|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
| 1 |
|
குறும்பு-1 கொசு வெடிக் குறும்பு
புதிதாகத் துவங்கப்பட்ட அந்தக் கல்லூரிக்கு முதல் சேர்க்கையில் சேர்ந்திருந்த எங்களுக்கு கல்லூரியில் பல்கலைக்கழகத் தேர்வு தவிர வாரத்திற்கு ஒரு தேர்வு, மாதத்திற்கு ஒரு தேர்வு என்று அடிக்கடி ஏதாவது தேர்வுகளை வைத்துக் கொண்டிருந்தனர். கல்லூரி என்றால் சந்தோசமாக இருக்கலாம் என்று வந்தால் இங்கும் +2 வகுப்புகளைப் போல் அடிக்கடி தேர்வு வைத்துக் கொண்டிருப்பது, மாணவிகளுக்கு எப்படி இருந்ததோ தெரியாது. ஆனால், மாணவர்களாகிய எங்களுக்கு அது ஒரு பெரும் தொல்லையாகவே இருந்தது. நானும் என்னுடன் விடுதியில் தங்கியிருந்த சில மாணவர்களும் இரவு நேரத்தில் இதற்கு ஒரு முடிவு கட்டலாம் என்று எண்ணினோம். தேர்வு நேரத்தில் தேர்வு அறையிலேயே வெடிகளை வெடிக்கச் செய்வது என்று வேடிக்கையாக ஒரு முடிவு எடுத்தோம். இந்த முடிவை எப்படிச் செயல்படுத்துவது? என்று நாங்கள் யோசித்த போது ஒரு வழியும் பிடிபடவில்லை. அறைக்குள் வெடியை வெடிக்கச் செய்யும் போது நாம்தான் வெடியை வைத்தோம் என்று தெரியாமல் எப்படி செய்வது? என்று சிந்தித்த எங்களுக்கு எங்கள் அறையில் இருந்த கொசு வர்த்திச் சுருள் உதவியது. கொசுவர்த்திச் சுருள் இரண்டு மணி நேரம் வரை எரியக் கூடிய அளவில் அளவு குறைக்கப்பட்டு, கடைசிப் பகுதியில் சிறிய வெடிச்சரம் இணைக்கப் பட்டது. மதியம் சாப்பாட்டு வேளையில் தேர்வுக்கான அறையில் வெடி இணைக்கப்பட்ட கொசுவர்த்தியை ஒரு ஓரமாகப் பற்ற வைத்து விட்டு வந்து விட்டோம். சாப்பிட்டு விட்டு தேர்வு எழுதிக் கொண்டிருந்தோம். ஒரு மணி நேரத்தில் வெடிகள் வெடிக்கத் துவங்கியது. அறையிலிருந்த விரிவுரையாளர் உட்பட மாணவ, மாணவியர்கள் அனைவரும் வெளியேறி ஓடினர். நாங்களும் அந்த அறையிலிருந்து மற்றவர்களைப் போலவே எதுவும் தெரியாதது போல் வெளியேறினோம். முன்னெச்சரிக்கையாக வெளியேறுவதற்கு முன்பு அந்த கொசுவர்த்தி ஸ்டாண்டை சன்னல் வழியாக வெளியேத் தூக்கி எறிந்து விட்டோம். அதன் பிறகு இது குறித்து விசாரணை நடந்தது. வெடி வைத்தது யார்? என்று கடைசி வரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நாங்கள் செய்த இந்தக் குறும்பை இதுவரை யாரிடமும் சொல்லாமல் இருந்தோம். எங்களுக்குள் மட்டும் இருந்த இந்தக் கொசு வெடிக் குறும்பை நான் மட்டும் இங்கே சொல்லி விட்டேன்.... இப்போது, ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகி விட்ட எனக்கு வெடியைப் பற்றிய பயமே கிடையாது. இருந்தாலும், இப்போ புதுசா ஒரு பயம் வந்திருக்கு...அது, நம்ம வேலைக்கு எவனாவது வெடி வைத்துவிடக் கூடாதுங்கறதுதான். என்னங்க நான் சொல்றது சரிதானே? -என்.செல்வராம், திருவில்லிபுத்தூர்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.