|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
குட்டிக்கதை-108 மரியாதை ராமன் தீர்ப்பு
ஓர் ஊரில் இரண்டு ஆயர்குல மாதர்கள் இருந்தனர்.
அவர்கள் இருவர் வீடும் எதிரெதிரே அமைந்திருந்தன. ஒருத்தி பெயர் யசோதை. மற்றவள்
பெயர் துர்கா.
ஒரு நாள் யசோதை வீட்டிற்கு விருந்தினர் ஏராளமாக
வந்து விட்டனர். அவர்களுக்கு விருந்து வைக்கப் பலகாரங்கள் செய்வதற்குப் போதுமான
அளவு நெய் அவளிடம் இல்லை. ஆகையால் எதிர் வீட்டு துர்காவிடம் சென்று ஒருபடி நெய்
கடனாகப் பெற்றுக் கொண்டாள். வெகு நாட்களாகியும் யசோதை துர்காவிடம் வாங்கிய
நெய்யைத் திருப்பிக் கொடுப்பதாகத் தெரியவில்லை. அதற்கு யசோதை உன்னிடம் நான் எப்போது நெய் வாங்கினேன்? என்று கேட்டாள். இதைச் சற்றும் எதிர் பாராத துர்க்கா அதிர்ச்சியுற்றாள். அவள் நெய் போனாலும் பரவாயில்லை இந்த துரோகத்தை நான் வெளிப்படுத்தாமல் விடமாட்டேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, மரியாதை ராமனிடம் சென்று முறையிட்டாள்.
இந்த வழக்கைக் கேட்ட மரியாதை ராமன் இருவரின்
நடவடிக்கைகளையும் கொஞ்சம் நோட்டம் போட வேண்டும் என்பதற்காக ஒரு காரியம் செய்தான்.
ஓர் ஆழம் இல்லாத பள்ளம் வெட்டி அதில் சேரும் சகதியும் உண்டாக்கச் செய்தார் அவர்.
பின் இரண்டு கிளிஞ்சல்களும், இரண்டு செம்புகள் நிறைய தண்ணீரும் பள்ளத்துக்கு
அருகில் வைக்கச் செய்தார்.
அதன் பின் துர்காவிடம் கடனாக வாங்கிய நெய்யைக்
கொடுக்க யசோதைக்கு அவர் உத்தரவிட்டார்.
|
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.