|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
மருத்துவம்-1
தொழு நோய்...
தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான
கண்ணுக்குத் தெரியாத கிருமியால் உண்டாகிறது. இதை 1873-ல் டாக்டர் ஹேன்ஸன்
என்பவர் கண்டுபிடித்தார்.
உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குறைந்த , வெளிர்ந்த அல்லது
சிவந்த தேமல்... அந்தத் தேமல் மீது முடி உதிர்ந்து காணப்படுதல்
கை,கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு
இருத்தல்.
தோல் தடித்தும் , எண்ணெய் பூசியது போன்ற தோற்றம்
உடலிலே ஏதாவது ஒரு பகுதியில் வியர்வை இல்லாமல் இருத்தல்.
அதே சமயம் உடலின் மற்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வியர்த்தல்
காது மடல் தடித்திருத்தல்... கண் புருவமுடி உதிர்தல்
கன்னங்கள் தொங்குவது போன்ற நிலை.
சிங்க முகம் போன்ற தோற்றம் ( இது தற்போது சாதாரணமாகக்
காணப்படுவதில்லை)
பாதங்களில் சாம்பல் பூசியது போல் காணப்படுதல் , பாதங்களில்
பெரிய வெடிப்பு இருத்தல்
உள்ளங்கை சதை மேடுகள் சூம்பியிருத்தல்
கை, கால் விரல்கள் மடங்கியிருத்தல் , குறைந்திருத்தல்,
விரல்கள் திரும்பியிருத்தல்
கண்ணிமை மூட முடியாமலிருத்தல், கருவிழியிலே புண் இருத்தல்
முகத்தின் பாதி பாகம் (வலது அல்லது இடது) செயல் இழத்தல்
மணிக்கட்டு தொங்கி விடுதல்
கணுக்கால் செயலிழந்து போதல்
ஆறாத, உணர்ச்சியற்ற நீண்டநாள் புண்
சட்டையில் பொத்தான் போட முடியாமை , பேனாவைப் பிடித்து
எழுத இயலாமை.
தொழுநோய் என உறுதி செய்ய
கீழ்க்கண்ட மூன்று அறிகுறிகளில் ஏதேனும் இரண்டைத்
திட்டவட்டமாகக் கூற முடியுமானால் அதைத் தொழுநோய் என்று உறுதி செய்யலாம்.
தோல் உணர்ச்சியின்மையைக் கண்டுபிடிக்க...
தொடு உணர்ச்சியை இறகு, பஞ்சு, நைலான் கயிறு போன்றவற்றின் மூலம் அறியலாம்.
வலி உணர்ச்சியை குண்டூசி ,பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றால் அறியலாம்.
பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி இவற்றில் பரிசோதனைகள் செய்து
இவ்விரண்டு பகுதிகளில் ஏற்படுகிற தொடு உனர்வு , வலியுணர்வு மாறுதல்களை
வைத்து அறியலாம்.
தொழுநோய் என்ற சந்தேகம் வந்து விட்டால் உடனடியாக
அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி அதற்கான சிகிச்சையைப் பெற்று விட
வேண்டும்.
நன்றி :- தமிழக அரசு வெளியிட்ட தொழுநோய்க்கான
சுகாதாரப் பணியாளர்கள் கையேடு
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.