|
குட்டிக்கதை-91
உண்மையான விசுவாசத்திற்கு மதிப்பு.

பரிசேயர்களில் ஒருவன் தன்னோடு உண்ணுமாறு இயேசுவை
அழைத்தான். அப்போது நகரத்தில் பாவியான பெண்ணொருத்தி இருந்தாள். பரிசேயனின்
வீட்டில் இயேசு உணவு உண்பதை அவள் அறிந்திருந்தாள். எனவே அலங்கரிக்கப்பட்ட ஜாடி
ஒன்றில் நறுமணத் தைலத்தை அவள் கொண்டு வந்தாள்.
அவள் இயேசுவின் பாதத்தருகே அழுது கொண்டெ நின்றாள். அவளது கண்ணீரால் இயேசுவின்
பாதங்களைக் கழுவ ஆரம்பித்தாள். அவளது தலைமயிரால் இயேசுவின் பாதங்களைத் துடைத்து
உலர வைத்தாள். அவரது பாதங்களைப் பலமுறை முத்தமிட்டு நறுமணத் தைலத்தைப்
பாதங்களில் பூசினாள்.
தனது வீட்டுக்கு இயேசுவை அழைத்த பரிசேயன் இதைக் கண்டான். அவன் தனக்குள்,
“உண்மையாகவே இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் தன்னைத் தொடுகிற பெண் ஒரு பாவி
என்று அறிந்திருப்பார்” என்று நினைத்தான்.
இயேசு பரியேசனை நோக்கி, “சீமானே! நான் உனக்கு சிலவற்றைக் கூற வேண்டும். இரண்டு
மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஒரே மனிதனிடம் கடன் வாங்கினர். ஒருவன்
ஐநூறு வெள்ளிப் பணம் கடன் வாங்கியிருந்தான். மற்றொருவன் ஐம்பது வெள்ளிப்பணம்
கடனாக வாங்கியிருந்தான். பணம் இல்லாததால் இருவராலும் கடனை அடைக்க முடியாமற்
போயிற்று. கடன் கொடுத்த மனிதன் இருவரிடமும் அவர்களுடைய கடனைத் தள்ளுபடி
செய்துவிட்டதாக கூறினான். இப்போது கடன் பெற்றிருந்த இருவரில் கடன் கொடுத்த
மனிதனை நேசிப்பார்கள்.” என்று கேட்டார்.
சீமான், “அந்த மனிதனிடம் அதிக அளவு பணம் பெற்றிருந்த மனிதன் அதிக நேசம்
கொண்டவராக இருப்பான்.” என்று பதில் கூறினான்.
இயேசு சீமானை நோக்கி, “நீ கூறியது சரியே” என்றார்.
பின்பு அப்பெண்ணைச் சுட்டிக்காட்டி, “நான் உன்னுடைய வீட்டுக்கு வந்த பொழுது என்
பாதங்களைக் கழுவுவதற்கு நீ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவளோ தன் கண்ணீரால் என்
பாதங்களைக் கழுவி தன் தலை மயிரால் என் பாதங்களைத் துடைத்து உலர்த்தினாள்.
அவளுடைய கணக்கற்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என்பதை நான் உனக்குச்
சொல்கிறேன். அவள் காட்டிய மிகுந்த அன்பே இதைத் தெளிவாக்குகிறது” என்றார்.
பின்பு இயேசு அவளை நோக்கி, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. நீ விசுவாசித்தால்
பாவங்களினின்று விடுதலையடைந்தாய். நிம்மதியோடு போ” என்றார்.
முந்தைய குட்டிக்கதைகள் காண

|