........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 616

ஞானியாகிறேன்...!

சோலை கண்டு குயிலாகிறேன்
கார்மேகம் கண்டு மயிலாகிறேன்
கனியைக் கண்டு கிளியாகிறேன்
கன்னியர கண்டு காதலாகிறேன்
கவர்ச்சி கண்டு மோகமாகிறேன்

மருந்து கண்டு நோயாகிறேன்
உணவைக் கண்டு பசியாகிறேன்
அன்பைக் கண்டு செருப்பாகிறேன்
அதிகாரம் கண்டு நெருப்பாகிறேன்
இயற்கை கண்டு கவியாகிறேன்

இறவனைக் கண்டு பக்தியாகிறேன்
மடியைக் கண்டால் குழந்தயாகிறேன்
மாங்கனி கண்டு வண்டாகிறேன்
மல்லிகை முகர்ந்து மயக்கமாகிறேன்
துவை உண்டு போதையாகிறேன்

மங்கயைக் கண்டு குமரனாகிறேன்
முனிவன் கண்டு அருளாகிறேன்
ழை கண்டு கருணையாகிறேன்
கவலை கண்டு கலக்கமாகிறேன்
எண்ணிப்பார்த்தால் குழப்பமடைகிறேன்

கண்ணாடி முன்னால் நானாகிறேன்
கடவுளை வணங்கி உறுதியடைகிறேன்
உறுதி வந்ததும் என்னையறிகிறேன்
என்னை அறிந்ததும் ஞானியாகிறேன்!

-விஷ்ணுதாசன்.    

 

 

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு