........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குட்டிக்கதை-68

பணம் யாருக்குச் சொந்தமானது?

ஆட்சி செய்வது என்பது ஆடம்பரமாகவும், அதிகாரமாகவும் வாழ்வதற்கு அல்ல. மக்களுக்குச் சேவை செய்வதற்காகவே. கருவூலத்தில் உள்ள செல்வம் அரசர்களுடையதல்ல. கடவுளுக்குச் சொந்தமானது. எளிமையாக வாழ்வதே அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் கடமை." என்கிற இசுலாமியக் கொள்கைகளுள் ஒன்று.

இசுலாம் மதத்தைச் சேர்ந்த ஆட்சியாளரான உமர் இசுலாமியக் கொள்கைகளை அப்படியே கடைப்பிடித்து வந்தார்.

ஒருநாள் அவர் அணிந்திருந்த மேலாடை பல இடங்களில் கிழிந்திருந்தது.

அவர்மீது அன்பு கொண்ட தையல்காரன் இதைப் பார்த்து புதிய மேலாடை ஒன்றை அவரிடம் தந்தான்.

அதைப் பெற்றுக் கொள்ள அன்புடன் மறுத்தார் அவர்.

அந்த கிழிந்துபோன மேலாடையை ஊசி கொண்டு தைத்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த நண்பர் ஒருவர், "கிழிந்து போன மேலாடையை மீண்டும் மீண்டும் தைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அன்று தையல்காரன் கொடுத்த புதிய ஆடையையும் வாங்க மறுத்து விட்டீர்கள். புதிய ஆடையை விலை கொடுத்து வாங்கவும் மறுக்கிறீர்கள். உங்களுக்கு கருவூலத்தில் என்ன பணம் பற்றாக்குறையா? எடுத்துச் செலவிட வேண்டியதுதானே?" என்றார்.

அதற்கு உமர், " கருவூலத்தில் இருக்கும் பணக்குவியல் என்னுடையது அல்ல. அது மக்களுக்காக அல்லா வழங்கியது. அதிலிருந்து எடுக்கப்படும் பணத்திற்கு நாந்தான் கணக்கு கொடுக்க வேண்டும்" என்றார்.

இன்று ஆட்சியிலிருப்பவர்கள் யாராவது இப்படியிருக்கிறார்களா?

 

முந்தைய குட்டிக்கதைகள் காண

 

 

                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.