........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 604

ஒரு கவிஞனின் சாபம்!

சூரியனே உடைந்து போ
ஓர் இரவு
ஓர் பகல்
இரண்டும் மரணிக்கட்டும்
நாங்கள் இருட்டுக்கும்
பகலுக்கும் சொந்தமில்லை
என்பதால்...

புயலே படை கொண்டு வா
உயரிணை
அஃறிணை
இவைகளும் அழியட்டும்
தமிழனும் அழிவதால்
அவன் தனங்களுமழிவதால்...

கடலே ஓர் நொடியால் உலகை மூடு
நிலங்களும்
மொழிகளும்
நீரில் மூழ்கட்டும்
எமக்கு ஊர் நிலமில்லையாம் -எம்
மொழிக்கோர் இடமும் இல்லையாம்
என்பதால்...

இவை எமக்கே வேண்டாம் என்றால்
உலகிற்கு மட்டும் ஏன ?
நான் சுயநல வாதி என்பதால்...
நான் தமிழன் என்பதால்...

நான் கவிஞனாக கட்டளை இடுகிறேன்
காலத்தில் இனி
நிகழ் காலம்
எதிர் காலம்
இரண்டும் மறையட்டும்
கோள்கள் அத்தனையில்
உலகம் முற்றாய் அழியட்டும்
கால் மிதிக்கக் கூட
எம் மண்ணில் உரிமை இல்லை...
ஏனென்றால்...

உலகம் உருவானதிலிருந்து
போராடும் இனம் தமிழினம் ஒன்றுதான்
ஊரை உரிமைகளைத் தொலைத்து
அலையும் இனமும் எம் இனம் ஒன்றுதான்!!

- கிருஷ்ணா, இலங்கை.     

 

 

 

 

 

 

 

m

 

கிருஷ்ணா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு