........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 692

ஊமை நாடகம் ஏனோ?

உனக்கென வாழ்கிறேன் நான்
என் சுவாசம் நீயின்றி ஏது?
பூ கொண்டு வருவேன்
உன் கூந்தல் தொடுப்பேன்
மலராதபூ என்று மலரும்!

கண்முன் நின்றும் கண்டுகொள்ளவில்லை
மனதில் இருந்தும் மனம்வைக்கவில்லை
உண்மை காதல் உலகில் வாழும்
நாமும் வாழ்வோம் பல்லாண்டு!

ஓடோடி வந்தேன் நீ ஒளிந்தாய்
நாடோடியானேன் நகை செய்தாய்
மறைவாய் மனதில் ரசித்தேன்
கரைவாயென காதல்கணை தொடுத்தேன்!

உள்ளம் உறங்கும் பெண்ணே
ஊமை நாடகம் ஏனோ?

-விஷ்ணுதாசன்.

 

 

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு