........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 645

மனிதனே நில்!

அடைப்பட்ட வேலிக்குள் - ஆட்டு
மந்தையென வாழும் மனிதர்களே
மனம் இருப்பதை மறந்து - உன்
மனசாட்சி விற்றுப் பணம் தேடும் பித்தர்களே
சூது, பொறாமை, காமம், வஞ்சம்
எல்லாம் ஒவ்வொருவனில் தஞ்சம்
ஏய்த்துப் பிழைப்பது, இரக்கமின்றி
இறைவனைப் பழிப்பது - காணும்
பெண்ணையெல்லாம் பள்ளிக்கழைப்பது
கூழைக்கும்பிடு போட்டுக் குழவை
பின்னாடி சென்று முதுகில் குத்து வை
பதவி தேடிக் காலை பிடிப்பது - உன்
உதவி தேடி வருவோரை உதைப்பது
பணம் பணம் பணம் இதுவே
உன் லட்சியம் , அதனால்
மனிதனுக்கு மனிதன் அலட்சியம்
மனசாட்சி விற்று
பொய்சாட்சி கூறுவான் கோர்ட்டிலே
மாங்கல்யம் விற்றுக் குடித்துவிட்டுப்
புரளுவான் ரோட்டிலே!
பணம் தேடியலைவான் கிடைத்தாலும்
திருப்தி அடையான்!
நாடு என்பான் நம்மால் ஆனதென்பான்
அத்தனையும் விளம்பரம் - வீட்டில்
சென்று நான் என்பான்!
நமக்கு நாமே நடத்தும்
கண்கட்டு வித்தையிது
காக்கிச் சட்டையில் களங்கம்
காவியுடையும் அசுத்தம்
வெள்ளயுடையும் கபடம் - தேடுகிறேன்
மனிதனத்தான்!
சமுதாய அந்தஸ்து போலிக்கவுரவம் தேடி
அடுத்தவனை ஏமாற்றி
இவனை இவனே ஏமாற்றி
வாழ்க்கையில் வசதி பெற விளம்பரம் பெற
பொருள் குவிக்க
அங்குமிங்கும் ஓடி, ஆடி முடிவில்
எஞ்ஞானமுமின்றி விஞ்ஞானவுலகில்
முட்டாளாய் மெய்ஞானவுலகில்
பாவியாய், ஆவியாய் கலக்கிறார்!

- விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு