........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

a

 

முத்துக்கமலத்தில்
அகரம் அமுதா படைப்புகள்

(அகரம் அமுதா குறித்து அகரம் அமுதா எழுதிய கவிதை கீழே...)

சங்கத் தமிழனைத்தும் தா! -கவிதை

அவள் என் மனைவி? -கவிதை

ஒருவருக்குமில்லை துணிவு! -கவிதை

தீபம் -கவிதை

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! -கவிதை

இறகுப்பந்துவிடு தூது! -கவிதை

துய்த்ததைச் சொன்னேன் துணிந்து! -கவிதை

பூங்கா! -கவிதை

உய்யும் தமிழினமென்(று) ஓர்! -கவிதை

தமிழ் எங்கள் தமிழ்! -கவிதை

தனியீழம் தழைக்கச் செய்வோம்! -கவிதை

மடயர்க்குப் பாடம் சொல்வாய்!  -கவிதை

வேண்டாம் இந்த ப(பு)கை! -கவிதை

அகரம் அமுதா குறித்து அகரம் அமுதா எழுதிய கவிதை

நான்

கற்றும் தெளியாமல் கற்றோர்பின் போகாமல்
நற்றமிழ்ப் பாப்புனையும் நாட்டமுற்றேன் -சற்றே
கருத்தவுடல்; நேர்வழியில் சிந்தனைகள்; காளைப்
பருவமியற் பேர்சுதா கர்!

ஊர்

கெடுப்பதற் கோர்கூட்டம்; கெட்டாரைச் சார்ந்து
கொடுப்பதற் கோர்கூட்டம் என்றே -குடிசை
மிகக்கொண்ட குக்கிராம மேநான் பிறந்த
‘அகரம்சீ கூர்’என்ப தாம்!

தாய்

சோறெனக்(கு) ஊட்டிப் பசிபொறுப்பாள்; தூங்கையிலும்
ஊறெனக் கென்றால் உயிர்துடிப்பாள்; -கூறுலகில்
பூமியி னும்பொறுமை போற்றிடுவாள்; என்றனுக்குச்
சாமியவள் பேர்‘அஞ் சலம்’!

தந்தை

கற்கழனி போந்து கடிதுழைத்துச் சேறடித்து
நெற்கழனி யாக்கிவிடும் நேர்த்தியினார் -சொற்கழனி
நானுழ வேண்டியென்னை நட்டார்பேர் ‘முத்துசாமி’
ஊனெடுத்த தேவன் உரு!

பெயர்க்காரணம்

தாய்தந்தைப் பேர்முன் எழுத்துமென் பேரிடை
வாய்த்த நெடிலுமே யாம்அமுதா -ஆய்ந்ததன்முன்
தொக்கியே நிற்பதெல்லாம் தோன்றியஊர்ப் பேர்பாதி
அக்கறையாய்ச் சேர்த்த தறி!

மேலும் சில படைப்பாளர்கள்

 

 
 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.