........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குட்டிக்கதை-71

சொர்க்கம் யாருக்கு?

அடர்ந்த காட்டு வழியே நாரதர் போய்க் கொண்டிருந்தார்.

வழியில் தன் உடம்பைச் சுற்றி புற்று வளரும் அளவுக்கு நீண்ட நாட்கள் தவத்தில் ஈடுபட்டிருந்த ஒரு துறவி கண் விழித்து வணங்கினார்.

"ஐயனே தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?" என்று கேட்டார்.

"நாராயணனைப் பார்க்க வைகுண்டம் போகிறேன்" என்றார் நாரதர்.

"எனக்கு எப்போது மோட்சம் கிடைக்கும் என்று கடவுளிடம் கேட்டு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார் துறவி.

சிறிது தூரம் சென்றதும் விற்கு வெட்டி ஒருவனைச் சந்தித்தார் நாரதர்.

அவனும் நாரதரிடம் இதே வேண்டுகோளை வைத்தான். நாரதரிடம் கடவுளிடம் கேட்டு வருவதாக உறுதியளித்தார்.

வைகுண்டத்திலிருந்து நாரதர் திரும்பும் போது துறவியும், விற்கு வெட்டியும் ஆவலோடு ஒரே இடத்தில் எதிர் கொண்டனர்.

விறகுவெட்டியைப் பின்னால் தள்ளிவிட்டு வந்த துறவி, "கடவுள் என்ன சொன்னார்?" என்று கேட்டார்.

"ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் போது உமக்கு மோட்சம் கிடைக்கும்" என்று சொல்லச் சொன்னார் என்றார்.

துறவி வெறித்துப் போனார், "ஊசியின் காதில் எப்படி ஒட்டகம் நுழையும். இத்தனை நாள் நான் செய்த தவமெல்லாம் வீணாகி விட்டதே" என்று புலம்ப ஆரம்பித்தார்.

"விறகுவெட்டியோ கடவுளின் சக்தி மகத்தானது" என்றான்.

அப்போது அசரீரி வடிவில் கடவுள் பேசினார். "துறவியே நீ எத்தனை தவம் செய்தாலும் என் மீது நம்பிக்கை வைக்கவில்லை ஆனால் அந்த விறகு வெட்டி கடவுளை வழிபடுவது எப்படி என்று தெரியாவிட்டாலும் என்னை நம்புகிறான். நம்புகிறவர்களுக்கு நான் வழிகாட்டுவேன்!" 

 

முந்தைய குட்டிக்கதைகள் காண

 

 

                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.