|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
மகளிர் மட்டும்- தையல் பயிற்சிக் கட்டுரை- பகுதி-3
தையல் கற்றுக் கொள்ளுங்கள் -ஆர்.எஸ்.பாலகுமார்.
3.தைக்கக் கற்றுக் கொள்ளுங்கள் 3.1. குர்தா (Kurtha) அனைத்து வயது தரப்பு மகளிராலும் விரும்பி உடுத்தப்படுகின்ற மார்பு உடை வகைப் பிரிவைச் சேர்ந்ததாக உள்ள உடைகளில் ஒன்று இந்த குர்தா. இதன் அமைப்பானது உடலோடு கச்சிதமாகப் பிடித்தவாறு தோற்றத்தில் வடிவமைக்கப்படுகிறது. பக்கவாட்டினில் நீண்ட திறப்பினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அரைக்கை, முக்கால்கை, முழுநீளக்கை என்று விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து வடிவமைத்துக் கொள்ளலாம்.
உகந்த துணி ரகங்கள் பாப்ளின், கிரேப், சில்க், காட்டன் மற்றும் லினன் வகைத் துணிகள் தேவையான துணி அளவு 2.50 மீட்டர் (துணி அகலம் 42 இஞ்ச் முதல் 44 இஞ்ச் வரை) உடையின் பாகங்கள் முன் பாகம், பின் பாகம், கை பாகம் அளவுகள் * முழு நீளம் - 42 இஞ்ச் * பின் முதுகுவரை நீளம் - 15 இஞ்ச் * மார்பகச் சுற்றளவு - 36 இஞ்ச் * இடுப்புச் சுற்றளவு - 30 இஞ்ச் * புட்டம் - 40 இஞ்ச் * தோள்பாக அகலம் - 15 இஞ்ச் * கை நீளம் - 8இஞ்ச் * முன்கைச் சுற்றளவு - 12 இஞ்ச் * முன் கழுத்துச் சுற்றளவு - 7 இஞ்ச்
முன்பாகம் வரைபட விளக்கம்- முன்பாகம்
கை வடிவமைப்பு வரைபட விளக்கம்- கை வடிவமைப்பு
(பின் கை வடிவத்தோடு முன் கை வடிவமானது ஒப்பிடும் போது 3/4 இஞ்ச் உள்புறமாக வளைவு வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (படம் பார்க்க) தையல் தைக்க மேற்கண்ட அளவுகளைக் கொண்டு துணியை வெட்டித் தைத்து குர்தா (Kurtha) வை பயன்படுத்திக் கொள்ளலாம். (தொடரும்)
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.