........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 671

தாயே என்னைக் காத்தாயே!

உருவம் கொடுத்த தாயே -உன்
அன்பைப் பாடுகின்றேன்
உலகைக் காண வைத்து -என்
வாழ்வை திறந்து வைத்தாய் -என்
உருவம் அழியும் வரையில்
உன் அன்பும் அழியாதம்மா
உன் பாலின் வலுவே என்னை
இன்று வாழ வைக்குதே பலமா
இரவில் விழித்து என்னை
மடியில் உறங்க வைத்தாய்
நிலவைக் காட்டி நீயே -நான்
வளர உணவைத் தந்தாய்
மொழியை கற்று தந்தாய்
உலகம் வியக்க வைத்தாய் -எனக்கு
காய்ச்சல் வந்த போதும் உன் கண்கள்
கலங்குமம்மா-நான்
காலம் முழுக்க உனக்கு
கடமைப் பட்டவன் தாயே
மொழிகள் எதுவும் இல்லை
உன் புகழைப் பாட தாயே -உன்
உடலை உருக்கிச் சுமந்தாய் -என்
உடலும் உனதேயம்மா
ஏழு பிறப்பும் எடுப்பேன் அதில்
நீதான் எனக்கு தாயே!
உந்தன் சொல்லுக்கடிமையாய்
நான் என்றும் வாழ்வேன் தாயே!!

-கிருஷ்ணா, யாழ்ப்பாணம், இலங்கை.

 

 

 

 

 

 

 

m

 

கிருஷ்ணா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு