

கனவுதனைத் தாண்டி விட்டேன்
கற்பனையும் தாண்டி விட்டேன்
கலக்கம் செய்து விட்டாய் தோழி
காதல் ஒழி எனக்குத்தாடி
நான் தொடர ஓடுகிறாய்
நாணமதைத் தெளிக்கின்றாய்
வான் நிலவு உன்னைப்போல
விடியல்வர ஓடிடுமா?

சங்கத்தமிழிலே அக ஒழுக்கம்
படித்தவளே என் உயிரே
பூவை நீ அறியாயோ ?
தங்க நிறத்தவளே
தாமரைப் பூ உதட்டவளே
எப்போதும் மங்காத சூரியனாய்

விடலை நிலா நீயடியோ
வேட்டைக்காரன் நானடியோ
விருந்தெடுக்க வந்து விட்டேன்
விரதத்தை தூக்கி எறி...

-கிருஷ்ணா, இலங்கை.

 

 

 

 

 

 

 

m

 

கிருஷ்ணா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு